புவியியல் வினா விடைகள்

1. இயற்க்கை ரப்பர் உற்பத்தியில் முன்னணி வகிப்பது
A. தென் அமெரிக்கா
B. தென்கிழக்கு ஆசியா
C. மத்திய ஆப்ரிக்கா
D. மத்திய தரைக்கடல் பகுதி
Answer
B. தென்கிழக்கு ஆசியா
2. இந்தியப் பகுதியில் உள்ள இரண்டு எரிமலைத் தீவுகள்?
A. கவரத்தி மற்றும் நியூமூர்
B. பிட்ரா மற்றும் கவரத்தி
C. பாம்பன் மற்றும் பேரன்
D. நார்கொண்டம் மற்றும் பேரன்
Answer
D. நார்கொண்டம் மற்றும் பேரன்
3. குஜராத் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் நேரங்களை கணக்கிடுவதில் உள்ள விதிகளின் படி கணக்கிட்டால், கிட்டத்தட்ட சரியாக உள்ள நேரம் எவ்வாறு இருக்கும்?
A. குஜராத்தில் உள்ள நேரம் 3 மணி நேர அளவில் அருணாச்சலப்பிரதேசத்தை விட முன்னதாக இருக்கும்
B. குஜராத்தில் உள்ள நேரம் 2 மணி நேர அளவில் அருணாச்சலப்பிரதேசத்தை விட முன்னதாக இருக்கும்
C. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள நேரம் 3 மணி நேர அளவில் குஜராத்தை விட முன்னதாக இருக்கும்
D. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள நேரம் 2 மணி நேர அளவில் குஜராத்தை விட முன்னதாக இருக்கும்
Answer
D. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள நேரம் 2 மணி நேர அளவில் குஜராத்தை விட முன்னதாக இருக்கும்
4. மியான்மருடன் பொது எல்லையைக் கொண்டுள்ள இந்திய மாநிலங்கள்?
A. மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம்
B. மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம்
C. மிசோரம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா
D. அசாம், மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம்
Answer
A. மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம்
5. மாநில மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மக்கள்தொகை அதிக சதவீதத்தை கொண்டுள்ள மாநிலம், கீழ்க்கண்டவற்றில் எது?
A. ஜார்க்கண்ட்
B. மத்தியபிரதேசம்
C. பஞ்சாப்
D. உத்திரப்பிரதேசம்
Answer
D. பஞ்சாப்
6. ஹெலி வால்நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுகிறது?
A. 24 ஆண்டுகள்
B. 32 ஆண்டுகள்
C. 76 ஆண்டுகள்
D. 84 ஆண்டுகள்
Answer
C. 76 ஆண்டுகள்
7. கோள்களின் இயக்க விதிகளை கீழ்க்கண்டவர்களில் யார் கண்டுபிடித்துள்ளார்?
A. கலிலியோ கலிலி
B. நிகோலஸ் கோபர்நிக்கஸ்
C. ஜோகன்னஸ் கெப்ளர்
D. ஐசக் நியூட்டன்
Answer
C. ஜோகன்னஸ் கெப்ளர்
8. டிசம்பர் 22 அன்று எந்த ஊரில் பகல் அதிகமாகவும் இரவு குறைவாகவும் உள்ளது?
A. சென்னை
B. மேட்ரிட்
C. மெல்போர்ன்
D. மாஸ்கோ
Answer
C. மெல்போர்ன்
9. பூமியின் மொத்த கன அளவில் எந்த அடுக்கு முக்கிய பகுதியாக உள்ளது?
A. சியால்
B. சிமா
C. புவியின் இடைப்பகுதி (மேன்ட்டில்)
D. புவியின் கருவம்
Answer
C. புவியின் இடைப்பகுதி (மேன்ட்டில்)
10. வடதுருவத்தில் சூரியனின் கதிர்கள் அதிக அளவு விரிகதிர் கோணமாக என்று பதிவாகிறது?
