இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்

1. நெருக்கடி நிலை காலத்தில் தற்காலிகமாக அடிப்படை உரிமைகளை இரத்து செய்யும் கூறானது எந்த அரசியமைப்பு சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
A. ஆஸ்திரேலியாவின் அரசியமைப்புச் சட்டம்
B. கனடாவின் அரசியமைப்புச் சட்டம்
C. அமெரிக்காவின் அரசியமைப்புச் சட்டம்
D. ஜெர்மனியின் வெய்மர் அரசியமைப்புச் சட்டம்
Answer
D. ஜெர்மனியின் வெய்மர் அரசியமைப்புச் சட்டம்
2. கீழ்க்கண்ட எந்த அரசியமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவுச் சங்களுக்கு அரசியமைப்பு நிலை மற்றும் பாதுபாப்பினை வழங்கியது?
A. 95வது
B. 96வது
C. 97வது
D. 98வது
Answer
C. 97வது
3. கீழ்க்கண்டவற்றுள் ‘இந்தியாவின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது எது?
A. பகுதி I
B. பகுதி II
C. பகுதி III
D. பகுதி IV
Answer
C. பகுதி III
4. அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளின் மீது நியாமான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற உரிமையை யார் வைத்துள்ளார்கள்?
A. குடியரசுத்தலைவர்
B. உச்சநீதிமன்றம்
C. பாராளுமனறம்
D. மக்களவை
Answer
C. பாராளுமனறம்
5. அரசியமைப்பு அவையில் ‘குறிக்கோள் தீர்மானம்” கொண்டு வந்தவர் ____
A. எஸ்.ராதாகிருஷ்ணன்
B. ராஜேந்திரபிரசாத்
C. ஜவகர்லால் நேரு
D. பி.ஆர்.அம்பேத்கர்
Answer
C. ஜவகர்லால் நேரு
6. கீழ குறிப்பிடப்பட்ட எந்தொவொரு வழக்கில், முகப்புரையானது அரசியலமைப்பின் ஓர் பகுதி அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது?
A. பெருபாரி யூனியன் வழக்கு
B. சஜ்ஜன்சிங் வழக்கு
C. கோலக்நாத் வழக்கு
D. கேவனாந்த பாரதி வழக்கு
Answer
A. பெருபாரி யூனியன் வழக்கு
7. எந்த குழுவின் பரிந்துரையின் படி அடிப்பைடக் கடமைகள் இயற்றப்பட்டது?
A. பல்வந்தராய் மேத்தா குழு
B. அசோக்மேத்தா குழு
C. எல்.எம்.சிங்வி குழு
D. ஸ்வரண்சிங் குழு
Answer
D. ஸ்வரண்சிங் குழு
8. எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் டில்லிக்கு தேசிய தலைநகரப் பகுதிக்கான தகுதியைக் கொடுத்தது?
A. 64வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
B. 66வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
C. 68வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
D. 69வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
Answer
D. 69வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
9. கீழ்க்கண்டவற்றுள் சட்டத்தின் வழியாக நிறைவேற்ற இயலாத குடிமக்களின் உரிமைகள் எது?
I. பொது சிவில் சட்டம்
II. தொழிலாளர்களின் நல்வாழ்விற்கான உரிமை
III. வேலைக்கான உரிமை
IV. அரசியலமைப்பு வழி தீர்வு காணும் உரிமை
A. I, III மற்றும் IV மட்டும்
B. I, II மற்றும் III மட்டும்
C. I, III மற்றும் IV மட்டும்
D. மேற்க்கண்ட அனைத்தும்
Answer
B. I, II மற்றும் III மட்டும்
10. அரசியமைப்பின் எந்தப் பகுதி அடிப்படை கடமைகளோடு தொடர்புடையதாகும்?
A. பகுதி III
B. பகுதி IV
C. பகுதி IV A
D. பகுதி V
Answer
C. பகுதி IV A
11. மாநில அரசாங்கம் தொடர்பானவை பற்றி பின்வருவனவற்றை கவனிக்கவும்
I. 152 லிருந்து 237 வரையிலான சரத்துக்கள் மாநில நிர்வாகத்தை தெளிவாக குறிப்பிடுகின்றது
II. 153 லிருந்து 160 வரையிலான சரத்துக்கள் முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளோடு தொடர்புடையதாகும்
மேற்கண்டவற்றுள் சரியானவை எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை
Answer
A. I மட்டும்
12. பின்வரும் மாநிலங்களுள் ஈரவைச் சட்டமன்றங்கள் இல்லாத மாநிலம் எது?
A. பீஹார்
B. கர்நாடகா
C. மகாராஷ்ட்ரா
D. கேரளா
Answer
D. கேரளா
13. பின்வருவனவற்றுள் எது இந்தியாவில் ஜனநாயக நல அரசை உருவாக்குவதில் அடிப்படையாக இருக்கிறது?
I. பகுதி III
II. பகுதி IV
III. பகுதி IV A
IV. பகுதி VII
A. I, III மற்றும் IV மட்டும்
B. I, II மற்றும் III மட்டும்
C. I, III மற்றும் IV மட்டும்
D. II மட்டும்
Answer
B. I, II மற்றும் III மட்டும்
14. பின்வருவனவற்றுள் ஆளுனரின் தகுதி தொடர்பானவைகளில் எது தவறானது?
A. அவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்
B. அவர் 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்
C. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்
D. அவர் வேறு எந்த ஊதியம் தரும் பதவியிலும் இருக்கக் கூடாது
Answer
C. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்
15. அரசியலமைப்பின் சரத்து 19-ன் கீழ் எவ்வளவு சுதந்திர உரிமை உறுதியளிக்கப்பட்டுள்ளன?
