அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் - வினா விடைகள்

1. 'நல்ல' என்ற அடைமொழியோடு குறிக்கப் பெறும் நூல்
A. நற்றினை
B. குறுந்தொகை
C. ஐங்குறுநூறு
D. அகநானூறு
Answer
B. குறுந்தொகை
2. பத்துப் பருவங்களை குறிக்கும் நூல்
A. எட்டுத்தொகை
B. பிள்ளைத்தமிழ்
C. பத்துப்பாட்டு
D. ஐம்பெருங்காப்பியங்கள்
Answer
B. பிள்ளைத்தமிழ்
3. 'நல்' என்ற அடைமொழியோடு குறிக்கப்பெறும் நூல்
A. நற்றினை
B. கலித்தொகை
C. பரிபாடல்
D. ஐங்குறுநூறு
Answer
A. நற்றினை
4. குட்டித்தொல்காப்பியம் எனப்படுவது எது?
A. நன்னூல்
B. நேமிநாதம்
C. தொன்னூல் விளக்கம்
D. இலக்கண விளக்கம்
Answer
D. இலக்கண விளக்கம்
5. இதிகாசம் என்று போற்றப்படும் நூல்
A. பெரியபுராணம்
B. மகாபாரதம்
C. கந்தபுராணம்
D. திருவிளையாடற்புராணம்
Answer
B. மகாபாரதம்
6. "வாக்குண்டு" எனப்படும் நூல்
A. திருக்குறள்
B. பழமொழி
C. மூதுரை
D. நாலடியார்
Answer
C. மூதுரை
7. "ஈரடி வெண்பா" என்று போற்றப்படும் நூல்
A. பழமொழி
B. உலா
C. திருக்குறள்
D. சீட்டுக்கவி
Answer
C. திருக்குறள்
8. இராமாயணத்திற்கு கம்பர் இட்ட வேறு பெயர்
A. இராமாவதாரம்
B. வால்மீகி இராமாயணம்
C. கம்பராமாயணம்
D. இராமகாதை
Answer
A. இராமாவதாரம்
9. "அறுபத்து மூவர் புராணம்" என்று கூறப்படும் நூல்
A. சீவகசிந்தாமணி
B. திருவிளையாடற்புராணம்
C. பெரியபுராணம்
D. சீறாப்புராணம்
Answer
C. பெரியபுராணம்
10. "புறப்பாட்டு" என்று கூறப்படும் நூல்
A. பழமொழி
B. தேம்பாவணி
C. திருக்குறள்
D. புறநானூறு
Answer
D. புறநானூறு
11. "வான்மறை" என போற்றப்படும் நூல்
A. குறுந்தொகை
B. அகநானூறு
C. திருக்குறள்
D. நாலடியார்
Answer
C. திருக்குறள்
12. "குட்டித்திருவாசகம்" என போற்றப்படும் நூல்
A. திருக்கயிலாய ஞான உலா
B. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
C. திருமுருகாற்றுப் படை
D. திருத்தொண்டர் புராணம்
Answer
A. திருக்கயிலாய ஞான உலா
13. "குட்டித் திருக்குறள்" எனப் போற்றப்படும் நூல்
A. நாலடியார்
B. பழமொழி
C. முதுமொழிக் காஞ்சி
D. கார் நாற்பது
Answer
B. பழமொழி
14. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட நூல்
A. கம்பராமாயணம்
B. திருவாசகம்
C. பெரியபுராணம்
D. திருவருட்பா
Answer
C. பெரியபுராணம்
15. "வஞ்சி நெடும் பாட்டு" என்று சிறப்பிக்கப்படும் நூல்
A. குறிஞ்சிப்பாட்டு
B. முல்லைப்பாட்டு
C. பட்டினப்பாலை
D. மலைபடுகடாம்
Answer
C. பட்டினப்பாலை
16. "இயற்கை அன்பு" எனப் போற்றப்படும் நூல்
A. திருக்குறள்
B. பெரியபுராணம்
C. திருவாசகம்
D. தேவாரம்
Answer
D. தேவாரம்
17. "வேளாண் வேதம்" என்று போற்றப்படும் நூல்
A. திருக்குறள்
B. நாலடியார்
C. ஏலாதி
D. சிறுபஞ்சமூலம்
Answer
B. நாலடியார்
18. "தமிழர் கலைக்களஞ்சியம்" என்று சிறப்பு பெயர் பெற்ற நூல்
A. சிலப்பதிகாரம்
B. திருக்குறள்
C. மணிமேகலை
D. சீவகசிந்தாமணி
Answer
A. சிலப்பதிகாரம்
19. "வீரயுகப் பாடல்கள்" என்ற சிறப்புக்குரிய நூல்
A. அகநானூறு
B. புறநானூறு
C. ஐங்குறுநூறு
D. குறுந்தொகை
Answer
B. புறநானூறு
20. "திருத்தொண்டர் மாக்கதை" என்று அழைக்கப்படும் நூல்
A. பெரியபுராணம்
B. பெருங்கதை
C. திருவிளையாடற் புராணம்
D. சிவஞான பேதம்
Answer
A. பெரியபுராணம்
21. "தெய்வீக உலா" என்று சிறப்பிக்கப்படும் நூல்
A. திருக்கைலாய ஞான உலா
B. மூவருலா
C. மதுரைச் சொக்கநாதருலா
D. திருவாரூர் உலா
Answer
A. திருக்கைலாய ஞான உலா
22. "சங்கத்தொகை நூல்கள்" எனப்பட்டவை
A. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
B. சிலப்பதிகாரம், மணிமேகலை
C. பெரியபுராணம், சீவக சிந்தாமணி
D. தொல்காப்பியம், நன்னூல்
Answer
A. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
23. "பௌத்த காப்பியங்கள்" என்று அழைக்கப்படுபவை
A. சிலப்பதிகாரம், மணிமேகலை
B. மணிமேகலை, சீவகசிந்தாமணி
C. மணிமேகலை, குண்டலகேசி
D. மணிமேகலை, வளையாபதி
Answer
C. மணிமேகலை, குண்டலகேசி
24. "தமிழ் மொழியின் உபநிடதம்" என போற்றப்படுவது?
A. திருக்குறள்
B. தேவாரம்
C. திவ்வியப் பிரபந்தம்
D. தாயுமானவரின் பாடல்கள்
Answer
D. தாயுமானவரின் பாடல்கள்
25. "தமிழுக்குக் கதி" எனப்டும் நூல்கள்
A. திருக்குறள், நாலடியார்
B. தேவாரம், திருவாசகம்
C. சிலப்பதிகாரம், மணிமேகலை
D. திருப்பாவை, திருவெம்பாவை
Answer
A. திருக்குறள், நாலடியார்
26. "நரம்பின் மறை" என்று இசையைப் பற்றி குறிப்பிடும் நூல்
A. நன்னூல்
B. தேவாரம்
C. தொல்காப்பியம்
D. திருவாசகம்
Answer
C. தொல்காப்பியம்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்