< பெயர்ச்சொல்லின் வகை அறிதல் - TNPSCX

பெயர்ச்சொல்லின் வகை அறிதல்

பெயர்ச்சொல் வகைகள்
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப் பெயர், பண்புபெயர், தொழிற்பெயர் எனப்படும்.
 
பண்புப் பெயர்
வண்ணம், வடிவு, அளவு, சுவை ஆகிய நான்கின் அடிப்படையில் குணத்தைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர், அறிவு, அறிவு, இயல்பு, சிறப்பு, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் பண்புப் பெயர் அமையும்.
 
1. செம்மை, வெண்மை – நிறப் பண்புப் பெயர்
2. வட்டம், கோளம் - வடிவப் பண்பு பெயர்
3. இருமை, மும்மை - அளவுப் பண்பு பெயர்
4. இனிமை, உவர்ப்பு – சுவைப் பண்பு பெயர்
5. புலமை – அறிவால் வந்த பண்பு பெயர்
6. நன்மை - இயல்பால் வந்த பண்பு பெயர்
7. தலைமை – சிறப்பால் வந்த பண்பு பெயர்
8. குடிமை – பிறப்பால் வந்த பண்பு பெயர்
 
பண்புப் பெயர்ப் பகுதிகள்
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பசுமை, பொன்மை, பெருமை, அண்மை, நன்மை, தன்மை, பழமை, வண்மை, கீழ்மை, நொய்ம்மை, இன்மை, பருமை, இளமை, முதுமை, எளிமை, அருமை, மடமை, புலமை, வெறுமை முதலியன பண்புப் பகுதிகளாகும்.
 
பண்புப் பெயரின் விகுதிகள்
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பசுமை, பொன்மை, பெருமை, அண்மை, நன்மை, தன்மை, பழமை, வண்மை, கீழ்மை, நொய்ம்மை, இன்மை, பருமை, இளமை, முதுமை, எளிமை, அருமை, மடமை, புலமை, வெறுமை முதலியன பண்புப் பகுதிகளாகும்.
 
தொழிற்பெயர்
தொழிலுக்குப் பெயராகும் முறையில் வினைச்சொல்லில் இருந்து வந்த பெயரே ‘தொழிற்பெயர்’
வினை - பெயர்
வாழ் - வாழ்வு
விழி - விழிப்பு
 
தொழிற் பெயர் வகைகள்
தொழிற் பெயர் ஆறு வகைப்படும்.
 
1. வினைச்சொல்லின் பகுதி, தொழிற் பெயர் விகுதியோடு சேர்ந்து உண்டாகும் தொழிற்பெயர்.
நட + தல் = நடத்தல்
செய் + கை = செய்கை
 
2. விகுதி பெறாத தொழிற் பெயர்
அமர், தொண்டு
 
3. பகுதி மட்டுமே நின்று திரிபடையாமல் வரும் முதல் நிலைத் தொழிற்பெயர். ஒரு தட்டுத்தட்டு, ஒரு சுற்று ஓடு, தட்டு தட்டுதல் என்றும் சுற்று சுற்றுதல் என்றும் பொருள் தந்தன.
 
4. முதனிலை திரிந்த தொழிற் பெயர்
பேறு (பெறுதல்)
கேடு (கெடுதல்)
பாடு (படுதல்)
சூடு (சுடுதல்)
 
5. காலம் காட்டும் தொழிற் பெயர்
செய்தது, படிக்கின்றது, வருவது
 
6. எதிர்மறைத் தொழிற் பெயர்
நடவாதது, முயலாதது, முயலாமை
 
தொழிற் பெயர் விகுதிகள்
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு ஆணை, மை, து, ஆல், இல், மதி முதலியன தொழிற்பெயர் விகுதிகள்.
எடுத்துகாட்டு
நட + தல் = நடத்தல்
வாடு + அம் = வாட்டம்
கொல் + ஐ = கொலை
வாழ் + கை = வாழ்க்கை
பார் + வை = பார்வை
விக்கு + உள் = விக்குள்
கோள் + பாடு = கோட்பாடு
பாய் + து = பாய்ந்து
கட்டு + அடம் = கட்டடம்
வெகுள் + இ = வெகுளி
எற்று + மதி = ஏற்றுமதி
போ + கு = போக்கு
நட + கு = நடப்பு
வா + உ = வரவு
மற + தி = மறதி
பயில் + சி = பயிற்சி
கல் + வி = கல்வி
சா + காடு = சாக்காடு
தோற்று + அரவு = தோற்றரவு
பொறு + மை = பொறுமை
தழுவு + ஆல் = தழால்
எழு + இல் = எழில்
 
இடுகுறிப் பெயர்
ஒரு பொருளுக்கு அதன் பெயர் வழங்கப்படுவதற்கான காரணத்தை நம்மால் கூற முடியாவிட்டால், அந்தப் பெயர் ‘இடுகுறிப் பெயர்’ எனப்படும்.
எடுத்துக்காட்டு
கல், மண், நாய், மனிதன்.
 