A. 7
B. 6
C. 5
D. 8
Answer
B. 6
16. ஆளுனரின் அதிகாரங்கள் தொடர்பானவைகளுள் பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்
I. மாநில சட்டமன்றத்தில் பணமசோதாவை அறிமுகப்படுத்துவதுற்கு இவரின் அணுமதி கட்டாயமாகும்
II. ஆளுனரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மானியக் கோரிக்கையானது செயல்பட முடியும்.
மேற்கண்டவற்றுள் சரியானவை எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை
Answer
C. இரண்டும்
17. முகப்புரையானது கீழ்க்கண்ட எந்த அரசியமைப்புச் சட்டத்திருத்தின் மூலம் திருத்தப்பட்டது?
A. 92வது
B. 42வது
C. 91வது
D. 10வது
Answer
B. 42வது
18. பேச்சுரிமை மற்றும் கருத்து வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, அமைப்பை உருவாக்கும் உரிமை ஆகிய உரிமைகள் எந்த சரத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது?
A. சரத்து 18
B. சரத்து 19
C. சரத்து 20
D. சரத்து 21
Answer
B. சரத்து 19
19. இந்தியாவில் ஒரு புதிய மாநிலமானது எதன் மூலம் உருவாக்கலாம்?
A. பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை
B. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
C. பாராளுமன்றத்தில் சாராதணப் பெரும்பாண்மை
D. இவற்றில் எதுவுமில்லை
Answer
C. பாராளுமன்றத்தில் சாராதணப் பெரும்பாண்மை
20. தற்போதுள்ள அரசியலைப்பின் முகவுரையில் இந்தியா எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
A. இறையாண்மை கொண்ட சமயசார்பற்ற சமதர்ம மக்களாட்சி குடியரசு
B. சமதர்ம இறையாண்மை கொண்ட மக்களாட்சி குடியரசு
C. இறையாண்மை கொண்ட சமதர்ம சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசு
D. இறையாண்மை கொண்ட சமதர்ம சமயசார்பற்ற மக்களாட்சி
Answer
C. இறையாண்மை கொண்ட சமதர்ம சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசு
21. அடிப்படை உரிமையானது பகுதி ____ மற்றும் சரத்து _____ ற்குள் அடங்கியுள்ளது,
A. III, 5 முதல் 11
B. III, 12 முதல் 35
C. IV, 5 முதல் 11
D. IV, 12 முதல் 35
Answer
D. III, 12 முதல் 35
22. அரசியமைப்பின் 352 - வது சரத்தின் கீழான நெருக்கடி நிலையின் போது எந்த அடிப்படை உரிமையானது நிறுத்தி வைக்கப்பட இயலாது
A. அரசியமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
B. பேச்சுரிமை
C. சமத்துவத்திற்கான உரிமை
D. தனிமனித சுதந்திரம் மற்றும் வாழும் உரிமை
Answer
D. தனிமனித சுதந்திரம் மற்றும் வாழும் உரிமை
23. முகப்புரையை அரசியலமைப்பின்அடையாள அட்டை என்று கூறியவர் யார்?
A. பி.ஆர்.அம்பேத்கர்
B. என்.ஏ.பல்கிவாலா
C. ஜவகர்லால் நேரு
D. காந்தி
Answer
B. என்.ஏ.பல்கிவாலா
24. கீழ்கண்டவர்களுள் அம்பேத்கர் தலைமையிலான அரசியமைப்பு வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் யார்?
I. N. கோபாலசாமி ஐயங்கார்
II. ஜவகர்லால் நேரு
III. K.M.முன்ஷி
IV. சர்தார்பட்டேல்
A. I, II மற்றும் III மட்டும்
B. I மற்றும் IV மட்டும்
C. II, III மற்றும் IV மட்டும்
D. I மற்றும் III மட்டும்
Answer
D. I மற்றும் III மட்டும்
25. கீழ்க்கண்ட எந்த அரசியமைப்புச் சட்டத் திருத்தம் சிக்கிமை ஒரு முழுநிலை மாநிலமாக மாற்றியது?
A. 36வது
B. 35வது
C. 34வது
D. 33வது
Answer
A. 36வது
26. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்கான உரிமையானது _______ சரத்தோடு தொடர்புடையது.
A. சரத்து 30
B. சரத்து 29
C. சரத்து 28
D. சரத்து 27
Answer
A. சரத்து 30
27. "அரசியலமைப்பின் மனசாட்சி" என்றழைக்கப்படுவது எது?
A. அடிப்படை உரிமைகள்
B. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடிப்படை உரிமைகளும் இணைந்து
C. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடிப்படைக் கடமைகளுடன் இணைந்து
D. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
Answer
B. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடிப்படை உரிமைகளும் இணைந்து
28. கல்வியுரிமையானது ஒரு அடிப்படை உரிமையாக ___வது இந்திய அரசியலமப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
A. 42வது
B. 76வது
C. 86வது
D. 65வது
Answer
C. 86வது
29. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்) (அப்போதைய பிரதமர்)
A. 52 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ராஜிவ் காந்தி
B. 42 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இந்திரா காந்தி
C. 1 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஜவகர்லால் நேரு
D. 91 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மன்மோகன் சிங்
Answer
D. 91 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் - மன்மோகன் சிங்
30. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி-XV எதைப்பற்றி கூறுகிறது?