A. மார்ச் 21
B. செப்டம்பர் 21
C. கடகரேகையில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் போது
D. மகரரேகையில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் போது
Answer
C. கடகரேகையில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் போது
11. மத்திய மற்றும் தென்இந்தியாவின் பழங்குடியினர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்?
A. புரோட்டோ – ஆஸ்ட்ராய்டுகள்
B. நீக்ரிட்டோக்கள்
C. மங்கோலாய்டுகள்
D. பிராச்சிசெப்பல்கள்
Answer
A. புரோட்டோ – ஆஸ்ட்ராய்டுகள்
12. கீழ்க்கண்ட நகரங்களில் எது கிழக்கில் அமைந்துள்ளது
A. கோஹிமா
B. ஜோர்ஹட்
C. இடாநகர்
D. திப்ருகர்
Answer
D. திப்ருகர்
13. இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம்
A. சிக்கிம்
B. அருணாச்சலப்பிரதேசம்
C. கோவா
D. மேகாலயா
Answer
A. சிக்கிம்
14. மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?
A. தமிழ்நாடு
B. ஒடிசா
C. அசாம்
D. மேற்கு வங்காளம்
Answer
B. ஒடிசா
15. கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களில் வங்காளதேச நாட்டுடன் போது சர்வதேச எல்லையைக் கொண்டிராத மாநிலம்?
A. மணிப்பூர்
B. மேற்கு வங்காளம்
C. திரிபுரா
D. அசாம்
Answer
A. மணிப்பூர்
16. என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கிறது
A. கன்னியாகுமரி – டெல்லி
B. கன்னியாகுமரி – சேலம்
C. சென்னை – திண்டுக்கல்
D. மும்பை – டெல்லி
Answer
B. கன்னியாகுமரி – சேலம்
17. கீழ்க்கண்ட எந்த மாநிலம் மற்ற மாநில எல்லைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ளது?
A. மேற்கு வங்காளம்
B. மத்தியபிரதேசம்
C. உத்திரப்பிரதேசம்
D. கர்நாடகா
Answer
C. உத்திரப்பிரதேசம்
18. கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடபடுகிறது?
A. பெல்லாரி
B. மாண்டியா
C. மைசூர்
D. தார்வார்
Answer
B. மாண்டியா
19. கர்நாடகாவிற்கும் ஆந்திரப்பிரதேசத்திக்கும் இடையேயான சர்ச்சை தொடர்பானது
A. பக்ரா அணைக்கட்டு
B. ஹிராகுட் அணைக்கட்டு
C. ரிஷாண்ட் அணைக்கட்டு
D. அலமாட்டி அணைக்கட்டு
Answer
D. அலமாட்டி அணைக்கட்டு
20. பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம்
A. 365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
B. 366 நாட்கள் 3 மணிகள் 50 நிமிடங்கள் 50 வினாடிகள்
C. 366 நாட்கள் 0 மணிகள் 0 நிமிடங்கள் 0 வினாடிகள்
D. 366 நாட்கள் 5 மணிகள் 50 நிமிடங்கள் 45 வினாடிகள்
Answer
A. 365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
21. சரியாக பொருந்தாத இணையைக் கண்டுபிடிக்க
A. ஓசூர் – ரோஜா மலர்கள்
B. அரியலூர் – சிமெண்ட்
C. திருப்பூர் – பின்னலாடைகள்
D. பெரம்பூர் – உரத் தொழிற்ச்சாலை
Answer
D. பெரம்பூர் – உரத் தொழிற்ச்சாலை
22. விச்வேஸ்வரையா இரும்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
A. பர்னபூர்
B. பத்ராவதி
C. ரூர்க்கேலா
D. ஜாம்ஷெட்பூர்
Answer
B. பத்ராவதி
23. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாக பொருந்தியுள்ளது
A. ஹிராகுட் – அணுமின்சக்தி
B. கேத்ரி – மாங்கனீஸ்
C. பாலகாட் – இரும்புத்தாது
D. அங்கலேஷ்வர் – எண்ணைக்கிணறு
Answer
D. அங்கலேஷ்வர் – எண்ணைக்கிணறு
24. “கோணிபெரா” என்பதால் குறிப்பிடப்படுவது
A. சிறுகிளைகளுடன் கூடிய மரங்கள்
B. ஆப்ரிக்காவிலுள்ள ஒரு காடு
C. நச்சுத் தன்மையுள்ள ஒரு செடி
D. விலங்குகள் பற்றிய இயல்
Answer
A. சிறுகிளைகளுடன் கூடிய மரங்கள்
25. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான எண்ணிக்கையில் பருத்தி நெசவுத் தொழிற்சாலைகள் உள்ளன?
