தாவரவியல் வினா விடைகள்

1. அனிலிடுகளின் கழிவு நீக்க உறுப்பு ______ ஆகும்
A. மால்பீஜியன் நுண்குழல்
B. சுருங்கு வாக்குவோல்கள்
C. நெஃப்ரீடியங்கள்
D. பச்சை சுரப்பிகள்
Answer
C. நெஃப்ரீடியங்கள்
2.தாவரவியலில் கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?
A. மலர்மொட்டு
B. கனி
C. வேர்
D. இலை
Answer
A. மலர்மொட்டு
3. சர்வதேச தாவர மரபியல் வள வாரியம் 1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடம்
A. புதுடெல்லி
B. பிலிப்பைன்ஸ்
C. பாஸ்டன்
D. ரோம்
Answer
D. ரோம்
4. தாவரவியலில் குரோமோசோம்களில் ஜீனின் இருப்பிடம்
A. ஆல்லீல்
B. ஸ்போர்ட்
C. புள்ளி (லோக்க்ஸ்)
D. சென்டிரோமியர்
Answer
C. புள்ளி (லோக்க்ஸ்)
5. 'சூழ்நிலைத்தொகுப்பு' கீழ்க்கண்ட இரண்டு கூட்டுப் பொருட்க்களை கொண்டுள்ளது. (வினா விடைகள்)
A. தாவரங்கள் மற்றும் விலங்குகள்
B. களை மற்றும் மரங்கள்
C. உயிர் மற்றும் உயிரற்ற பொருட்கள்
D. தவளை மற்றும் மனிதன்
Answer
C. உயிர் மற்றும் உயிரற்ற பொருட்கள்
6. பின்வரும் எந்த பாக்டீரியம் அமோனியாவை நைட்ரைட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது?
A. நைட்ரசொமொனஸ்
B. பெக்கியடோவா
C. கிளாஸ்டிரிடியம்
D. இ.கோலை
Answer
A. நைட்ரசொமொனஸ்
7. கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
A. வைட்டமின் A
B. வைட்டமின் B
C. வைட்டமின் D
D. வைட்டமின் E
Answer
B. வைட்டமின் B
8. தாவரவியலில் தாவர உலகில் இருவாழ்விகள் என அழைக்கப்படுவது எது?
A. பிரையோபைட்டா
B. டெரிடோபைட்டா
C. தாலோபைட்டா
D. ஆல்கா
Answer
A. பிரையோபைட்டா
9. பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா
A. சூடோமோனாஸ்
B. நாஸ்டாக்
C. அனபினா
D. கிளாஸ்டிரியம்
Answer
A. சூடோமோனாஸ்
10. காற்று சுவாசம் என்பது
A. ஆக்சிஜனைப் பயன்படுத்தி சுவாசித்தல்
B. கார்பன்-டை ஆக்சைடைப் பயன்படுத்தி சுவாசித்தல்
C. நைட்ரஜனைப் பயன்படுத்தி சுவாசித்தல்
D. இவை எதுவும் அல்ல
Answer
A. ஆக்சிஜனைப் பயன்படுத்தி சுவாசித்தல்
11. தொழுஉரம் என்பது (வினா விடைகள்)
A. நைட்ரஜன்
B. பாஸ்பரஸ்
C. கால்நடைத்தீவனம், சானம், சிறுநீர் கலந்த மக்கிய கலவை
D. இவை எதுவும் அல்ல
Answer
C. கால்நடைத்தீவனம், சானம், சிறுநீர் கலந்த மக்கிய கலவை
12. வாலிஸ்னேரியா என்பது
A. முழுவதும் மூழ்கிய நீர்த்தாவரம்
B. மிதக்கும் நீர்த்தாவரம்
C. வறண்டநிலத் தாவரம்
D. மீசோபைட்
Answer
A. முழுவதும் மூழ்கிய நீர்த்தாவரம்
13. தாவரவியலில் இந்தியாவில் தாவரப்பெருக்கத்திற்கான பணியில் கீழ்க்கண்டவர்களுள் புகழ்பெற்றவர் யார்?
A. சந்திரபோஸ்
B. ஷுல்
C. எம். எஸ். சுவாமிநாதன்
D. லக்ஷ்மி ஐயர்
Answer
C. எம். எஸ். சுவாமிநாதன்
14. சில வறண்டநிலத் தாவரங்களில், இலைகள் முட்களாக மாறியுள்ளன. இவற்றுள் அதைத் தேர்ந்தெடு.