A. தீர்ப்பாயங்கள்
B. அலுவல் மொழிகள்
C. நெருக்கடி கால நியதிகள்
D. தேர்தல்கள்
Answer
D. தேர்தல்கள்
31. இந்திய அரசியலமைப்பு மாபெரும் அளவில் இருப்பதற்கு பின்வருவனவற்றில் எது காரணம் இல்லை?
A. பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா
B. மத்திய மற்றும் மாநில அளவில் ஒற்றை அரசியலமைப்புச் சட்டம்
C. நாட்டின் அதிகமான மக்கள் தொகை
D. அரசியலமைப்புச் சட்டமன்றத்தில் சட்டப் பண்டிதர்களின் புலமை ஆதிக்கம
Answer
C. நாட்டின் அதிகமான மக்கள் தொகை
32. கீழ்க்காண்பவற்றில் எது இந்திய அரசின் மக்கள் ஆட்சிமுறையின் அரண் இல்லை?
A. இந்திய தேர்தல் ஆணையம்
B. இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை
C. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்
D. நாடாளுமன்றம்
Answer
D. நாடாளுமன்றம்
33. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இயற்றப்பட்டன?
A. ஜப்பானிய அரசியலமைப்புச் சட்டம்
B. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம்
C. சோவியத் ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம்
D. அயர்லாந்து அரசியலமைப்புச் சட்டம்
Answer
C. சோவியத் ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம்
34. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்க்கு அரசியலமைப்பு நிர்ணயசபை எடுத்துக் கொண்ட காலம்?
A. 2 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 12 நாட்கள்
B. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்
C. 3 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 12 நாட்கள்
D. 3 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள
Answer
B. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்
35. இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்தா சின்ஹா நியமனம் செய்யப்பட்டது எந்த நாட்டின் நடைமுறையின் அடிப்படையிலானது?
A. ரஷ்யா
B. பிரிட்டன்
C. பிரான்ஸ்
D. அமெரிக்கா
Answer
C. பிரான்ஸ்
36. அடிப்படை கடமைகள் குறித்து கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க.
1. 1976-ல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் இது அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
2. 2002-ல் கொண்டுவரப்பட்ட 86வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 11வது அடிப்படை கடமையைச் சேர்த்தது.
மேற்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. I மற்றும் II மட்டும்
D. இரண்டுமில்லை
Answer
C. I மற்றும் II மட்டும்
37. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பு நிர்ணயசபையை கோரியது?
A. 1929
B. 1930
C. 1935
D. 1938
Answer
C. 1935
38. பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி-II இல் அல்லாத சரத்து எது?
A. சரத்து – 4
B. சரத்து – 10
C. சரத்து – 6
D. சரத்து – 11
Answer
A. சரத்து – 4
39. பின்வருவனவற்றில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நவம்பர் 26, 1949 அன்று அறிமுகம் செய்யப்படாத சரத்து எது?
A. சரத்து – 6
B. சரத்து – 324
C. சரத்து – 326
D. சரத்து – 392
Answer
C. சரத்து – 326
40. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என அழைக்கப்படுவது எது?
A. அடிப்படை உரிமைகள்
B. அடிப்படை கடமைகள்
C. முகப்புரை
D. வழிகாட்டு கோட்பாடுகள்
Answer
C. முகப்புரை
41. பின்வரும் வழிகாட்டு விதிமுறைகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-IV இடம்பெற்றுள்ள வழிகாட்டு விதிமுறை எது?
A. பணியிடங்களுக்கு பட்டியலிட்ட சாதியினர் மற்றும் பட்டியலிட்ட பழங்குடியினர் கோரும் உரிமைகள்
B. தொடக்க நிலையில் தாய் மொழியில் கல்வி கற்பதற்கான வசதிகள்
C. இந்தி மொழி வளர்ச்சிக்கான நெறிமுறைகள்
D. ஏழைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை அளித்தல்
Answer
D. ஏழைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை அளித்தல்
42. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து-I தொடர்பாக கீழ்காணும் கூற்றுகளில் கருத்தில் கொள்க
1. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்துப் பகுதிகளும் அடங்கும்
2. இது எந்த நேரத்திலும் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் பிரதேசங்களவை உள்ளடக்குவதில்லை
மேற்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை
Answer
A. 1 மட்டும்
43. கீழ்கண்டவற்றில் தனி நபருக்கு எதிராக வழங்கக் கூடிய நீதிப்பேராணை எது?
A. ஆட்கொணர்வு நீதிப்பேராணை
B. செயலுறுத்தும் நீதிப்பேராணை
C. தடைசெய்யும் நீதிப்பேராணை
D. முறைப்படுத்தும் நீதிப்பேராணை
Answer
A. ஆட்கொணர்வு நீதிப்பேராணை
44. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து-20 தொடர்பாக கீழ்க்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
1. நடப்பில் இருக்கும் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் முன்தேதியிட்டு சட்டங்களை இயற்றி தீர்ப்பு வழங்க இயலாது
2. குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை அவருக்கு எதிராக சாட்சியளிக்குமாறு வற்புறுத்தக்கூடாது. உரிமையியல் வழக்குகளில் இச்சட்டப் பாதுகாப்பு பொருந்தாது.
மேற்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. I மற்றும் II மட்டும்
D. இரண்டுமில்லை
Answer
B. II மட்டும்
45. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பகுதி குடியுரிமை பற்றி கூறுகின்றன?
A. பகுதி – 1
B. பகுதி – 2
C. பகுதி – 3
D. பகுதி – 4
Answer
B. பகுதி – 2
46. அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை தொடர்பான கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க.