A. மகாராஷ்டிரா
B. குஜராத்
C. தமிழ்நாடு
D. மத்தியபிரதேசம்
Answer
C. தமிழ்நாடு
26. இந்தியாவின் கிராமப்புறங்களில் ஏறக்குறைய ___ விழுக்காடு மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்பிற்கு நேராகவோ அல்லது எதிர்மறையாகவோ வேளாண்மையைச் சார்ந்துள்ளனர்
A. 70%
B. 80%
C. 10%
D. 25%
Answer
B. 80%
27. கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?
A. நில நடுக்கத்தை உணரும் கருவி சீஸ்மோகிராப்
B. புவி உள்ளமைப்புப் பற்றிய கோட்பட்டை முதலில் உருவாக்கியவர் ஐசக் நியூட்டன்
C. பான்ஜியா என்ற சொல் ஒரு இலத்தீன் சொல்லாகும்
D. லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்ற கருவியின் மூலம் பெரு வெடிப்புக் கொள்கை பரிசோதனை செய்யப்பட்டது
Answer
C. பான்ஜியா என்ற சொல் ஒரு இலத்தீன் சொல்லாகும்
28. நடுவில் ஒரு ஏரியை உடைய பவளத் தீவு ______ என அழைக்கப்படுகிறது
A. அடோல்
B. கொரல்லைட்டு
C. லாகூன்
D. பவளப்பாறை வரிசை
Answer
A. அடோல்
29. இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை இயல் மாற்றத்தைக் குறிப்பது எது?
A. அதிக மக்கள்தொகை வளர்ச்சி நிகழ்ந்த நிலை, ஆனால் குறைவான உண்மையான வளர்ச்சி
B. அதிக மக்கள்தொகை வளர்ச்சி நிகழ்ந்த நிலை மற்றும் அதிக உண்மையான வளர்ச்சி
C. பகுதி தொழில் ரீதியான பொருளாதாரம்
D. நகரமயமாதல் அதிகரித்துள்ளதன் அடையாளம்
Answer
D. நகரமயமாதல் அதிகரித்துள்ளதன் அடையாளம்
30. கீழ்க்கண்ட தொகுப்புகளில் எவற்றில் துறைமுகங்களும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் உள்ளன?
A. கொல்கத்தா, கொல்லம், சென்னை மற்றும் காண்ட்லா
B. விசாகப்பட்டினம், கொச்சின், சென்னை மற்றும் மும்பை
C. மர்மகோவா, கள்ளிக்கோட்டை, விசாகப்பட்டினம் மற்றும் ஹால்டியா
D. கொச்சின், ஹால்டியா, கட்டாக் மற்றும் மும்பை
Answer
B. விசாகப்பட்டினம், கொச்சின், சென்னை மற்றும் மும்பை
31. முதன் முதலில் சணல் நெசவு ஆலை தொடங்கப்பட்ட இடம் எது?
A. பரணகூர்
B. ரிஷ்ரா
C. சிட்டகாங்
D. கல்கத்தா
Answer
B. ரிஷ்ரா
32. உலகம் வெப்பமயமாதலினால் ஏற்படுவது
A. பனியாற்றிலுள்ள பனிக்கட்டிகள் வெப்பத்தினால் உருகி விடுகின்றன
B. வளிமண்டலம் சூடேறுகிறது
C. கடல் மட்டம் 10 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை உயர்ந்துள்ளது
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
33. பின்வரும் எந்த நதி மும்முறை இரண்டாக பிரிந்து ஓடியபின் ஒன்றிணைந்து ஸ்ரீரங்கப்பட்டினம், சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கம் என்னும் மூன்று தீவுகளை உருவாக்குகிறது?