A. காகிதப்பூ
B. ஒபன்ஷியா
C. புல்
D. பாஸிப்புளோரா
Answer
B. ஒபன்ஷியா
15. இரவில் திறந்து பகலில் மூடும் இலைத்துளைகள் எவற்றில் இருக்கின்றன
A. சதைப்பற்றுள்ள தாவரங்கள்
B. நடுநிலைத் தாவரங்கள்
C. நீர்நிலைத் தாவரங்கள்
D. வறண்டநிலத் தாவரங்கள்
Answer
A. சதைப்பற்றுள்ள தாவரங்கள்
16. தாவரவியலில் நீலப் பச்சை பாசிகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
I. நீலப் பச்சை பாசிகளில் செல்கள் புரோகேரியோட்டிக் வகையைச் சார்ந்தவை.
II. நீலப் பச்சை பாசிகளின் சேமிப்பு உணவுப் பொருள் லேமினேரின்.
III. சவ்வு சூழ்ந்த கனிகங்கள் நீலப்பச்சை பாசிகளின் செல்களில் இல்லை.
IV. நீலப் பச்சை பாசிகளில் கசையிழைகள் இல்லை.
A. II மற்றும் IV
B. I மற்றும் II
C. II மற்றும் III
D. I, III மற்றும் IV
Answer
D. I, III மற்றும் IV
17. தவறான பொருத்தத்தைக் கண்டறிக.(வினா விடைகள்)
A. குலோரெல்லா - ஆல்கா
B. பெனிசிலியம் - பாக்டீர்யம்
C. அகாரிகஸ் - பூஞ்சைக் காளான்
D. அஸ்னியா - லைக்கன்
Answer
B. பெனிசிலியம் - பாக்டீர்யம்
18. தாவர உலகில் மிகப்பெரிய சூலைப் பெற்றுள்ள தாவரம்
A. நீட்டம்
B. வால்வாக்ஸ்
C. சைகஸ்
D. அனபீனா
Answer
C. சைகஸ்
19. பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுவது
A. ஏலக்காய்
B. கடுகு
C. மிளகு
D. மிளகாய்
Answer
B. கடுகு
20. தாவரவியல் கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சுவாச நிகழ்வில் பங்கு கொள்வது எது?
A. குளோரோபிளாஸ்ட்
B. பெர்ராக்சிசோம்கள்
C. மைட்டோகாண்டிரியா
D. மேற்கண்ட அனைத்தும்
Answer
D. மேற்கண்ட அனைத்தும்
21. எலெக்ட்ரான் கடத்தும் சங்கிலியில் ஒரு FADH2 கொடுக்கும் ATPகள்
A. ஒரு ATP
B. இரு ATP-க்கள்
C. மூன்று ATP-க்கள்
D. நான்கு ATP-க்கள்
Answer
B. இரு ATP-க்கள்
22. தாவரங்களை, வாழிடத்தை அடிப்படையாக கொண்டு நீர்த்தாவரம், நீர்நிலத்தாவரம் மற்றும் வறண்ட நிலத் தாவரம் என்று வகைப்படுத்தியவர்
A. வார்மிங்
B. டார்வின்
C. லீவர்
D. மிஸ்ரா
Answer
A. வார்மிங்
23. இந்திய தாவர நோயியலின் தந்தை எனபடுபவர் (வினா விடைகள்)
A. எட்வின் ஜான் பட்லர்
B. ஆர்னால்டு
C. ஆன்ட்ரூஸ்
D. லின்னேயஸ்
Answer
A. எட்வின் ஜான் பட்லர்
24. ஒன்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தொகுப்பாக ஒரே அலகாக வாழும் உயிரினங்களுக்கும், அவற்றின் சுற்றுப்புறத்திற்கும் இடையேயான உறவை படித்தறியும் பிரிவிற்கு என்ன பெயர்?