1. நீதிக் கோட்பாடுகள் பிரெஞ்சு புரட்சியிலிருந்து பெறப்பட்டது
2. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகள் ரஷ்ய புரட்சியிலிருந்து பெறப்பட்டது.
மேற்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை
Answer
D. இரண்டுமில்லை
47. கீழ்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொள்க.
1. 1946 ஆம் ஆண்டு அமைச்சரவை தூதுக் குழு இந்தியாவுக்கு அனுப்பபட்டது
2. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இருவேறு அரசியலமைப்பு அமைக்க ஒப்புதல் அளித்தது.
மேற்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. I மற்றும் II ஆகிய இரண்டும் சரி
D. I மற்றும் II ஆகிய இரண்டும் தவறு
Answer
A. I மட்டும்
48. கீழ்கண்ட எந்த நீதிப்பேராணை மூலம் பாதிக்கப்பட்ட நபர் இல்லாமல் அவர் சார்பாக பொது நபர் ஒருவர் நீதிமன்றத்தை நாடலாம்?
A. தகுதி நீதிப்பேராணை
B. செயலுறுத்தும் நீதிப் பேராணை
C. முறைப்படுத்தும் நீதிப்பேராணை
D. தடைசெய்யும் நீதிப்பேராணை
Answer
A. தகுதி நீதிப்பேராணை
49. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (கூற்று) (சரத்து)
A. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல் சரத்து 41
B. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் சரத்து 51
C. கால்நடை வளர்ப்பு சரத்து 48
D. நிர்வாகத்துறையிலிருந்நு நீதித்துறையை பிரித்தல் சரத்து 50
Answer
A. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல் - சரத்து 41
50. இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1935 தொடர்பான கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க.
1. அது மத்தியில் இரட்டை ஆட்சியை ஒழித்து மாநிலத்தில் இரட்டை ஆட்சியயை அறிமுகம் செய்தது.
2. இது எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசுக்கு அளித்தது?
மேற்கண்டவற்றுள் தவறானவை எது/எவை?
A. I மட்டும்
B. II மட்டும்
C. I மற்றும் II மட்டும்
D. இரண்டுமில்லை
Answer
C. I மற்றும் II மட்டும்
51. கீழ்க்கண்டவற்றுள் தில்லிக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு எது?
A. சரத்து – 239
B. சரத்து – 239A
C. சரத்து – 239AB
D. சரத்து – 239AAA
Answer
D. சரத்து – 239AAA
52. கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட பகுதிகள் இல்லை
A. இம்மச்சல பிரதேசம்
B. பீகார்
C. மகாராஷ்டிரம்
D. ஜார்க்கண்ட்
Answer
B. பீகார்
53. கீழ்க்கண்டவற்றுள் யூனியன் பிரதேசங்களின் சட்டம், நிதி நியமனங்கள் போன்ற அனைத்து விவகாரங்களுக்கும் மையமான செயல்படுத்துவது எது?
A. குடியரசுத் தலைவர்
B. உள்துறை அமைச்சகம்
C. நிதி அமைச்சகம்
D. பிரதமர் அலுவலகம்
Answer
B. உள்துறை அமைச்சகம்
54. அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்க இயலும்?
A. நான்கு ஆண்டுகள்
B. ஐந்து ஆண்டுகள்
C. மூன்று ஆண்டுகள்
D. ஆறு ஆண்டுகள்
Answer
C. மூன்று ஆண்டுகள்
55. கீழ்க்கண்டவற்றுள் தீர்பாயங்கள் பற்றிக் குறிப்பிடும் அரசியமைப்புச் சட்டத்தின் பகுதி – XIV A ஆனது எந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது?
A. 40 ஆவது அரசியமைப்புச் சட்டதிருத்தம்
B. 42 ஆவது அரசியமைப்புச் சட்டதிருத்தம்
C. 44 ஆவது அரசியமைப்புச் சட்டதிருத்தம்
D. 52 ஆவது அரசியமைப்புச் சட்டதிருத்தம்
Answer
B. 42 ஆவது அரசியமைப்புச் சட்டதிருத்தம்
56. கீழ்க்கண்டவற்றுள் மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரியினைப் பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி எது?
A. பகுதி-XVI
B. பகுதி-XVII
C. பகுதி-XVIII
D. பகுதி-XIX
Answer
B. பகுதி-XVII
57. கீழ்க்கண்டவற்றுள் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் குறித்து குறிப்பிடாத அரசியலமைப்பு பகுதி எனது?
A. சரத்து – 76
B. சரத்து – 165
C. சரத்து – 177
D. சரத்து – 194
Answer
A. சரத்து – 76
58. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (சரத்து) (கூறுகள்)
A. சரத்து – 323A நிர்வாக தீர்ப்பாயம்
B. சரத்து – 312 அனைத்து இந்திய பணிகள்
C. சரத்து – 300 வழக்குகள் மற்றும் நடவடிக்கைகள்
D. சரத்து – 350A மொழி சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர்
Answer
D. சரத்து – 350A - மொழி சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர்
59. கீழ்க்கண்டவற்றுள் அனைத்து இந்தியப் பணிகள் பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்பு பகுதி எது?
A. பகுதி - XV
B. பகுதி - XVIII
C. பகுதி - XIV
D. பகுதி - XVI
Answer
C. பகுதி - XIV
60. கீழ்க்கண்டவற்றுள் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள் நலன்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அரசியல் சட்டம் சார்ந்த அமைப்பு எது?
