உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வினா விடைகள்

1. 'தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும்' - இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?
A. கோபம்
B. தவிப்பு
C. ஆட்டம்
D. பாசம்
Answer
D. பாசம்
2. கிணற்றுத் தவளைப் போல – இவ்வுவமையின் பொருள் யாது?
A. அறியாமை
B. அறிதல்
C. நிலைத்தல்
D. மாறுதல்
Answer
A. அறியாமை
3. இஞ்சி தின்ற குரங்கு போல - இவ்வுவம்மையால் கிடைக்கும் பொருள் என்ன?
A. தவிப்பு
B. தாகம்
C. மிருட்சி
D. பலனின்மை
Answer
A. தவிப்பு
4. கடன்பட்டார் நெஞ்சம் போல - உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க
A. மனமகிழ்ச்சி
B. மனவொற்றுமை
C. மயக்கம்
D. மனக்கலக்கம்
Answer
D. மனக்கலக்கம்
5. இலவு காத்த கிளி போல - உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க.
A. ஏமாற்றம்
B. துன்பம்
C. மகிழ்வு
D. மயக்கம்
Answer
A. ஏமாற்றம்
6. தெருநாய் போல - உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க
A. ஆர்வம்
B. அலைச்சல்
C. இன்பம்
D. உணவு
Answer
B. அலைச்சல்
7. பட்டுப்போல - உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க
A. மென்மை
B. முரட்டுத் தன்மை
C. உயர்வு
D. தூய்மை
Answer
A. மென்மை
8. இருதலைக் கொள்ளி எறும்பு போல- - உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க
A. இன்பம்
B. வறுமை
C. தவிப்பு
D. பெருமை
Answer
C. தவிப்பு
9. ஏறுநடை – உவமையால் விளக்கப்பெறும் கருத்து
A. செயல்
B. நட்பு
C. பகை
D. உதவி
Answer
A. செயல்
10. விழலுக்கு இறைத்த நீர்போல - உவமைப் பொருளைக் கூறுக
A. சரியானது
B. பயனற்றது
C. பயனுள்ளது
D. போதுமானது
Answer
B. பயனற்றது
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்