A. ஒருங்கிணைப்பு சூழலியல் அல்லது பிணைப்பு சூழலியல்
B. தனிப்பட்ட சூழலியல்
C. மரபணு சூழலியல்
D. மூலங்களின் சூழலியல்
Answer
A. ஒருங்கிணைப்பு சூழலியல் அல்லது பிணைப்பு சூழலியல்
25. தாவரவியலில் பக்க வேர்களைத் தோற்றுவிப்பது
A. பெரிசைக்கிள்
B. கார்டெக்ஸ்
C. எபிடேர்மிஸ்
D. இழைகள்
Answer
A. பெரிசைக்கிள்
26. மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேச்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூறக் காரணம்
A. mRNA மற்றும் rRNA
B. DNA மற்றும் RNA
C. RNA மற்றும் ரைபோசோம்கள்
D. DNA மற்றும் ரைபோசோம்கள்
Answer
D. DNA மற்றும் ரைபோசோம்கள்
27. கீழ்க்கண்ட தொடர்களில் கொடுக்கப்பட்டுள்ள வைட்டமின்களில் எந்த தொடர் தண்ணீரில் கரையக் கூடியவை?
A. தையமின், ரைபோபிளேவின், வைட்டமின் – D மற்றும் வைட்டமின் – E
B. நையாசின், வைட்டமின் – B12, வைட்டமின் – K, மற்றும் வைட்டமின் – D
C. தையாமின், ரைபோபிளேவின், நையாசின் மற்றும் வைட்டமின் – B12
D. வைட்டமின் -C, வைட்டமின் -E, வைட்டமின் - K, மற்றும் ஃபோலிக் அமிலம்
Answer
C. தையாமின், ரைபோபிளேவின், நையாசின் மற்றும் வைட்டமின் – B12
28. நவீன தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A. ராபர்ட் பிரெளன்
B. பெந்தம்
C. கரோலஸ் லின்னேயஸ்
D. ஹூக்கா
Answer
C. கரோலஸ் லின்னேயஸ்
29. கருவுறாக் கனியாதல் என்பது ________ உருவாதல்
A. கருவுறுதல் இல்லாமல் விதைகள்
B. மகரந்தச்சேர்க்கை இல்லாமல் கனிகள்
C. கருவுருதலுக்குப் பின் விதைகள்
D. கருவுறுதல் இல்லாமல் கனிகள்
Answer
B. மகரந்தச்சேர்க்கை இல்லாமல் கனிகள்
30. வேரில் உணவைச் சேமித்து வைக்கும் தாவரம் (வினா விடைகள்)
A. கேரட்
B. முள்ளங்கி
C. பீட்ரூட்
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
31. சோயாபீன்ஸ் எண்ணையில் உள்ளது
A. 30 – 45% புரதம்
B. 2 – 10% புரதம்
C. 60 – 75% புரதம்
D. 21 – 30% புரதம்
Answer
A. 30 – 45% புரதம்
32. தாவரவியலில் உலர் விதைகள் நீரில் உப்பும் நிகழ்வு இதனால் ஏற்படுகிறது?
A. பரவல்
B. சவ்வூடு பரவல்
C. உள்ளீர்த்தல்
D. b மற்றும் c
Answer
C. உள்ளீர்த்தல்
33. ‘சூழ்நிலைத்தொகுப்பு’ என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர்
A. டான்ஸி
B. A.G.டான்ஸி
C. ஓடம்
D. ஹாக்கில்
Answer
B. A.G.டான்ஸி
34. மாஃர்பின் மற்றும் ஹெராயின் பெறப்படும் தாவரம்
A. ரனுங்குலஸ் ஸ்கிளீரடஸ்
B. பியூமரியா இண்டிகா
C. பப்பவர் சோம்னிபெரம்
D. ராவுல்பியா செர்பென்டைன்
Answer
C. பப்பவர் சோம்னிபெரம்
35. 'செல் கோட்பாடு' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
I. அனைத்துச் செல்களும் செவ்வக வடிவானவை
II. உயிரினங்களின் வாழ்வின் அடிப்படை அலகு செல் ஆகும்
III. அனைத்துச் செல்களும் பச்சைய நிறமிகளைப் பெற்றிருக்கும்
IV. அனைத்துச் செல்களும் மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல் பகுப்புகளை மேற்கொள்ளும்
A. I மற்றும் II
B. II மற்றும் IV
C. III மற்றும் IV
D. II மட்டும்
Answer
D. II மட்டும்
36. இருள் வினை நடைபெற இது தேவையில்லை (வினா விடைகள்)
A. நீர்
B. சூரிய ஒலி
C. CO2
D. பச்சையம்
Answer
B. சூரிய ஒலி
37. டார்வின் எழுதிய ஒரு நூல்
A. பிலாஸஃபி ஜுவாலஜிக்
B. ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் (சிற்றினங்களின் தோற்றம்)
C. ஆரிஜின் ஆஃப் லைஃப்
D. ஜெனடிக்ஸ் அண்ட் ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ்
Answer
B. ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் (சிற்றினங்களின் தோற்றம்)
38. இனப்பெருக்கச் செல்களில் ஏற்படும் திடீர் மற்றம் இவ்வாறாக அழைக்கப்படுகிறது?