காரணப் பெயர்
ஏதேனும் ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் பெயர் ‘காரணப்பெயர்’
எடுத்துக்காட்டு
பறவை, வளையல், பூ, நடிகர்
 
காரண இடுகுறிப் பெயர்
காண இடுகுறிப் பெயரில் காரணம் இருக்கும். மற்றொரு வகையில் அந்தப் பெயர் காரணமாகிறது, இடுகுறிப் பெயராகவும் இருக்கும். இப்படி, காரணப்பெயராகவும், இடுகுறிப்பெயராகவும் வரும் சொல், ‘காரண இடுகுறிப் பெயர்’ என்று வழங்கப்படும்
எடுத்துக்காட்டு
காற்றாடி, முள்ளி, முக்கண்ணன்
 
ஆகுபெயர்
ஒரு பொருளின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்குப் பெயராக, பழங்காலத்தில் இருந்தே வழங்கி வருகிறது ‘ஆகுபெயர்’ எனப்படும்.
எடுத்துக்காட்டு
உலகம் சிரிக்கிறது. இந்த தொடரில் உலகம் என்னும் சொல் நேரடியாக உலகத்தைக் குறிக்காமல் சிரிக்கிறது என்கிற சொல்லால் உலகத்திலுள்ள மக்களைக் குறிப்பதால், இஃது ஆகு பெயராயிற்று.
 
ஆகுபெயரின் வகைகள்
ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
1. பொருளாகு பெயர்
2. இடவாகு பெயர்
3. காலவாகு பெயர்
4. சினையாகு பெயர்
5. பண்பாகு பெயர்
6. தொழிலாகு பெயர்
7. எண்ணல் அளவை ஆகுபெயர்
8. எடுத்தல் அளவை ஆகுபெயர்
9. முகத்தல் அளவை ஆகு பெயர்
10. நீட்டல் அளவை ஆகு பெயர்
11. சொல்லாகு பெயர்
12. தானியாகு பெயர்
13. கருவியாகு பெயர்
14. காரியவாகு பெயர்
15. கருத்தாவாகு பெயர்
16. உவமையாகு பெயர்
 
1. பொருளாகு பெயர்
எடுத்துக்காட்டு
தாமரை போன்ற முகம். இந்த தொடரில் ‘தாமரை’ என்பது முதற்பொருளாகிய தாமரைக்கொடியின் பெயர். அந்த முதற்பொருளின் பெயர், கொடியை உணர்த்தாமல் அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்தமையால், இது பொருளாகு பெயராயிற்று.
 
2. இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர், அந்த இடத்திலுள்ள பொருளுக்கு ஆகி வருவது ;இடவாகு பெயர்’
எடுத்துக்காட்டு
உலகம் வருந்தியது. இதில் “உலகம்” என்கிற பெயர் உலகில் வாழும் மக்களுக்கு ஆகி வந்தது. அதனால், இஃது இடவாகு பெயராயிற்று.
 
3. காலவாகு பெயர்
ஒரு காலத்தின் பெயர், அந்தக் காலத்தில் உள்ள பொருளுக்குப் பெயராகி வருவது ‘காலவாகு பெயர்’
எடுத்துக்காட்டு
கார் அறுத்தான். இதில் கார் என்கிற காலத்தின் பெயர் அந்தக் காலத்தில் விளையும் பயிறுக்கு ஆகி வருகிறது.
 
4. சினையாகு பெயர்
சினைப்பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்குப் பெயராகி வருவது ‘சினையாகு பெயர்’
எடுத்துக்காட்டு
வெற்றிலை நட்டான். இதில் ‘இலை’ என்னும் சினையின் பெயர் அதன் முதற்பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது.
 