A. குடியரசுத் தலைவர்
B. பிரதமர்
C. இதரபிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்
D. அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம்
Answer
D. அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம்
61. கீழ்க்கண்டவற்றுள் இந்திய தேர்தல் ஆணையரின் பதவிகாலம் எது?
A. 5 ஆண்டுகள் அல்லது 65 வயதினை எட்டும் வரை
B. 5 ஆண்டுகள் அல்லது 62 வயதினை எட்டும் வரை
C. 6 ஆண்டுகள் அல்லது 65 வயதினை எட்டும் வரை
D. 6 ஆண்டுகள் அல்லது 62 வயதினை எட்டும் வரை
Answer
C. 6 ஆண்டுகள் அல்லது 65 வயதினை எட்டும் வரை
62. கீழ்க்கண்டவற்றுள் எது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பனி இல்லை?
A. பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்வது
B. பணிகளுக்கான தேர்வுகளை நடத்துவது
C. கூட்டு ஆட்சேர்ப்புக்கான கூட்டமைப்பு
D. பணி நீடிப்பு
Answer
A. பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்வது
63. கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் கீழ் ஒன்றாக செயல்பட்டு வந்த அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இரண்டாக பிரிக்கப்பட்டது?
A. 69 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
B. 79 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
C. 89 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
D. 99 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
Answer
C. 89 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
64. கீழ்க்கண்டவற்றுள் எந்த அமைச்சகம் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் பணிகளைக் கண்காணிக்கிறது?
A. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
B. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
C. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
D. ஊராக மேம்பாட்டு அமைச்சகம்
Answer
A. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
65. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடந்திர அறிக்கையினை பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் முன்பாக சமர்பிப்பவர் யார்?
A. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
B. குடியரசுத் தலைவர்
C. பிரதமர்
D. பணியாளர் நலன் அமைச்சர்
Answer
B. குடியரசுத் தலைவர்
66. இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் யாருக்கு இணையான சலுகைகள் மற்றும் தடைகாப்பு நிலையினைப் பெறுகிறார்?
A. நாடாளுமன்ற அமைச்சர்
B. பாராளுமன்ற உறுப்பினர்
C. மாநில சட்டமன்ற அமைச்சர்
D. மாநில சட்டமன்ற உறுப்பினர்
Answer
B. பாராளுமன்ற உறுப்பினர்
67. கீழ்க்கண்டவற்றுள் மத்திய நிர்வாக தீர்பாயத்தின் அதிகார வரம்பில் வராதவர்கள் யார்?
A. பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் படைசாரா அலுவலர்கள்
B. மத்திய குடிமைப் பணியாளர்கள்
C. அனைத்து இந்தியக் குடிமைப் பணியாளர்கள்
D. உச்ச நீதிமன்றத்தின் பணியாளர்கள்
Answer
D. உச்ச நீதிமன்றத்தின் பணியாளர்கள்
68. இந்தியாவில் அரசியல் அமைப்பு நிர்ணய சபை உருவாக்குவதற்காக தேர்தல் எப்பொழுது நடத்தப்பட்டது?
A. ஆகஸ்ட் 1946
B. ஜூலை 1946
C. ஜூன் 1946
D. மே 1946
Answer
B. ஜூலை 1946
69. கீழ்க்கண்டவற்றுள் மாநில தீர்பாயம் அமைந்துள்ள மாநிலம் எது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. மத்திய பிரதேசம்
D. இமாச்சல பிரதேசம்
Answer
A. கேரளா
70. கூட்டுறவு சங்கங்களை இணைப்பது, கட்டுபடுத்துவது அல்லது மூடுவது போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பு எது?
A. மாநில சட்டமன்றம்
B. பஞ்சாயத்துகள்
C. பாராளுமன்றம்
D. குடியரசுத் தலைவர்
Answer
A. மாநில சட்டமன்றம்
71. கூட்டுறவு சங்கங்களின் குழுவினை அதிகபட்சம் எவ்வளவு காலம் இடைநீக்கம் செய்ய இயலும்?
A. மூன்று மாதங்கள்
B. ஆறு மாதங்கள்
C. ஒரு வருடம்
D. கால வரையறை இல்லை
Answer
B. ஆறு மாதங்கள்
72. கீழ்க்கண்டவற்றுள் கட்சித்தாவல் காரணமாக தகுதி இழக்கும் நாடாளும்ற உறுபினர்களின் விவகாரங்களில் இறுதி முடிவினை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
A. அவைத் தலைவர்
B. குடியரசுத் தலைவர்
C. தேர்தல் ஆணையம்
D. உச்ச நீதி மன்றம்
Answer
A. அவைத் தலைவர்
73. கீழ்க்கண்டவற்றுள் தேர்தல் விவகாரங்களுக்காக அமைக்கப்படும் தீர்ப்பாயங்கள் பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து எது?
A. சரத்து - 323 B
B. சரத்து - 323 A
C. சரத்து - 324
D. சரத்து - 325
Answer
A. சரத்து - 323 B
74. பிரதமரை தலைவராகக் கொண்டு எந்த ஆண்டில் தேசிய ஒருமைப்பாட்டு அவை ஏற்படுத்தப்பட்டது?
A. 1961
B. 1968
C. 1986
D. 1990
Answer
A. 1961
75. கீழ்க்கண்டவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுபினர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது யார்?
A. உச்ச நீதிமன்றம்
B. தேர்தல் ஆணையம்
C. அமைச்சரவை
D. பாராளுமன்றம்
Answer
A. உச்ச நீதிமன்றம்
76. இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்காண தேசிய அமைப்பு எப்பொழுது உருவாக்கப்பட்டது?