A. உடல் செயல் திடீர் மாற்றம்
B. ஜீனோமிக் திடீர் மாற்றம்
C. மரபியல் திடீர்மாற்றம்
D. கொல்லம் திடீர் மாற்றம்
Answer
C. மரபியல் திடீர்மாற்றம்
39. தாவரவியல் ஒளிவினையின் வினைபொருட்கள் யாவை?
A. கார்போஹைட்ரேட்
B. ADP + NADPH2
C. ATP & NADP
D. ATP + NADPH2
Answer
D. ATP + NADPH2
40. பாலில் செறிந்துள்ள வைட்டமின்கள் என்னென்ன? (வினா விடைகள்)
A. வைட்டமின் B1, B2, B4
B. வைட்டமின் B2, B4, C
C. வைட்டமின் C, B2, B4
D. வைட்டமின் B2, B4, B12
Answer
D. வைட்டமின் B2, B4, B12
41. பின்வருவனவற்றுள் எவை நீலப்பச்சைப்பாசியைச் சாராதவை?
A. கிராம் நெகடிவ் ஒளிச்சேர்க்கையின் நீலப்பச்சைபாசி
B. 300 கோடி ஆண்டுகளாக வாழ்வது
C. ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பச்சைப் பாசி
D. சர்காசம்
Answer
D. சர்காசம்
42. இலைத்துளைகள் மூடுவதற்க்குக் காரணமாக இருப்பது
A. ஆக்சின்
B. ஜிப்ரலின்
C. சைட்டோகைனின்
D. அப்சிசிக் அமிலம்
Answer
D. அப்சிசிக் அமிலம்
43. தாவர செல்களில் உணவைச் சேமிப்பது எது?
A. பிளாஸ்டிடுகள்
B. சென்ட்ரோசோம்
C. ரிபோசோம்
D. லைசோசோம்
Answer
A. பிளாஸ்டிடுகள்
44. தாவரவியலில் ரத்தப் புற்றுநோய்க்கு எதிரான மருந்து எத்தாவாரத்தில் இருந்து கிடைக்கிறது?
A. ஜின்ஜிபார்
B. நித்யகல்யாணி
C. சூரியகாந்தி
D. துளசி
Answer
B. நித்யகல்யாணி
45. புரோகேரியாடிக் செல் குறித்து எது உண்மை இல்லை?
A. மைட்டாசிஸ் செல் பகுப்பு கிடையாது
B. குரோமோசோம்களில் டி.என்.ஏ. வுடன் புரதம் இணைந்திருப்பதில்லை
C. மைட்டோகாண்ட்ரியா போன்ற செல் உறுப்புகள் இருப்பதில்லை
D. சவ்வினால் சூழப்பட்ட உட்கரு
Answer
D. சவ்வினால் சூழப்பட்ட உட்கரு
46. ஜெனிரா பிளாண்டாரம் வெளியிடப்பட்ட ஆண்டு?
A. 1835
B. 1735
C. 1937
D. 1939
Answer
C. 1937
47. தாவரவியல் நிலக்கடலையில் டிக்கா நோயைத் தோற்றுவிப்பது எது?
