ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் வினா விடைகள்

1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க - 'அவன் குட் பாய்'
A. அவன் கோபக்காரன்
B. அவன் விளையாட்டுப் பையன்
C. அவன் கெட்ட பையன்
D. அவன் நல்ல பையன்
Answer
D. அவன் நல்ல பையன்
2. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக 'பாஸ்டா போ'
A. விரைவாகச் செல்
B. விரைவாகச் செல்லாதே
C. மெதுவாகச் செல்
D. மெதுவாகப் போகாதே
Answer
A. விரைவாகச் செல்
3. 'கரண்ட்' இச்சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லைத் தருக
A. பேட்டரி
B. மின்சாரம்
C. மின்விசை
D. மின்பொறி
Answer
B. மின்சாரம்
4. தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக . கந்தன் தொழிலில் டெவலப் அடைந்தான்
A. முன்னேற்றம்
B. பின்நிலை
C. உயர்ந்த நிலை
D. வளரும் நிலை
Answer
A. முன்னேற்றம்
5. "ஆற்றவும் கட்டறார் அறிவுடையார்" 'ஆற்றவும்' என்பதன் ஆங்கிலச் சொல்
A. entirety
B. Fullness
C. excess
D. exceedingly
Answer
A. entirety
6. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க. 'அவன் ஒரு மூடி டைப்'
A. கோபமானவன்
B. வேகமானவன்
C. மனவேறுபாட்டினன்
D. அன்பானவன்
Answer
C. மனவேறுபாட்டினன்
7. 'Dictionary' என்பதன் தமிழ்ச் சொல் எது ?
A. அகராதி
B. பொருள்
C. அர்த்தம்
D. உணர்தல்
Answer
A. அகராதி
8. "இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா" 'இந்து' என்பதன் ஆங்கிலச் சொல்
A. Moon
B. Camphor
C. Rock-Salt
D. Sacrifice
Answer
A. Moon
9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை எழுதுக 'ஆஸ்பத்திரி' செல்ல வேண்டும்
A. ஆசுபத்திரி
B. மருத்துவமனை
C. வீட்டுமனை
D. மருந்தகம்
Answer
B. மருத்துவமனை
10. நேரான தமிழ்ச் சொல் அறிக 'இன்டர்நெட்'
A. கணிப்பொறி
B. இமெயில்
C. மின்னணுவியல்
D. இணையம்
Answer
D. இணையம்
11. “திருத்தப்படாத அச்சுப்படி’என்பதன் ஆங்கிலச் சொல்
A. YELLO PROOF
B. GREEN PROOF
C. RED PROOF
D. BLOCK PROOF
Answer
B. GREEN PROOF
12. 'CONSUMER' என்பதன் சரியான தமிழ்ச் சொல்
A. உண்பவர்
B. வாடிக்கையாளர்
C. நுகர்வோர்
D. அனுபவிப்பவர்
Answer
C. நுகர்வோர்
13. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை தருக 'FIRST RANK'
A. முதல் வகுப்பு
B. முதல் தரம்
C. முதல் ரேங்க்
D. பஸ்ட் ரேங்க்
Answer
B. முதல் தரம்
14. "லைசன்ஸ்" என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை எழுதுக
A. உரிமம்
B. உதிரி
C. உரிமையாளர்
D. விடுதி
Answer
A. உரிமம்
15. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லை எழுதுக 'Missile'
A. அணுகுண்டு
B. ஆகாய விமானம்
C. செயற்கைக் கோள்
D. ஏவுகணை
Answer
D. ஏவுகணை
16. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் "டவுன் பஸ்"
A. நகரப்பேருந்து
B. குருந்தடப் பேருந்து
C. குறுந்தட வண்டி
D. நகர வண்டி
Answer
A. நகரப்பேருந்து
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்