A. 1992
B. 1998
C. 1999
D. 2002
Answer
A. 1992
77. மக்களவை உறுபினர்களின் எண்ணிக்கையில் 15% அளவுக்கு மிகாமல் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அரசியலமைப்புத் திருத்த சட்டம் எது?
A. 52 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
B. 69 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
C. 91 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
D. 98 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
Answer
C. 91 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
78. இந்திய அரசியலமைப்பு செயல்படும் விதத்தை மறு ஆய்வு செய்ய 2000- ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணையத்தின்/குழுவின் பெயர் என்ன?
A. வீரப்பமொய்லி ஆணையம்
B. ராம்நந்தன் குழு
C. ஜே.எஸ்.வர்மா குழு
D. வெங்கடாசலையா ஆணையம்
Answer
D. வெங்கடாசலையா ஆணையம்
79. குடியரசுத் தலைவருக்கான தேர்தலை நடத்துபவர்
A. மக்களவை சபாநாயகர்
B. பிரதம மந்திரியின் அலுவலகம்
C. உச்சநீதி மன்றம்
D. இந்தியத் தேர்தல் ஆணையம்
Answer
D. இந்தியத் தேர்தல் ஆணையம்
80. குடியரசுத்தலைவர் பதவி விலக விரும்பினால் அவர் யாரிடம் அவருடைய பதவி விலகல் கடிதத்தை அளிக்க வேண்டும்?
A. இந்திய தலைமை நீதிபதி
B. மக்களவை செயலர்
C. குடியரசுத் துணைத் தலைவர்
D. பிரதமர்
Answer
C. குடியரசுத் துணைத் தலைவர்
81. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை முதன் முதலில் பரிந்துரைத்த குழு எது?
A. அசோக் மேத்தா குழு
B. பல்வந்த்ராய் மேத்தா குழு
C. எல்.எம்.சிங்வி குழு
D. ஜி.வி.கே.ராவ் குழு
Answer
B. பல்வந்த்ராய் மேத்தா குழு
82. இந்திய குடியரசுத்துணைத் தலைவரை பதவி நீக்கும் தீர்மானம் ____ கொண்டு வர இயலும்?
A. மக்களவையில் மட்டும்
B. நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில்
C. நாடாளுமனறத்தின் கூட்டுக் கூட்டத்தில்
D. மாநிலங்களவையில் மட்டும்
Answer
D. மாநிலங்களவையில் மட்டும்
83. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
A. குற்ற மன்னிப்பு – அனைத்து குற்றங்கள் மற்றும் தண்டனையிலிருந்து மன்னிப்பளிக்கலாம்
B. தண்டனை மாற்றம் - ஒரு தண்டனையிலிருந்து இன்னொரு தண்டனைக்கு மாற்றுவது
C. தண்டனை குறைப்பு – தண்டனையின் அளவைக் குறைத்தல்
D. தண்டனை நிறுத்தி வைப்பு – குறிப்பிட்ட காரணங்களுக்காக குறைவான தண்டனை அளித்தல்
Answer
D. தண்டனை நிறுத்தி வைப்பு – குறிப்பிட்ட காரணங்களுக்காக குறைவான தண்டனை அளித்தல்
84. சரியாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
A. குடியரசுத் துணைத் தலைவர் இந்திய நிhவாகப் படிநிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்
B. அவர் பாராளுமன்ற இரு அவையின் உறுப்பினர்கள் உள்ளடக்கிய வாக்காளர் குழுவினால்(Electoral College) மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
C. சரத்து 66 ஆனது குடியரசுத் தலைவரின் பதவி காலம் பற்றியது.
D. சரத்து 67 ஆனது குடியரசுத் துணைத் தலைவரின் தேர்தல் பற்றியது
Answer
B. அவர் பாராளுமன்ற இரு அவையின் உறுப்பினர்கள் உள்ளடக்கிய வாக்காளர் குழுவினால்(Electoral College) மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
85. இந்திய பாராளுமன்றம் _________ ஐ உள்ளடக்கியது
A. மக்களவை மற்றும் மாநிலங்களவை
B. பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
C. குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் அமைச்சரவை
D. குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
Answer
D. குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
86. மத்திய அரசு மற்றும் மாநில அரசுஆகிய இரண்டும் ___ இல் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது
A. மத்திய பட்டியல்
B. மாநில பட்டியல்
C. பொதுப் பட்டியல்
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
C. பொதுப் பட்டியல்
87. பின்வரும் எந்த அதிகாரம் மாநிலங்களவையின் பிரத்தியேக அதிகாரம் ஆகும்?
A. குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் குறித்த நடைமுறையை துவக்குதல்
B. புதிய அனைத்து இந்தியபபணியினை உருவாக்கப் பரிந்துரைத்தல்
C. அரசியலமைப்பினை திருத்துதல்
D. மேற்கண்ட அனைத்து அதிகாரங்களும்
Answer
B. புதிய அனைத்து இந்தியபபணியினை உருவாக்கப் பரிந்துரைத்தல்
88. குடியரசுத் தலைவர் பதவி மற்றும் குடியரசுத் துணை தலைவர் பதவி ஆகியவை காலியாக உள்ளபோது குடியரசுத் தலைவராக செயல்படுபவர் யார்?