A. துங்கபத்ரா
B. கிருஷ்ணா
C. காவிரி
D. கோதாவரி
Answer
C. காவிரி
34. தமிழகத்தின் அமைவிடம் கிழக்கே
A. 76° 15’ தீர்க்கத்திலிருந்து 80° 20’ தீர்க்கம் வரை
B. 80° 15’ தீர்க்கத்திலிருந்து 86° 15’ தீர்க்கம் வரை
C. 60° 15’ தீர்க்கத்திலிருந்து 67° 15’ தீர்க்கம் வரை
D. 86° 15’ தீர்க்கத்திலிருந்து 91° 15’ தீர்க்கம் வரை
Answer
A. A. 76° 15’ தீர்க்கத்திலிருந்து 80° 20’ தீர்க்கம் வரை
35. புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நுகர்வு ஏற்படுவது ___ நகர்வு என்று அழைக்கப்படுகிறது
A. எண்டோஜெனிக்
B. எபிரோஜெனிக்
C. மையம்
D. நிலநடுக்க மையம்
Answer
B. எபிரோஜெனிக்
36. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள்
A. பருவக்காற்றுகள்
B. நிலக்காற்றுகள்
C. கோள்காற்றுகள்
D. கடல்காற்றுகள்
Answer
C. கோள்காற்றுகள்
37. நிலநடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள கண்டம்
A. தென் அமெரிக்கா
B. ஆப்ரிக்கா
C. அண்டார்டிக்கா
D. ஐரோப்பா
Answer
B. ஆப்ரிக்கா
38. இந்தியாவின் கடற்கரையின் நீளம் சுமார்
A. 5900 கி.மீ
B. 6100 கி.மீ
C. 7000 கி.மீ
D. 7600 கி.மீ
Answer
D. 7600 கி.மீ
39. பத்து டிகிரி கால்வாய் எதற்கு இடையில் உள்ளது?
A. டோவர் மற்றும் கலையிஸ்
B. அலாஸ்கா மற்றும் ரஷ்யா
C. சிறிய அந்தமான் மற்றும் கார் நிகோபார்
D. வாடா கொரியா மற்றும் தென்கொரியா
Answer
C. சிறிய அந்தமான் மற்றும் கார் நிகோபார்
40. சூரியக் குடும்பத்தில் காணப்படும் கீழ்க்கண்ட கோள்களில் எதில் சூரியன் மேற்கில் உதயமாகி கிழக்கில் மறைகிறது?
A. வெள்ளி
B. செவ்வாய்
C. வியாழன்
D. சனி
Answer
A. வெள்ளி
41. சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்
A. 1 வினாடி
B. 1.3 வினாடி
C. 2 வினாடி
D. 2.3 வினாடி
Answer
B. 1.3 வினாடி
42. ஆஸ்திரேலியாவில் குறைந்த பகல் என்று இருக்கும்?
A. ஜுன் 21
B. டிசம்பர் 22
C. செப்டம்பர் 23
D. மார்ச் 21
Answer
A. ஜுன் 21
43. ஜுன் 21 அன்று வடதுருவத்தில் சூரிய ஒளியை எவ்வளவு கால அளவு பார்க்க முடிகிறது?
A. பூஜ்ஜிய மணி நேரம்
B. 12 மணி நேரம்
C. 18 மணி நேரம்
D. 24 மணி நேரம்
Answer
D. 24 மணி நேரம்
44. கீழ்க்கண்ட எந்தெந்த இந்திய மாநிலங்களால் பூட்டான் சூழப்பட்டுள்ளது?
A. அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம்
B. அசாம் , மிசோரம், மேற்கு வங்காளம், பீகார்
C. அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார்
D. அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், பீகார், மேகாலயா
Answer
A. அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம்
45. டால்பின் மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்
A. பாரதீப்
B. காண்ட்லா
C. துத்துக்குடி
D. விசாகப்பட்டினம்
Answer
D. விசாகப்பட்டினம்
46. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகளில் பெரும்பாலானவை தோன்றும் இடம்
A. தென் கோளார்த்த கடல் பகுதி
B. அரபிக் கடல்
C. தென் மேற்கு வங்காள விரிகுடாக் கடல்
D. தென் கிழக்கு வங்காள விரிகுடாக் கடல்
Answer
C. தென் மேற்கு வங்காள விரிகுடாக் கடல்
47. கீழே கொடுக்கபட்டவற்றில் எதில் மக்கள் தொகை இறங்குமுகமாக உள்ள மாநிலங்கள் சரியாக வரிசைபடுத்தப்பட்டுள்ளது?
A. மத்தியப்பிரதேசம், பீகார், உத்திரப்பிரதேசம்
B. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்
C. உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா,
D. மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார்
Answer
C. உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா
48. இந்தியாவில் கீழ்காண்பவற்றுள் பருத்தி பயிரிடப்படும் முக்கியப் பரப்பு எது?
A. கங்கைச் சமவெளி
B. தக்காண பீடபூமி
C. தாமோதர் பள்ளத்தாக்கு
D. யமுனா பள்ளத்தாக்கு
Answer
B. தக்காண பீடபூமி
49. டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்குவரிசையில் வரிசைபடுத்துக.
A. K2 ஹிடன் – ராகபோசி – ஹார்மோஷ்
B. ஹிடன் – ராகபோசி – K2 – ஹார்மோஷ்
C. K2 – ராகபோசி – ஹிடன் – ஹார்மோஷ்
D. K2 – ஹிடன் – ஹார்மோஷ் – ராகபோசி
Answer
A. K2 ஹிடன் – ராகபோசி – ஹார்மோஷ்
50. பர்ன்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம் பெற்றவை
A. அலுமினியத் தொழிற்சாலை
B. இரும்பு எஃகு உருக்கு தொழிற்சாலை
C. நிலக்கரி வெட்டி எடுத்தல்
D. தாமிரம் வெட்டி எடுத்தல்
Answer
B. இரும்பு எஃகு உருக்கு தொழிற்சாலை
51. உலகியே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு?
A. அமெரிக்கா
B. பிரான்ஸ்
C. ரஷ்யா
D. ஜெர்மனி
Answer
A. அமெரிக்கா
52. எந்த மாநிலம் அதிக பரப்பளவில் தரிசு நிலத்தைக் கொண்டுள்ளது?
A. குஜராத்
B. மத்தியபிரதேசம்
C. ஜம்மு மற்றும் காஷ்மீர்
D. ராஜஸ்தான்
Answer
D. ராஜஸ்தான்
53. சந்திரன் மேல் உள்ள விண்வெளிப் பயணிக்கு சந்திரனின் வானம் பகல்நேரத்தில் எந்த நிறத்தில் தோற்றமளிக்கும்?
A. வெள்ளை
B. நீலம்
C. கருப்பு
D. சிவப்பு
Answer
C. கருப்பு
54. புவியின் உட்கருவம் எதனால் உருவாகியுள்ளது
A. முக்கியமாக திரவ நிலையில் உள்ள இரும்பு
B. முக்கியமாக தொரவ நிலையில் உள்ள நிக்கல்
C. திரவ நிலையில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய இரண்டும்
D. பிளாஸ்டிக் நிலையில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய இரண்டும்
Answer
D. பிளாஸ்டிக் நிலையில் உள்ள இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய இரண்டும்
55. சூரியக் குடும்பம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியாக உள்ளது?
A. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமி மட்டும் மிகவும் அடர்த்தியாக உள்ளது.
