இந்திய தேசிய காங்கிரஸ் வினா விடைகள்

1. எந்த காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரி செலுத்தக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
A. அகமதாபாத், 1921
B. நாக்பூர், 1920
C. பெல்கேம், 1924
D. கயா, 1922
Answer
A. அகமதாபாத், 1921
2. 1885 இல் பம்பாயில் நடந்த காங்கிரஸ் முதாலவது கூட்டத்தொடரில் முதலாவது தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார்?
A. W.C.பேனர்ஜி
B. விஜயராகவாச்சாரியார்
C. ஜி.சுப்பிரமணிய அய்யர்
D. இராஜாஜி
Answer
C. ஜி.சுப்பிரமணிய அய்யர்
3. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
A. 1883ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது
B. கோகலே அவர்கள் இந்திய தேசியப் பேரவையை 1884ம் ஆண்டு தோற்றுவித்தார்
C. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் W.C. பானர்ஜி அவர்களால் தலைமையேற்று நடத்தப்பட்டது
D. இந்தியா முழவதிலும் இருந்து 78 பிரநிதிகள் அதில் கலந்து கொண்டனர்
Answer
C. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் W.C. பானர்ஜி அவர்களால் தலைமையேற்று நடத்தப்பட்டது
4. இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய முதல் முஸ்லீம் தலைவர் யார்?
A. பெரோஷா மேத்தா
B. ரஹிம்துல்லா சயானி
C. பத்ருதீன் தியாப்ஜி
D. சையது முகமது
Answer
C. பத்ருதீன் தியாப்ஜி
5. இந்திய தேசிய காங்கிரஸின் எந்த கூட்டத் தொடருக்கு ஆதுவும் ஒரே முறை மட்டும் காந்தியகள் தலைமை ஏற்றார்?
A. லக்னோ மாநாடு, 1916
B. கான்பூர் மாநாடு, 1925
C. பெல்காம் மாநாடு, 1924
D. லாகூர் மாநாடு, 1929
Answer
C. பெல்காம் மாநாடு, 1924
6. சரியான கூற்றைக் கண்டுபிடி
A. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது ரிப்பன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார்.
B. 1892ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் டப்ரின் பிரபு ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டது.
C. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைக் கோட்டினைத் தீர்மானிக்க 1893ம் ஆண்டு லேண்ஸ்டவுன் பிரபு தூராந்த் ஆணையத்தை அமைத்தார்.
D. 1905ம் ஆண்டு தொல்பொருள் சின்னங்கள் சட்டம் இயற்றப்பட்டது.
Answer
C. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைக் கோட்டினைத் தீர்மானிக்க 1893ம் ஆண்டு லேண்ஸ்டவுன் பிரபு தூராந்த் ஆணையத்தை அமைத்தார்.
7. 1876ம் ஆண்டு இந்திய கழகத்தினைத் (கூட்டமைப்பு) தோற்றுவித்தவர் யார்?
A. சுரேந்நதிரநாத் பானர்ஜி
B. கோபாலகிருஷ்ண கோகலே
C. தாதாபாய் நௌரோஜி
D. ஜி.சுப்பிரமணிய ஐயர்
Answer
A. சுரேந்நதிரநாத் பானர்ஜி
8. தவறான கூற்றைத் தேர்தெடுக்கவும்
A. ஜி.சுப்பிரமணிய அய்யர் சென்னை சுதேசி சங்கம் மூலம் தேசியத்தைப் பரப்பினார்
B. கோபால கிருஷ்ண கோகலே காந்தியின் அரசியல் குரவாக கருதப்பட்டவர்
C. கோகலே இந்திய பணியாளர் கழகத்தைத் தோற்றுவித்தார்
D. 1886ம் ஆண்டு, டப்ரின் பிரபு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கல்கத்தாவில் தேநீர் விருந்து கொடுத்தார்
Answer
A. ஜி.சுப்பிரமணிய அய்யர் சென்னை சுதேசி சங்கம் மூலம் தேசியத்தைப் பரப்பினார்
9. இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றில் பின்வரும் தலைவர்களுள், காங்கிரஸின் மிதவாதத் தலைவர் என குறிப்பிடப்படுபவர் யார்?
A. கோபால கிருஷ்ண கோகலே
B. பிபின் சந்திரபால்
C. லாலா லஜபதி ராய்
D. அரவிந்த கோஷ்
Answer
A. கோபால கிருஷ்ண கோகலே
10. ஏந்த கூட்டத்தில், காங்கிரஸின் இலக்கானது அரசியலமைப்பு மற்றும் சட்ட வழியில் சுய ஆட்சியயை அடைவதிலிருந்து அமைதியான மற்றும் முறையான வழியில் சுயராஜ்ஜியத்தை அடைவதற்கு மாறியது?
A. 1920, பம்பாய் கூட்டத் தொடர்
B. 1920, நாக்பூர் சிறப்புக் கூட்டத் தொடர்
C. 1921, கல்கத்தா கூட்டத்தொடர்
D. 1922, டில்லி கூட்டத்தொடர்
Answer
B. 1920, நாக்பூர் சிறப்புக் கூட்டத் தொடர்
11. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (காங்கிரஸ் கூட்டத்தொடர்) (முக்கிய தீர்மானம்)
A. கராச்சி கூட்டத் தொடர் 1931 அடிப்படை உரிமைகள்
B. லாகூர் கூட்டத் தொடர் 1929 முழு விடுதலை
C. பம்பாய் கூட்டத் தொடர் 1942 வெள்ளையனே வெளியேறு
D. கல்கத்தா கூட்டத் தொடர் 1906 சுயராஜ்யம்
Answer
C. பம்பாய் கூட்டத் தொடர் 1942 - வெள்ளையனே வெளியேறு
12. கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானவற்றைக் கண்டறிக.
A. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக உ.ச.பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டர்
B. 1929 யில் தேசிய தலைவர்களால் டெல்லி அறிக்கை வெளியிடப்பட்டது.
C. ஜவகர்லால் நேரு செல்வச் சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டார்
D. பிரிட்டன் நாடாளுமன்ற பொதுமக்கள் அவையின் தேர்ந்தேடுக்கப்ப்டட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி ஆவார்
Answer
C. ஜவகர்லால் நேரு செல்வச் சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டார்
13. ஐ.என.ஏ. விசாரணைக்காக காங்கிரஸால் அமைக்கப்பட்ட பாதுகாப்புத்துறை கமிட்டி உறுப்பினர்கள் யாவர்?
A. காந்தி, நேரு, ஆசப் அலி
B. நேரு, புலாபாய், அசப் அலி, தேஷ் பகதூர் சாப்ரூ
C. காந்தி, புலாபாய் தேசாய், தேஜ் பகதூர் சாப்ரூ
D. நேரு, தேஜ் பகதூர் சாப்ரூ, ராஜாஜி, காந்தி
Answer
B. நேரு, புலாபாய், அசப் அலி, தேஷ் பகதூர் சாப்ரூ
14. எந்த காங்கிரஸ் மாநாட்டில் சைமன் குழுவை புறக்கனிக்க முடிவு எடுக்கப்பட்டது?
A. மெட்ராஸ் மாநாடு
B. நாக்பூர் மாநாடு
C. கல்கத்தா மாநாடு
D. பம்பாய் மாநாடு
Answer
A. மெட்ராஸ் மாநாடு
15. எங்கிருந்து பி.ஆர். அம்பேத்கரை தேர்தெடுப்பதை காங்கிரஸ் உறுதி செய்தது?
A. அமேதி
B. பம்பாய்
C. நாக்பூர்
D. குஜராத்
Answer
B. பம்பாய்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்