A. தலைமை தேர்தல் ஆணையர்
B. இந்திய ஆரசு தலைமை வழக்கறிஞர்
C. இந்தியாவின் தலைமை நீதிபதி
D. மக்களவை சபாநாயகர்
Answer
C. இந்தியாவின் தலைமை நீதிபதி
89. ஒரு மாநிலத்தின் சட்ட மேலவையை உருவாக்கும் அல்லது நீக்கும் அதிகாரத்தைக் கொண்டவர்?
A. மாநில சட்டபேரவை
B. பாராளுமன்றம்
C. மாநில ஆளுநர்
D. குடியரத்தலைவர்
Answer
B. பாராளுமன்றம்
90. கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்தக் குழவிற்கு மக்களவையின் சபாநாயகர் அலுவல் சார்ந்த தலைவர் இல்லை?
A. பொதுக் கணக்குக் குழு
B. விதிகள் குழு
C. அலுவல் ஆலோசனைக் குழு
D. பொது நோக்கக் குழு
Answer
A. பொதுக் கணக்குக் குழு
91. கீழே குறிபிடப்பற்றுள்ளவற்றில் இந்தியாவின் அவசரகால நிதி பற்றிய தவறான கருத்து எது?
A. சரத்து - 267 ஆனது இதைப் பற்றியது ஆகும்
B. எதிர்பாராத செலவினங்களை எதிர்கொள்ள குடியரசுத்தலைவர் இந்நிதியிளிருந்து ஒதுகீடு செய்கிறார்
C. இது பாராளுமன்ற செயல்பாட்டினால்(Legislative Action) இயக்கப்படுகிறது.
D. குடியரசுத் தலைவரின் சார்பில் நிதிச் செயலர் இந்நிதியைப் பராமரிக்கிறார்
Answer
C. இது பாராளுமன்ற செயல்பாட்டினால்(Legislative Action) இயக்கப்படுகிறது.
92. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலல்களுக்கு ஒரே ஆளுனரை நியமிக்கும் முறையைக் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டதிருத்தம் எது?
A. 7 வது சட்டத்திருத்தம்
B. 8 வது சட்டத்திருத்தம்
C. 4 வது சட்டத்திருத்தம்
D. 12 வது சட்டத்திருத்தம்
Answer
A. 7 வது சட்டத்திருத்தம்
93. கீழ்க்கண்டவற்றுள் இந்திய குடியரசுத் தலைவரிடம் இல்லாத தடுப்பதிகரம் அல்லது மறுப்பானை எது?
A. பாக்கெட் மறுப்பாணை
B. முழுமையான மறுப்பாணை
C. தற்காலிக மறுப்பாணை
D. வரையறுக்கப்பட்ட மறுப்பாணை
Answer
D. வரையறுக்கப்பட்ட மறுப்பாணை
94. அரசியலமைப்பின் எந்த சரத்தின் படி மக்களவை சபாநாயகர் ஒரு உறுப்பினரை அவரது தாய்மொழியிலேயே பேச அனுமதிக்க முடியும்?
A. சரத்து 119(1)
B. சரத்து 122(1)
C. சரத்து 123(1)
D. சரத்து 120(1)
Answer
D. சரத்து 120(1)
95. பாராளுமன்றம் எது குறித்து மூன்று படியல்களிலும் சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது?
A. பட்டியலிடப்பட்ட பகுதிகள்
B. பழங்குடியின பகுதிகள்
C. பின்தங்கிய பகுதிகள்
D. யூனியன் பிரதேசங்கள்
Answer
D. யூனியன் பிரதேசங்கள்
96. பாராளுமன்றம் நடைபெற அவையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்பினர்கள்
A. அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு
B. அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு
C. அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு
D. அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் எட்டில் ஒரு பங்கு
Answer
A. அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு
97. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தேடு
A. நாடாளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கான அதிகபட்ச இடைவெளி 6 மாதங்களைத் தாண்டக் கூடாது
B. நொண்டிவாத்து அமர்வு என்பது தேர்தலுக்குப்பின் அடுத்த நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய கூட்டம்
C. பொதுக் கணக்கு குழுவானது, “பொது நிதியின் காவலன்” என்று கருதப்படுகிறது
D. மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்
Answer
C. பொதுக் கணக்கு குழுவானது, “பொது நிதியின் காவலன்” என்று கருதப்படுகிறது
98. இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வு முதன்முதலில் எந்த மசோதாவிற்காகக் கூட்டப்பட்டது?
A. இந்து சமய சட்ட மசோதா
B. வரதட்சணை தடுப்புச் சட்ட மசோதா
C. வங்கி தேசியமையமாக்கல் சட்ட மசோதா
D. தங்கம் கட்டுப்பாடு சட்ட மசோதா
Answer
B. வரதட்சணை தடுப்புச் சட்ட மசோதா
99. கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் மக்களவையின் உறுபினர்களின் தகுது நீக்கத்தை முடிவெடுக்கும் இறுதி அதிகாரத்தைக் கொண்டவர் யார்?
A. குடியரசுத் தலைவர்
B. பிரதமர்
C. இந்தியத் தேர்தல் ஆணையம்
D. மக்களவை சபாநாயகர்
Answer
D. மக்களவை சபாநாயகர்
100. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
A. ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடும் போதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்படும்
B. நட்சத்திர குறி கொண்ட வினாக்களுக்கு எழுத்துப்பூர்வமான விடைகள் அளிக்கப்படவேண்டும்
C. நட்சத்திர குறியற்ற வினாக்களுக்கு வாய்மொழி விடைகள் அளிக்கப்படும்
D. 14 நாட்களுக்குள் அவகாசம் கொடுத்து கேட்கப்படும் வினாக்கள் குறிகிய கால வினாக்களாகும்
Answer
A. ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடும் போதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்படும்
101. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான உயர்நீதி மன்றத்தினை அமைக்கும் அதிகாரம் பெற்றவர்
A. குடியரசுத் தலைவர்
B. இந்திய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, பின் குடியரசுத் தலைவரால் அமைக்கப்படும்
C. பாராளுமன்றச் சட்டம் மூலம்
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
C. பாராளுமன்றச் சட்டம் மூலம்
102. தமிழ்நாடில் உள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை யாது?