A. செலாஜினெல்லா
B. செர்கோஸ்போரா
C. மைக்கோபாக்டிரியம்
D. கிளாஸ்டிரியம்
Answer
B. செர்கோஸ்போரா
48. விதையில்லா திராட்சை உருவாகக் காரணமான ஹார்மோன்? (வினா விடைகள்)
A. ஜிப்ரல்லின்
B. ஆக்சின்
C. IAA
D. எத்திலின்
Answer
A. ஜிப்ரல்லின்
49. தேசிய நேச்சுரோபதி (Naturopathy) நிலையம் அமைந்துள்ள இடம்
A. பூனே
B. மும்பை
C. கொல்கத்தா
D. சென்னை
Answer
A. பூனே
50. தாவரவியல் மூடப்படாத விதைத் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு தருக
A. நெல்
B. பனை
C. சைக்கஸ்
D. ஆந்த்ரோசிஸ்
Answer
C. சைக்கஸ்
51. தாவர இலைகளில் பச்சையச் சோகை (இலைகள் மஞ்சள் நிறமாதல்)க்குக் காரணம்
A. நைட்ரஜன் தட்டுப்பாடு
B. பாஸ்பரஸ் தட்டுப்பாடு
C. கால்சியம் தட்டுப்பாடு
D. மாங்கனீஸ் தட்டுப்பாடு
Answer
A. நைட்ரஜன் தட்டுப்பாடு
52. தாவரவியல் ரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவம் (வினா விடைகள்)
A. மால்டோஸ்
B. சுக்ரோஸ்
C. டிரைடாக்ஸ்
D. லேட்டக்ஸ்
Answer
D. லேட்டக்ஸ்
53. அகர்-அகர் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
A. கடல்பாசி
B. நைட்ரஜன் வாயு
C. முள்ளங்கி
D. ஜெல்லிடியம் மற்றும் கிராஸிலேரியா போன்ற சிவப்பு ஆல்காக்களிருந்து
Answer
D. ஜெல்லிடியம் மற்றும் கிராஸிலேரியா போன்ற சிவப்பு ஆல்காக்களிருந்து
54. தனிச் செல் புரத உற்பத்திக்குப் பயன்படும் பூஞ்சை
A. சாக்கோரோமைசிஸ் செரிவிசியே
B. ஆல்கலிஜின்கள்
C. ஸ்பைரிலுனா
D. கிளாமிடோமோனஸ்
Answer
A. சாக்கோரோமைசிஸ் செரிவிசியே
55. மூங்கில் வகை தாவரம்
A. மரம்
B. புதர்
C. களை
D. புல்
Answer
D. புல்
56.தாவரவியல் 'சதைப்பற்றுள்ள தாவரங்கள்' அதிகமாக இங்கு காணப்படுகின்றன (வினா விடைகள்)
A. வெப்பமண்டல மழைக் காடுகள்
B. இலையுதிர்க் காடுகள்
C. பாலைவனம்
D. தூந்திர வனப்பகுதி
Answer
C. பாலைவனம்
57. போமாலஜி இதனை பற்றிய இயலாகும்
A. காய்கறிகள்
B. பூக்கள்
C. பழப்பயிர்கள்
D. செடிகள்
Answer
C. பழப்பயிர்கள்
58. பச்சையத்தின் உற்பத்திக்குத் தேவைப்படும் முக்கியப் பொருள்
A. Mg
B. Fe
C. Cl
D. Mn
Answer
A. Mg
59. தாவரவியல் இலை அமைப்பின் புறத்தோலின் வெளி அடுக்கு என்று அழைக்கப்படுவது எது?
A. மேற்புறத்தோல்
B. கியூட்டிக்கிள்
C. பித்
D. கார்டெக்ஸ்
Answer
B. கியூட்டிக்கிள்
60. கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக. (வினா விடைகள்)
A. ஃபிலிகோஃபைட்டா
B. ஹிஸ்டிரோஃபைட்டா
C. லைக்கோஃபைட்டா
D. ஷைலோஃபைட்டா
Answer
B. ஹிஸ்டிரோஃபைட்டா
61. C4 பாதை இவ்வாறு அழைக்கப்படுகிறது
A. EMP பாதை
B. ஹெட்ச்-ஸ்லாக் பாதை
C. ஒளிச்சுவாசம்
D. எலெக்ட்ரான் கடத்தல் தொடர்
Answer
B. ஹெட்ச்-ஸ்லாக் பாதை
62. கேரியோகைனசிஸ் எனும் நிலை எப்போது உருவாகும்
A. அனாபேஸ்
B. டீலோபேஸ்
C. மெட்டாபேஸ்
D. மெலோபேஸ்
Answer
B. டீலோபேஸ்
63. 'கிறிஸ்டே' என்பது எதில் காணப்படும்? (வினா விடைகள்)
A. லைசோசோம்
B. ரிபோசோம்
C. மைட்டோகாண்டிரியா
D. சென்ட்ரோசோம்
Answer
C. மைட்டோகாண்டிரியா
64. தாவரவியல் எந்த தாவரத்தில் இருந்து ஆற்றல் பெறப்படுகிறது?
