இலக்கணக் குறிப்பறிதல் / புணர்ச்சி விதிகள் கண்டறிதல் வினா விடைகள்

1. "கலகல" வென – இலக்கணக் குறிப்பு தருக
A.இரட்டைக்கிளவி
B.அடுக்குத்தொடர்
C.சிறப்பும்மை
D.உவமைத்தொகை
Answer
A. இரட்டைக்கிளவி
2. "பைங்கூல்" - இலக்கணக் குறிப்பு யாது?
A.பண்புத்தொகை
B.வினைத்தொகை
C.தொழிற்பெயர்
D.வினையாலணையும் பெயர்
Answer
A. பண்புத்தொகை
3. "உயர்க" என்பதன் இலக்கணக் குறிப்பு யாது ?
A.வியங்கோள் வினைமுற்று
B.வினைமுற்று
C.தொழிற்பெயர்
D.வினையாலணையும் பெயர்
Answer
A. வியங்கோள் வினைமுற்று
4. "கடிமிடறு" என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
A.தொழிற்பெயர்
B.இரண்டாம் வேற்றுமை தொகை
C.வினைத்தொகை
D.உரிச்சொற்றொடர்
Answer
D. உரிச்சொற்றொடர்
5. 'சினங்காப்பான்' - இதன் இலக்கணக் குறிப்பு என்ன ?
A.இரண்டாம் வேற்றுமைத்தொகை
B.மூன்றாம் வேற்றுமைத் தொகை
C.நான்காம் வேற்றுமைத் தொகை
D.ஐந்தாம் வேற்றுமைத் தொகை
Answer
A. இரண்டாம் வேற்றுமைத்தொகை
6. 'வாழ்க' என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
A.ஏவல் வினைமுற்று
B.வியங்கோள் வினைமுற்று
C.தன்மை வினைமுற்று
D.முன்னிலை வினைமுற்று
Answer
B. வியங்கோள் வினைமுற்று
7. ’வரையா மரபு’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
A.குறிப்பு பெயரெச்சம்
B.குறிப்பு வினையெச்சம்
C.தெரிநிலை பெயரெச்சம்
D.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answer
D. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
8. இலக்கனக்குறிப்புச் சொல்லைத் தேர்க .தொழிற்பெயர் அல்லாதது எது ?
A.ஒழுக்கம்
B.விழுப்பம்
C.இடும்பை
D.கெடும்
Answer
D. கெடும்
9. கிழ்க்காணும் இலக்கனக்குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க. வினைத்தொகை
A.ஒளிர்த்தமிழ்
B.பசிப்பிணி
C.தொடுவானம்
D.ஓங்குமலை
Answer
B. பசிப்பிணி
10. இலக்கணக் குறிப்பறிந்து பொருத்துக
a. தேனும் மீனும் 1. வினையெச்சம்
b. பணிந்து 2. எண்ணும்மை
c. நெடுநீர் 3. உயர்வு சிறப்பும்மை
d. அமிழ்தினும் 4. பண்புத்தொகை
a
b
c
d
A.
2
1
4
3
B.
1
2
3
4
C.
3
4
1
2
D.
4
3
2
1
Answer
A. 2 1 4 3
11. 'சாலப் பசித்தது' என்பது........தொடர்
A.உரிச்சொல்
B.இடைச்சொல்
C.வினைச்சொல்
D.பெயர்ச்சொல்
Answer
A. உரிச்சொல்
12. கிழ்வருவனவற்றுள் தொடர்மொழி எது?
A.அந்தமான்
B.மண்
C.படம் பார்த்தான்
D.கண்
Answer
C. படம் பார்த்தான்
13. பொருத்துக
a. தொழிற்பெயர் 1. நன்றி
b. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் 2. அகழ்வார்
c. பண்புப்பெயர் 3. சூடு
d. வினையாலணையும் பெயர் 4. வருதல்
a
b
c
d
A.
4
3
1
2
B.
4
3
2
1
C.
3
4
1
2
D.
3
4
2
1
Answer
A. 4 3 1 2
14. கீழ்க்கண்டவற்றில் எது மரூஉ சொல்லாகும்
A.சோழநாடு
B.திருநெல்வேலி
C.கோவை
D.மதுரை
Answer
C. கோவை
15. 'இலஞ்சி' என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
A.இடைப்போலி
B.முதற்ப்போலி
C.கடைப்போலி
D.முற்றுப்போலி
Answer
A. இடைப்போலி
16. பொருத்துக
a. இலக்கணமுடையது 1. கோவை
b. இலக்கணப்போலி 2. நிலம்
c. மரூஉ 3. புறநகர்
a
b
c
A.
2
3
1
B.
3
2
1
C.
1
2
3
D.
2
1
3
Answer
A. 2 3 1
17. கீழ்க்கண்டவற்றில் உவமை எது ?
A.தமிழமுது
B.கண்மலர்
C.வாய்பவளம்
D.தேன்மொழி
Answer
D. தேன்மொழி
18. வாழை + தோட்டம் என்பது ........ புணர்ச்சி
A.இயல்புப் புணர்ச்சி
B.விகாரப்புணர்ச்சி
C.திசைப்புணர்ச்சி
D.பண்புப் பெயர் புணர்ச்சி
Answer
B. விகாரப்புணர்ச்சி
19.
A.
B.
C.
D.
Answer
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்