A. 21
B. 20
C. 25
D. 39
Answer
D. 39
103. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் செயல்முறையானது கீழ்க்கண்ட எந்த அரசியமைப்பிடமிருந்து பெறப்பட்டது?
A. இந்திய அரசாங்க சட்டம், 1935
B. சோவியத் ஒன்றியம்
C. அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம்
D. வெய்மார் ஜெர்மனியின் அரசியலமைப்பு சட்டம்
Answer
D. வெய்மார் ஜெர்மனியின் அரசியலமைப்பு சட்டம்
104. கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பான அட்டவணை எது?
A. ஒன்பதாவது அட்டவணை
B. பத்தாவது அட்டவணை
C. ஐந்தாவது அட்டவணை
D. ஆறாவது அட்டவணை
Answer
B. பத்தாவது அட்டவணை
105. தவறான கூற்றுகளை கண்டறியவும்
A. ஒரு மாவட்ட நீதிபதிக்கு மாவட்டத்தில் அதிக நீதித் துறை அதிகாரம் உள்ளது.
B. சிவில் வழக்குகளை மாவட்ட நீதிபதி கையாளும் போது, அவர் மாவட்ட நீதிபதியாக அறியபடுகிறார்
C. குற்றவியல் வழக்குகளை மாவட்ட நீதிபதி கையாளும் போது, அவர் முனிசிப் என்று அறியபடுகிறார்
D. மாவட்ட நீதிபதி, அனைத்து கீழ்நிலை நீதிமன்றங்களின் மேற்பார்வையிடும் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர்
Answer
C. குற்றவியல் வழக்குகளை மாவட்ட நீதிபதி கையாளும் போது, அவர் முனிசிப் என்று அறியபடுகிறார்
106. இந்தியாவின் இணைப்பு அலுவல் மொழியாக இருந்து வரும் மொழி எது?
A. இந்தி
B. ஆங்கிலம்
C. VIII - ஆவது அட்டவணையில் உள்ள ஒரு மொழி
D. A மற்றும் B ஆகிய இரண்டும்
Answer
B. ஆங்கிலம்
106. கீழ்க்கண்ட எந்த சரத்தானது குழந்தைகள் சரியான முறையில் வளர்வதற்கான வசதி வாய்ப்புகளை அளிக்கிறது?
A. சரத்து 39(f)
B. சரத்து 39(g)
C. சரத்து 39(h)
D. சரத்து 39(i)
Answer
A. சரத்து 39(f)
107. எந்த சரத்தானது பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிடுகிறது
A. சரத்து 41
B. சரத்து 42
C. சரத்து 43
D. சரத்து 44
Answer
D. சரத்து 44
108. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமனம் செய்பவர் யார்?
A. குடியரசுத் தலைவர்
B. ஆளுநர்
C. முதல் அமைச்சர்
D. தேசிய மனித உரிமைகள் ஆணையம்
Answer
B. ஆளுநர்
109. கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
பட்டியல் I பட்டியல் II
a. விதவை மறுமணச் சட்டம் 1. 1955
b. இந்து திருமணச் சட்டம் 2. 1856
c. இந்து வாரிசு சட்டம் 3. 1956
d. வரதட்சனை தடுப்புச் சட்டம் 4. 1961
  (a) (b) (c) (d)
A) 2 1 3 4
B) 1 2 4 3
C) 2 4 1 3
D) 2 3 4 1
Answer
A) 2 1 3 4  
110. கீழ்க்கண்ட எந்த சரத்து மூலம் உயர் நீதிமன்றமானது நீதி பேராணைகளை வெளியிட்டு வருகிறது
A. சரத்து - 32
B. சரத்து - 134
C. சரத்து - 143
D. சரத்து - 226
Answer
D. சரத்து - 226
111. கீழ்க்கண்டவற்றுள் மாநிலங்களுக்கு இடையேயான வாணிகம் மற்றும் வர்த்தகத் தொடர்பு குறித்து அரசியலமைப்புச சட்டத்தின் எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A. பகுதி - X
B. பகுதி - XII
C. பகுதி - XIV
D. பகுதி - XIII
Answer
D. பகுதி - XIII
112. கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 365 இன் படி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியினை அமல்படுத்த எது காரணமாக அமைய முடியாது?
A. தொங்கு சட்ட மன்றம்
B. ஊழல் குற்றச்சாட்டுகள்
C. மாநில அரசின் பெரும்பான்மையினை ஆளுநரால் கண்டறிய முடியவில்லை
D. அரசாங்கம் ஒரு வன்முறை கிளர்ச்சியைத் தூண்டுகிறது
Answer
B. ஊழல் குற்றச்சாட்டுகள்
113. மாநிலங்களுக்கு இடையேயான குழுக்களை அமைப்பதற்கு அரசியலமைப்புச சட்டத்தின் எந்த சரத்து அதிகாரமளிக்கிறது?
A. சரத்து - 262
B. சரத்து - 263
C. சரத்து - 264
D. சரத்து - 265
Answer
B. சரத்து - 263
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்