A. யூபோர்பியா
B. அல்பல்பா
C. ஆலிவ்
D. சோயாபீன்ஸ்
Answer
A. யூபோர்பியா
65. உயிரினங்களை ஐந்து வகையாக வகைப்படுத்தியவர் யார்?
A. டார்வின்
B. விக்டேகர்
C. லின்னேயஸ்
D. பெந்தம்
Answer
B. விக்டேகர்
66. இரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம்
A. 1:2:1
B. 9:3:3:1
C. 1:1:1:1
D. 2:1:1
Answer
C. 1:1:1:1
67. புகையிலை மொசைக் வைரஸில் காணப்படும் மரபுப் பொருள்
A. டி.என்.ஏ
B. ஆர்.என்.ஏ
C. டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ
D. ஏதுமில்லை
Answer
B. ஆர்.என்.ஏ
68. கீழ்கண்டவற்றுள் பொருந்தாதவற்றை எடுத்து எழுதுக (வினா விடைகள்)
A. பெர்ரி
B. காப்சூல்
C. ட்ரூப்
D. பெபோ
Answer
B. காப்சூல்
69. காரியப்சிசை லெகூமிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது
A. இது ஒரு உலர்கனி
B. இது ஒரு தனிக்கனி
C. கனி உறைவிதை உறையுடன் இணைத்துள்ளது
D. ஓர் அறை உடைய மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகிறது
Answer
C. கனி உறைவிதை உறையுடன் இணைத்துள்ளது
70. மஞ்சள் கிடைப்பது அதன் (வினா விடைகள்)
A. வேரிலிருந்து
B. தரை மேல் தண்டிலிருந்து
C. தரைகீழ் தண்டிலிருந்து
D. தனியாக கிடைக்கிறது
Answer
C. தரைகீழ் தண்டிலிருந்து
71. 'ஸ்டீராய்டுகள்' என்பவை
A. கூட்டு லிபிடுகள்
B. தனி லிபிடுகள்
C. வருவிக்கப்பட்ட லிபிடுகள்
D. இவற்றுள் ஏதுமில்லை
Answer
C. வருவிக்கப்பட்ட லிபிடுகள்
72. மென்டல் தன்னுடைய சோதனைக்காக, தோட்டத்து பட்டாணிச் செடியில் எத்தனை ரகங்களைத் தேர்வு செய்தார்?
A. 2
B. 7
C. 14
D. 71
Answer
B. 7
73. பின்வரும் தாவர இனத்தின் வகைப்பாட்டின் பிரிவுகளை இறங்கு வரிசையில் எழுதுக. (வினா விடைகள்)
I. பிரிவு டேரிடோபைட்டா
II. பிரிவு தாலோபைட்டா
III. பிரிவு ஸ்பெர்மேட்டோபைட்டா
IV. பிரிவு பிரையோபைட்டா
A. IV, II, III, I
B. III, I, IV, II
C. II, I, IV, III
D. I, IV, II, III
Answer
B. III, I, IV, II
74. கீழ்க்கண்ட எந்த ஆல்கா அகர்-அகர் தயாரிக்கப் பயன்படுகிறது?
A. ஜெலிடியம் மற்றும் கிராஸிலேரியா
B. கிராஸிலேரியா மற்றும் சர்காஸம்
C. லேமினாரியா மற்றும் குளோரெல்லா
D. இவை அனைத்தும்
Answer
A. ஜெலிடியம் மற்றும் கிராஸிலேரியா
75. கீழ்க்கண்டவற்றுள் எது ஜெம்மா கிண்ணம் மூலம் பாலிலா இனபெருக்கம் செய்கிறது?
A. பிரையோபைடுகள்
B. டெரிடோபைடுகள்
C. நீட்டேல்ஸ்
D. A மற்றும் B
Answer
A. பிரையோபைடுகள்
76. சுற்றுச் சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டியைத் தேர்ந்தெடு.