B. பூமியின் தொகுப்பில் மிக அதிகமாக உள்ள மூலப்பொருள் சிலிக்கான் ஆகும்
C. சூரியக் குடும்பத்தில் உள்ள 75 சதவிகித பொருள் திணிவை (பொருண்மை)சூரியன் கொண்டுள்ளது
D. சூரியனின் விட்டம் பூமியைவிட 190 மடங்கு அதிகமாக உள்ளது.
Answer
A. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமி மட்டும் மிகவும் அடர்த்தியாக உள்ளது.
56. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கண்ட். அது அமைந்துள்ள மாநிலம்
A. குஜராத்
B. மத்தியபிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. ராஜஸ்தான்
Answer
B. மத்தியபிரதேசம்
57. எத்தனை வெளிநாடுகளுடன் நில எல்லையை மேற்கு வங்காளம் கொண்டுள்ளது?
A. ஒன்று
B. இரண்டு
C. மூன்று
D. நான்கு
Answer
C. மூன்று
58. இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிலையம் இருப்பது
A. கொடைக்கானல்
B. பாட்னா
C. நாக்பூர்
D. மேற்கூறிய எவையுமில்லை
Answer
D. மேற்கூறிய எவையுமில்லை
59. இந்தியாவின் எந்தப் பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?
A. மத்திய இந்தியா
B. தென் இந்தியா
C. கிழக்குப் பகுதி
D. வடமேற்கு இந்தியா
Answer
A. மத்திய இந்தியா
60. எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது?
A. லே
B. சித்ரதுர்க்
C. பாட்னா
D. கர்நாடகா
Answer
A. லே
61. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A. கோயாலி – குஜராத்
B. பரௌனி - உத்திரப்பிரதேசம்
C. திக்பாய் – பீகார்
D. மதுரா – மேற்கு வங்காளம்
Answer
A. கோயாலி – குஜராத்
62. காடுகளின் பரப்பை அதிகமாக கொண்டுள்ள மாநிலம்?
A. ஒடிசா
B. உத்திரபிரதேசம்
C. அருணாச்சலப்பிரதேசம்
D. மத்தியபிரதேசம்
Answer
D. மத்தியபிரதேசம்
63. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
A. 10784 கி.மீ
B. 12754 கி.மீ
C. 13864 கி.மீ
D. 13996 கி.மீ
Answer
B. 12754 கி.மீ
64. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் ________ சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும்.
A. செம்பு
B. சலவைக்கல்
C. சலவைக்கல்
D. நிலக்கரி
Answer
A. செம்பு
65. சார்மினார் விரைவு ரயில் இந்த ஊர்களுக்குக்கிடையே ஓடுகிறது
A. சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே
B. சென்னைக்கும் அகம்தாபாத்துக்கும் இடையே
C. சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே
D. சென்னைக்கும் ஜெய்பூர்க்கும் இடையே
Answer
C. சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே
66. வெர்டிமுனை மற்றும் கானரீஸ் ஆகிய தீவுகள் அடங்கிய பெருங்கடல்
A. இந்தியப் பெருங்கடல்
B. பசிபிக் பெருங்கடல்
C. அண்டார்டிக்கா பெருங்கடல்
D. அட்லாண்டிக் பேராழி
Answer
D. அட்லாண்டிக் பேராழி
67. தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?
A. தொட்டபெட்டா
B. கல்சுபாய்
C. ஆனைமுடி
D. இவற்றுள் எதுவுமில்லை
Answer
C. ஆனைமுடி
68. தவறான இணை எது?
A. ஜாரியா – ஒடிசா
B. ராணிகஞ்ச் – மேற்கு வங்காளம்
C. சிங்கரேணி – தெலுங்கானா
D. சோஹாக்பூர் – மத்தியபிரதேசம்
Answer
A. ஜாரியா – ஒடிசா
69. ரிக்டர் அளவுகோளில் குறிக்கப்படிருக்கும் ஒவ்வொரு எண்ணும் அதன் கீழ் எழுதப்பட்டிருக்கம் எண்ணைக்காட்டிலும் எத்தனை மடங்கு பெரியதாகும்?
