5 தமிழ் புலவர்கள்

5 தமிழ் புலவர்கள் பற்றி இங்கு விவரமாக பார்போம். தமிழில் புலவர்கள் அறியபட்டவர்கள் ஆயிரங்களில் உள்ளார்கள். அவர்களில் தமிழ் புலவர்களின் பெயர்கள், தமிழ் புலவர்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் புலவர்கள் வரலாறு குறித்து இங்கு பார்ப்போம்.

1. பாரதிதாசன்

பாரதிதாசன் (Bharathidasan) ஒரு முக்கியமான தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் சுதந்திரப் போராளி ஆவார். அவர் 20-ஆம் நூற்றாண்டில் தமிழின் வளர்ச்சிக்கும் சமூக நீதி இயக்கங்களுக்கும் மிகப் பெரிய பங்களிப்பை செய்தவர்.
புதியதோர் உலகு செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்று கூறியவர் பாரதிதாசன் . இன்றைய காலகட்டம் என்பது போரை ரசிக்க கூடிய காலகட்டம். ஆனால் அப்படி இருக்கக்கூடாது. அந்த மனநிலையை வேரோடு சாய்க்க வேண்டும் என்று அன்றைய காலகட்டத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் கூறியிருக்கிறார்

பாரதிதாசனின் இயற்பெயர்

அவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். அவருடைய தந்தை பெயர் கனக சபை. அதனாலே இவர் கனக சுப்புரத்தினம் என்றும் அழைக்கப்பட்டார். இவரை இவருடைய தந்தையார் பெயரையும் சேர்த்துக்கொண்டு கனக சுப்பரத்தினம் என்றும் அழைப்பார்கள். இவருடைய தந்தையார் பெயர் கனக சபை, தாயார் பெயர் லட்சுமி அம்மாள்.
இவர் 29 ஏப்ரல் 1891-ல் பிறந்தார். 1920 ஆம் ஆண்டு பழனி அம்மையார் என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். மன்னர் மன்னன் என்ற மகனும் இவருக்கு இருக்கிறார். இவர் பிறந்த இடம் தற்போதய புதுச்சேரி யூனியன் பிரதேசம். அவர் காலத்தில் பிரஞ்சு ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்தது. இவர் தமிழ், ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் பாரதியார் கவிதையின் மீது கொண்ட காதலால் தன்னுடைய பெயரை பாரதிதாசன் என பெயரை சூட்டி கொண்டார்.

பாரதிதாசனின் கல்வி, பணி

ஆசிரியர் பூ ஆ பெரியசாமி என்பவர் இவருக்கு தமிழ் இலக்கணத்தையும் தமிழ் இலக்கியங்களையும் கற்றுக்கொடுத்தார் . புதுச்சேரி கால்வே கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். புதுவையில் இருக்கக்கூடிய அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து பல ஆண்டுகள் பேராசிரியராகவே இவர் பணியாற்றினார். புதுவை முரசு என்ற இதழிலும் ஆசிரியர் பணியை மேற்கொண்டிருக்கிறார். குயில் என்ற இதழை நடத்தியவர் இவர்தான். 1938ல் ராஜாஜி அவர்கள் சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சராக இருந்தபோது மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்துறார். அதில் இந்தியை எதிர்த்து இவர் போராடி 1938 ல் சிறை செல்கிறார். 1938 ஆம் ஆண்டில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் சிறை சென்றிருக்கிறார்.

பாரதிதாசனின் பட்டங்கள்

இவருக்கு புரட்சி கவிஞர் எனும் பட்டத்தை அறிஞர் அண்ணா வழங்கினார். புதுவையில் பிறந்ததால் இவர் புதுவை குயில் என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் என்று அழைக்கப்பட்டார். திராவிடர் கழகத்தோடு இணைந்து பணியாற்றிய இவர் தந்தை பெரியார் பேசிய பல்வேறு பகுத்தறிவு கருத்துக்களையும் பொது உடமை கருத்துக்களையும் பெண்ணிய கருத்துக்களையும் தன்னுடைய கவிதைகளில் புணைந்து இயற்றியதால் பகுத்தறிவு கவிஞர் என்றும் அழைக்கபட்டார்.

பாரதிதாசனின் படைப்புகள்

அழகின் சிரிப்பு என்பது ஒரு கவிதை நூல்.
இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது நாடகம்.
இருண்ட வீடு என்பது காவியம்
இளைஞர் இலக்கியம் கவிதை
எதிர்பாராத முத்தம் கவிதை
கண்ணகி புரட்சி காப்பியம்.
கதறாட்டின பாட்டு இசைப்பாடல்
கழைக்கூத்தியின் காதல் என்பது நாடகம்
குடும்ப விளக்கு என்பது காவியம்

பாரதிதாசனின் மறைவு

இவர் 21 ஏப்ரல் 1964-ல் மறைந்தார்.

2. ஓளவையார்

ஓளவையார் தமிழின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் அறிஞர் ஆவார். பண்டைகாலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்று சிறந்த அறிவுடன் திகழ்ந்திருந்தனர் என்பதற்கு ஒளவையார் மகிச்சிறந்த சான்றாவார். தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிய ஒவையாரைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.

ஓளவையாரின் வாழ்கை குறிப்பு

ஒளவையார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும் அவர்களுக்கு கோலாச்சி என்ற பெயரில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. இவர் பெற்றோரிடம் வளராமல் பாணர்களிடம் வளர்ந்து ஊர் ஊராகச் செனறு பாடியவர் என குறிப்பு இருக்கிறது.

நான்கு ஒளவையார்

“ஒளவை” என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற பொருளை உடையது. அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒளவைக்கு மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனியை தந்ததால் ஒளவை நீண்ட நெடிய ஆயூள் பெற்று சங்க காலம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை வாழ்ந்தாரோ அல்லது ஒளவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தார்களா என்று ஒளவையின் வரலாறு சரியாக வரையறுக்கப்படவில்லை

ஓளவையார் எழுதிய நூல்கள்

ஒளவை அவர்கள் எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, நற்றினை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் பாடல்கள் 59 இயற்றியுள்ளார். மேலும் ஆத்தி;சூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நீதி நூல்களையும் அசதிக்கோவை, பந்தனாந்தாதி, விநாயகர் அவல், ஒளவைக் குறள் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

ஒளவையாரின் சிறப்பு

பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர் ஒளவையார் அவர்கள் அவர் தம் படைப்புகள் மூலம் மக்களிடையே நீதியும் ஒழுக்கமும் பண்பாடும் பற்றிய நெறிகளைக் கற்றுத்தந்துள்ளார். அவர் எழுதிய நீதி நூல்களில் சிறு சிற எளிய தமிழ் சொற்றொடர்களளைக் கொண்டு பெரிய வாழ்கை நெறிகளை எளிமையாக கூறியுள்ளார்.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்