A. பாக்டீரியா
B. பூஞ்சை
C. லைக்கன்கள்
D. ஆல்கா
Answer
C. லைக்கன்கள்
77. பென்சிலின் என்ற மருந்து தயாரிக்கப் பயன்படும் பூஞ்சையை தேர்ந்தெடு?
A. பெனிசிலியம் கிரைசோஜுனம் மற்றும் பெனிசிலியம் நொட்டேட்டம்
B. பெனிசிலியம் நொட்டேட்டம் மற்றும் கிளாவிஸ்செப்ஸ் பர்புரியா
C. பெனிசிலியம் நொட்டேட்டம் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ்
D. பெனிசிலியம் நொட்டேட்டம் மட்டும்
Answer
A. பெனிசிலியம் கிரைசோஜுனம் மற்றும் பெனிசிலியம் நொட்டேட்டம்
78. சனப்பை தாவரத்தின் அறிவியல் பெயரைத் தேர்ந்தெடு.
A. டிரிட்டிக்கம் வல்கேர்
B. குரோட்டலேரியா ஜன்ஸியா
C. சையாமாப்ஸிஸ் டெட்ரகோனோலோபா
D. கஸ்குட்டா ரிஃப்ளெக்ஸா
Answer
B. குரோட்டலேரியா ஜன்ஸியா
79. கீழ்க்கண்ட எந்த வைட்டமின் முளைகட்டிய பருப்புகளில் காணப்படுகிறது?
A. வைட்டமின் B1
B. வைட்டமின் B3
C. வைட்டமின் K
D. வைட்டமின் D
Answer
A. வைட்டமின் B1
80. கீழ்க்கண்டவற்றுள் எது டெரிடோஃபைட்டு மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்துகின்றது?
A. சைலக் குழாய்கள்
B. சைலக் குழாய்கள் மற்றும் டிரக்கீடுகள்
C. டிரக்கீடுகள்
D. புளோயம் திசுக்கள்
Answer
C. டிரக்கீடுகள்
81. கீழ்க்கண்ட எந்தப் பூச்சிக் கொல்லி சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்த பயன்படுகிறது?
A. குளோரோபைரிபாஸ்
B. லின்டேன்
C. தையோடேன்
D. மெட்டாசிஸ்டாக்ஸ்
Answer
D. மெட்டாசிஸ்டாக்ஸ்
82. எந்த வருடம் MSSRF தொடங்கப்பட்டது?
A. 1995
B. 1996
C. 1988
D. 1999
Answer
C. 1988
83. எந்த முறையில் 90% முதல் 95% வரை நீராவிப்போக்கு நடைபெறுகிறது?
A. கியூட்டிக்கிள் நிராவிப் போக்கு
B. இலைத்துளை நிராவிப் போக்கு
C. பட்டைத்துளை நிராவிப் போக்கு
D. இவற்றில் எதுவுமில்லை
Answer
B. இலைத்துளை நிராவிப் போக்கு
84. பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான ___ ஆகும்
A. யூகேரியோட்டுகள்
B. புரோகேரியோட்டுகள்
C. புரோட்டோசோவா
D. புரோட்டிஸ்டா
Answer
B. புரோகேரியோட்டுகள்
85. பாக்டீரியா வகைபாட்டியலில் _____ என்னும் உலகத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது.
A. மொனிரா
B. புரோடிஸ்டா
C. அனிமாலியா
D. பூஞ்சை
Answer
A. மொனிரா
86. பாக்டீரியாவில் புரதச் சேர்க்கையானது ______ வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.
A. 60 S
B. 70 S
C. 80 S
D. 90 S
Answer
B. 70 S
87. பின்வருவனவற்றுள் எவை யூகேரியோட் ஆகும்?
A. கிளாமிடோமோனஸ்
B. சர்காசம்
C. ஈஸ்ட்
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
88. திராட்சையிலுள்ள சர்க்கரை ____ ஆல் நொதிக்கப்படுகிறது.