A. இருபது மடங்கு
B. இரண்டு மடங்கு
C. பத்து மடங்கு
D. மூன்று மடங்கு
Answer
C. பத்து மடங்கு
70. வண்டல்மண் கீழ்க்கண்ட மாநிலங்களுள் ஒரு மாநிலத்தைத் தவிர எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது
A. தமிழ்நாடு
B. கேரளா
C. ஒடிசா
D. மகாராஷ்டிரா
Answer
B. கேரளா
71. தேசிய காடுகள் கொள்கையின்படி ஒரு பகுதியின் மொத்தப்பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் காடுகள் இருக்க வேண்டும்?
A. 33%
B. 25%
C. 24%
D. 21%
Answer
A. 33%
72. துணை அயன உயர் அழுத்த மண்டலம் ____ என்று அழைக்கப்படுகிறது
A. டோல்ட்ரம்ஸ்
B. குதிரை அட்சரேகைகள்
C. கொரியாலிஸ் விசை
D. இவற்றில் எதுவுமில்லை
Answer
B. குதிரை அட்சரேகைகள்
73. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு கிழக்கில் அமைந்துள்ள நாடு எது?
A. தாய்லாந்து
B. இலங்கை
C. இந்தோனேஷியா
D. மேற்கண்ட அனைத்தும்
Answer
C. இந்தோனேஷியா
74. ஜாம்ஷெட்பூரில் அமைத்த இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு தேவையான நீர் தரும் ஆறு
A. சட்லெஜ்
B. தாமோதர்
C. சுவர்ணரேகா
D. சோன்
Answer
C. சுவர்ணரேகா
75. பெடாலாஜி படிப்பு என்பது
A. காலநிலையைப் பற்றியது
B. பாறைகளைப் பற்றியது
C. நிலநடுக்கங்களைப் பற்றியது
D. மண்ணைப் பற்றியது
Answer
D. மண்ணைப் பற்றியது
76. ஜாரியா நிலக்கரி வயல்கள் அமைந்துள்ள மாநிலம்
A. ஜார்க்கண்ட்
B. மத்தியபிரதேசம்
C. ஒடிசா
D. மேற்கு வங்காளம்
Answer
A. ஜார்க்கண்ட்
77. மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம்?
A. பீகார்
B. மகாராஷ்டிரா
C. ஒடிசா
D. தமிழ்நாடு
Answer
C. ஒடிசா
78. சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் மத்திய தரைக்கடல் வழியாக, இத்தாலியின் தென் பகுதியை நோக்கி வீசும் வெப்பக்காற்று எது?
A. சினூக்
B. லூ
C. ஃபோன்
D. சிராக்கோ
Answer
D. சிராக்கோ
79. உலகில் ஓதச் சக்தி அலையின் மூலம் மின்சாரம்பெற்ற முதல் நாடு?
A. ஸ்பெயின்
B. பிரான்ஸ்
C. ஜெர்மனி
D. அமெரிக்கா
Answer
B. பிரான்ஸ்
80. நீரின் அடியில் உள்ள மலைகளின் உயரப்பகுதி
A. கயாட்
B. ஆழ்கடல் சமவெளி
C. கடல்மலை
D. கடலடித்தொடர்
Answer
A. கயாட்
81. பூமியின் மேற்பரப்பில் எந்தப் பகுதி அதிக வெப்ப அளவைப் பெறுகிறது?
A. வெப்பமண்டலப் பாலைவனங்கள்
B. பூமத்திய ரேகைப் பகுதி
C. சவானா பகுதி
D. குறிப்பிடும் அளவு இல்லை
Answer
B. பூமத்திய ரேகைப் பகுதி
82. பருவங்கள் ஏற்படக் காரணம் யாதெனில்
A. பூமி சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப்பாதை நீள்வட்டமானது
B. பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றி வருகிறது
C. பூமியின் அச்சு சாய்வாக உள்ளதால்
D. பூமி தன் வட்டப்பாதையில் சுழல்வதால்
Answer
C. பூமியின் அச்சு சாய்வாக உள்ளதால்
83. இந்திய விவசாய ஆராய்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 1940
B. 1930
C. 1929
D. 1939
Answer
C. 1929
84. பூமியின் சுற்றளவில் ஒரு டிகிரி அளவுகோல் எதைக் குறிக்கிறது? (ஏறக்குறைய)
A. 100 கி,மீ
B. 111 கி,மீ
C. 151 கி,மீ
D. 175 கி,மீ
Answer
B. 111 கி,மீ
85. புவி நிலைநிறுத்தப் பாதை எவ்வளவு உயரத்தில் உள்ளது?
