பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் - வினா விடைகள்

1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. வீரம்
B. கோழை
C. மறம்
D. வலி
Answer
B. கோழை
வீரம், மறம், வலி ஆகியவை வீரம் என்ற பொருளை குறிக்கும் கோழை மற்ற மூன்றின் எதிர்சொல் ஆகும்
2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. ஆடுகொடி
B. கொள்பூ
C. உண்குழவி
D. வெஞ்சுடர்
Answer
D. வெஞ்சுடர்
(வெஞ்சுடர் - பண்புத்தொகை, மற்றவை வினைத்தொகைகள்)
3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. எழுதியவர்
B. வரைந்தவர்
C. இயற்றியவர்
D. இயற்றினார்
Answer
D. இயற்றினார்
இயற்றினார் என்பது வினைமுற்று மற்றவை வினையாலணையும் பெயர்கள்
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. நற்றினை
B. குறுந்தொகை
C. பரிபாடல்
D. மலைபடுகடாம்
Answer
D. மலைபடுகடாம்
மலைபடுகடாமைத் தவிர மற்ற மூன்றும் எட்டுத்தொகை பாடல்கள்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. நாலடியார்
B. இனியவை நாற்பது
C. திரிகடுகம்
D. கார் நாற்பது
Answer
D. கார் நாற்பது
6. பின்வறும் வேற்றுமை உருபுகளுள் பொருந்தாச்சொல்லைக் கண்டறிக
A. கண் B. மேல்
C. உள்
D. ஒடு
Answer
D. ஒடு
7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. நாகு
B. மாது
C. ஆறு
D. பாலாறு
Answer
D. பாலாறு
8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. வேய்
B. பீலி
C. எயிறு
D. நிலவு
Answer
D. நிலவு
9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. முகை
B. அலர்
C. செம்மல்
D. முகடு
Answer
D. முகடு
10. பின்வரும் இடைபகாப்பத சொற்களுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
A. தில்
B. உம்
C. பிற
D. உறு
Answer
D. உறு
11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. கனி இதழ்
B. மலரடி
C. காந்தலள் விரல்
D. தமிழமுது
Answer
D. தமிழமுது
12. பின்வரும் அரபுச் சொற்களுக்குள் பொருந்தாச்சொல்லைக் கண்டறிக
A. தகவல்
B. வக்கீல்
C. பாக்கி
D. மைதானம்
Answer
D. மைதானம்
13. நீர்நிலைகளில் வாழும் பறவைகளுள் பொருந்தா பெயரைக் கண்டறிக
A. தாழைக்கோழி
B. பவளக்காலி
C. அரிவாள் மூக்கன்
D. கடலைக்குயில்
Answer
D. கடலைக்குயில்
14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. சிலப்பதிகாரம்
B. சீவக சிந்தாமணி
C. அபிதான சிந்தாமணி
D. வளையாபதி
Answer
C. அபிதான சிந்தாமணி
அபிதான சிந்தாமணி மட்டும் அகராதி நூல் மற்றவை ஐம்பெரும் காப்பியங்கள்
15. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. வெட்சி
B. பொதுவியல்
C. குறிஞ்சி
D. பாடாண்
Answer
B. பொதுவியல்
16. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. பனங்காய்
B. தேங்காய்
C. கத்திரிக்காய்
D. மாங்காய்
Answer
C. கத்திரிக்காய்
கத்திரிக்காய் - செடி வகை, மற்றவை மரம் வகை
17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. தேன்மொழி
B. கயல்விழி
C. மதிமுகம்
D. வளர்தமிழ்
Answer
D. வளர்தமிழ்
வளர்தமிழ் - வினைத்தொகை, மற்றவை உவமைத் தொககள்
18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. புவனம்
B. ஞாலம்
C. மாருதம்
D. இகம்
Answer
C. மாருதம்
மாருதம் - ஆகாயம், மற்றவை உலகத்தைக் குறிக்கும்
19. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. மயன்
B. மயல்
C. மஞ்சு
D. அரயர்
Answer
D. அரயர்
அரயர் - இடைப்போலி, மற்றவை முதற்ப்போலிகள்
20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A. தமிழ்விடுதூது
B. நந்திக்கலம்பகம்
C. முத்தொள்ளாயிரம்
D. கலிங்கத்துப்பரணி
Answer
D. கலிங்கத்துப்பரணி
கலிங்கத்துப்பரணி - ஆசிரியர் செயங்கொண்டார், மற்ற நூல்கின் ஆசிரியர் பெயர் அறிப்படவில்லை
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்