விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் வினா விடைகள்

1. நல்ல குடும்பம் என்பது பல்கலைக்கழகம் – விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
A. நல்ல குடும்பம் எது?
B. நல்ல குடும்பம் எப்படி?
C. நல்ல குடும்பம் என்பது என்ன?
D. நல்ல குடும்பம் எப்படிப்பட்டது?
Answer
C. நல்ல குடும்பம் என்பது என்ன?
2. முயன்றால் முடியாதது இல்லை - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க .
A. முயன்றால் முடியாதோ?
B. முயன்றால் முடியாதது உண்டோ?
C. முயன்றால் முடியாதது இல்லையோ?
D. முயன்றால் முடியுமோ?
Answer
C. முயன்றால் முடியாதது இல்லையோ?
3. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
B. சென்னை எதற்குத் தலைநகரம் ?
C. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைதானா?
D. தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?
Answer
A. தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
4. அது ஒரு மாம்பழம் - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. அது மாம்பழமா?
B. அது யாருடைய மாம்பழம் ?
C. அது என்ன?
D. அது உன் பழமா?
Answer
C. அது என்ன?
5. ஊரோடு ஒத்து வாழ வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. ஊரோடு ஒத்து வாழ வேண்டுமா?
B. எவ்வாறு வாழ வேண்டும்?
C. எதனோடு ஒத்து வாழ வேண்டும்?
D. யாரோடு ஒத்து வாழ வேண்டும்?
Answer
B. எவ்வாறு வாழ வேண்டும்?
6. கண்ணன் இதயம் விசாலமானது - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. கண்ணன் இதயமா விசாலமானது?
B. யார் இதயம் விசாலமானது?
C. இதயம் என்றால் என்ன ?
D. கண்ணன் இதயம் விசாலமானதா?
Answer
B. யார் இதயம் விசாலமானது?
7. துர்க்கை சக்தியான தெய்வம் - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. துர்க்கை சக்தியற்ற தெய்வமா?
B. துர்க்கை எப்படிப்பட்ட தெய்வம்?
C. துர்க்கை சக்தியான தெய்வமா?
D. துர்க்கை என்ன தெய்வம்?
Answer
B. துர்க்கை எப்படிப்பட்ட தெய்வம்?
8. ஔவையார் ஆத்திசூடி பாடினார் - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. ஔவையார் எதனை பாடினார்?
B. ஆத்திச்சூடியைப் பாடியவர் யார்?
C. ஔவையார் பாடிய நூல்கள் யாவை?
D. ஔவையார் ஆத்திச்சூடியைப் பாடினாரா ?
Answer
A. ஔவையார் எதனை பாடினார்?
9. நாலடியார் ஒரு நீதிநூலகம்.
A. நாலடியார் எவ்வகையான நூல்?
B. நாலடியாரை இயற்றியவர் யார்?
C. நாலடியார் என்றால் என்ன ?
D. நாலடியார் – விளக்கம் தருக.
Answer
A. நாலடியார் எவ்வகையான நூல்?
10. வள்ளுவரை அனைவரும் அறிவார் - விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
A. வள்ளுவரை அறியாதார் யார்?
B. வள்ளுவரை அறியாதார் உளரோ
C. வள்ளுவரை அனைவரும் அறிவாரோ?
D. வள்ளுவர் அனைவராலும் அறியப்பட்டவரா?
Answer
A. வள்ளுவரை அறியாதார் யார்?
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்