A. 6 கி.மீ
B. 1000 கி.மீ
C. 3600 கி.மீ
D. 36,0000 கி.மீ
Answer
D. 36,0000 கி.மீ
86. சஹயாத்ரி மலைகள் குறிப்பது
A. சிவாலிக்
B. கிழக்குத் தொடர்ச்சி மலை
C. மேற்குத் தொடர்ச்சி மலை
D. சாத்பூரா குன்றுகள்
Answer
C. மேற்குத் தொடர்ச்சி மலை
87. பூமத்திய ரேகையில் 1 டிகிரி தீர்க்கரேகை எவ்வளவு தூரத்திற்குச் சமமாக உள்ளது?
A. 34.5 மைல்கள்
B. 50 மைல்கள்
C. 60 மைல்கள்
D. 69 மைல்கள்
Answer
B. 50 மைல்கள்
88. ___ மேகங்கள் மழைப்பொழிவு இடி மற்றும் மின்னலோடு தொடர்புடையவை
A. கீற்று மேகங்கள்
B. படை மேகங்கள்
C. திரள் மேகங்கள்
D. கார்படை மேகங்கள்
Answer
C. திரள் மேகங்கள்
89. சூரியக் குடும்பத்தில் உள்ள எந்த இரு கோள்களுக்குத் துணைக்கோள் இல்லை?
A. புதன் மற்றும் வெள்ளி
B. வெள்ளி மற்றும் செவ்வாய்
C. புதன் மற்றும் செவ்வாய்
D. வெள்ளி மற்றும் நெப்டியூன்
Answer
A. புதன் மற்றும் வெள்ளி
90. அனைத்து வகை மேகங்களும் காணப்படும் வளிமண்டல அடுக்கு எது?
A. மேலடுக்கு
B. இடையடுக்கு
C. அயன அடுக்கு
D. கீழடுக்கு
Answer
D. கீழடுக்கு
91. பாறைக்குழம்பு காணப்படும் புவி அடுக்கு எது?
A. கருவம்
B. புவிமேலோடு
C. கவசம்
D. இவற்றில் எதுவுமில்லை
Answer
C. கவசம்
92. பாராமஹால் பீடபூமி என அழைக்கபடுவது எது?
A. கோயம்புத்தூர் பீடபூமி
B. நீலகிரி பீடபூமி
C. மதுரைப் பீடபூமி
D. தருமபுரி பீடபூமி
Answer
D. தருமபுரி பீடபூமி/tnpsc-forest-questions-and-answers.php
93. இந்தியாவின் காளான் பாறைகள் எங்கு காணப்படுகிறது?
A. மத்தியப் பிரதேசம்
B. குஜராத்
C. இராஜஸ்தான்
D. தமிழ்நாடு
Answer
C. இராஜஸ்தான்
94. கீழ்க்கண்டவற்றுள் இடியுடன் கூடிய மழைப் பொழிவைத் தரக் கூடிய மேகங்கள் எவை?
A. படை மேகங்கள்
B. திரள் மேகங்கள்
C. கார்த் திரள் மேகங்கள்
D. படைத் திரள் மேகங்கள்
Answer
C. கார்த் திரள் மேகங்கள்
95. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிகப் பெரிய சிகரம் எது?
A. ஆனைமுடி
B. பிரம்மகிரி மலை
C. சேர்வராயன் மலை
D. தொட்ட பேட்டா
Answer
A. ஆனைமுடி
96. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம்
A. 7%
B. 4%
C. 5%
D. 6%
Answer
B. 4%
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்