A. பாக்டீரியா
B. புரோட்டோசோவா
C. ஈஸ்ட்
D. சயனோபாக்டீரியா
Answer
C. ஈஸ்ட்
89. தாவர வகைப்பாட்டியலில் மிகவும் பழமையான முறை _________
A. செயற்கை வகைப்பாட்டு முறை
B. இயற்கை வகைப்பாட்டு முறை
C. மரபுவழி வகைப்பாட்டு முறை
D. நவீன வகைப்பாட்டு முறை
Answer
A. செயற்கை வகைப்பாட்டு முறை
90. இருசொற் பெயரிடுதல் முறையை முதன்முதலில் காஸ்பர்டு பாகின் என்பவர் _________ ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தினார்
A. 1603
B. 1613
C. 1623
D. 1633
Answer
C. 1623
91. ___________ மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.
A. ரைசோபியம்
B. அசோஸ்பைரில்லம்
C. அசோலா
D. அசோட்டோபாக்டர்
Answer
C. அசோலா
92. ________ இலைச் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்
A. எகில் மார்மிலோஸ்
B. சொலானம் டிரைலொபேட்டம்
C. அகாலிஃபா இன்டிகா
D. ஃபில்லாந்தஸ் அமாரஸ்
Answer
C. அகாலிஃபா இன்டிகா
93. நகரும் தன்மையுள்ள ஒரு செல் பாசிக்கு எடுத்துக்காட்டு தருக.
A. குளோரெல்லா
B. கிளாமைடோமோனஸ்
C. ஸ்பைரோகைரா
D. கிளாடோஃபோரா
Answer
B. கிளாமைடோமோனஸ்
94. காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுவது _________
A. குப்பைமேனி
B. தூதுவளை
C. வில்வம்
D. கீழாநெல்லி
Answer
B. தூதுவளை
95. ______ என்ற பூஞ்சையானது இளைஞர்களிடத்தில் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
A. அல்புகோ கோண்டிடா
B. செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா
C. கிளாவிசெப்ஸ் பர்பூரியா
D. ஆஸ்பியா கோஸ்பீ
Answer
C. கிளாவிசெப்ஸ் பர்பூரியா
96. தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்?
A. லாமார்க்
B. திரிவிரான்ஸ்
C. நெகமய்யாக்ரூ
D. லின்னேயஸ்
Answer
C. நெகமய்யாக்ரூ
97. பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A. உட்கரு – செல்லின் கட்டுப்பாட்டு மையம்
B. மைட்டோகாண்ட்ரியா – செல்லின் ஆற்றல் மையம்
C. லைசோசோம்கள் - செல்லின் தற்கொலைப்பை
D. சென்ட்ரியோல் - தாவர செல்களில் மட்டும் உள்ளது
Answer
D. சென்ட்ரியோல் - தாவர செல்களில் மட்டும் உள்ளது
98. உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை எது?
A. இரட்டைத் தேங்காய்
B. வெங்காயம்
C. மாங்காய்
D. பனைமரம்
Answer
A. இரட்டைத் தேங்காய்
99. CNR ராவ் ________ எரிபொருளை செயற்கை ஒளிக்சேர்கை நிகழ்ச்சி மூலம் உற்பத்தி செய்தார்.
A. உயிரி டீசல்
B. ஆற்றல் பெட்ரோல்
C. ஹைட்ரஜன்
D. உயிரி எத்தனால்
Answer
C. ஹைட்ரஜன்
100. ___________ ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்களாக செயல்படுகின்றன.
A. குரோமோமியர்
B. சென்ட்ரோமியர்
C. இடியோமியர்
D. டீலோமியர்
Answer
D. டீலோமியர்
101. இருசொற் பெயரிடுதல் முறையை லின்னேயஸ் முதன் முதலில் தம்முடைய _________ என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
A. ஜெனிரா பிளான்டாரம்
B. ஸ்பீசிஸ் பிளான்டாரம்
C. சிற்றினங்களின் தோற்றம்
D. சிற்றினங்களின் வரிசை
Answer
B. ஸ்பீசிஸ் பிளான்டாரம்
102. பின்வரும் நிறுவனங்களுள் எந்தவொன்று, உணவு பாதுகாப்பைக் கண்காணிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவதின் மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது போன்றவை இந்த ஆணையத்தின் பொறுப்பாகும்.
A. BIS
B. AGMARK
C. FPO
D. FSSAI
Answer
D. FSSAI
103. மெண்டலின் இருபண்புக் கலப்பு ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் புறத்தோற்ற விகிதம் ___________
A. 9:3:3:1
B. 9:1:3:3
C. 1:1:1:1
D. 1:3:3:1
Answer
A. 9:3:3:1
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்