5. பண்பாகு பெயர்
ஒரு குணத்தின் பெயர், அதனை உடைய பொருளுக்குப் பெயராகி வருவது ‘பண்பாகு பெயர்’
எடுத்துக்காட்டு
வெள்ளை அடித்தான் ‘வெள்ளை’ என்கிற பண்பின் பெயர், வெள்ளை நிறமுள்ள சுண்ணாம்புக்குப் பெயராகி வந்துள்ளது.
 
6. தொழிலாகு பெயர்
ஒரு தொழிலின் பெயர், அந்த தொழிலை உடைய பொருளுக்கு பெயராகி வருவது ‘தொழிலாகு பெயர்’
எடுத்துக்காட்டு
வளவன் வற்றல் உண்டான். ‘வற்றல்’ என்கிற தொழிலின் பெயர் வற்றுதலை உடைய உணவுக்குப் பெயராகி வந்தது.
 
7. எண்ணல் அளவை ஆகுபெயர்
எண்ணுப் பெயர்கள் அந்த அளவைக் கொண்ட பொருளுக்குப் பெயராகி வருவது ‘எண்ணல் அளவை ஆகு பெயர்’ எனப்படும்
எடுத்துக்காட்டு
ஆளுக்கு இரண்டு கொடுத்தான். ‘இரண்டு’ என்னும் எண்ணுப் பெயர் பொருளுக்கு பெயராகி வருகிறது.
 
8. எடுத்தல் அளவை ஆகுபெயர்
நிறுத்து ஆளக்கின்ற கிலோ, கிராம் முதலியவற்றின் பெர்கள் அந்த அளைவக் கொண்டு பொருளுக்கு ஆகி வருவது ‘எடுத்தல் அளவை ஆகுபெயர்’
எடுத்துக்காட்டு
நான்கு கிலோ கொடு. கிலோ என்பது ‘கிலோ’ கிராம் எடையுள்ள பொருளுக்கு பெயராகி வந்தது.
 
9. முகத்தல் அளவை ஆகுபெயர்
முகத்து அளக்கின்ற லிட்டர், படி, நாழி முதலிய பெயர்கள் அந்த அளவைக் கொண்ட பொருளுக்குப் பெயராகி வருவது ‘முகத்தல் அளைவ ஆகுபெயர்’
எடுத்துக்காட்டு
ஐந்து லிட்டர் கொடு. லிட்டர், படி, நாழி முதலிய பெயர்கள் அந்த அளவைக் கொண்ட பொருளுக்கு பெயராகி வருவது
 
10. நீட்டல் அளவை ஆகுபெயர்
நீட்டி அளக்கின்ற முழம், மீட்டர், கிலோ மீட்டர் முதலிய பெயர்கள் அந்த அளவைக் கொண்ட பொருளுக்குப் பெயராகி வருவது. ‘நீட்டல் அளவை ஆகுபெயர்’
எடுத்துக்காட்டு
சட்டைக்கு இரண்டு மீட்டர் வாங்கி வா. மீட்டர் என்னும் ‘நீட்டல்’ அளவு அந்த அளவுள்ள துணிக்குப் பெயராகி வந்தது.
 
11. சொல்லாகு பெயர்
ஒரு சொல்லின் பெயர் அதன் பொருளுக்குப் பெயராகி வருவது ‘சொல்லாகு பெயர்’
எடுத்துக்காட்டு
ஆளுக்கு இரண்டு கொடுத்தான். ‘இரண்டு’ என்னும் எண்ணுப் பெயர் பொருளுக்கு பெயராகி வருகிறது.
 
12. தானியாகு பெயர்
ஒரு தானத்தில் (இடத்தில்) உள்ள பொருளின் பெயர் அதற்குத் தானமான (அமர்வதற்கு இடமான) பொருளுக்கு பெயராகி வருவது ‘தானியாகு பெயர்’ எனப்படும்.
எடுத்துக்காட்டு
விளக்கு ஒடிந்தது. விளக்கு என்னும் தீச்சுடரின் பெயர் அதற்கு இடமான தண்டுக்கு பெயராகி வந்தது.
 
13.கருவியாகு பெயர்
எண்ணுப் பெயர்கள் அந்த அளவைக் கொண்ட பொருளுக்குப் பெயராகி வருவது ‘எண்ணல் அளவை ஆகு பெயர்’ எனப்படும்
எடுத்துக்காட்டு
ஆளுக்கு இரண்டு கொடுத்தான். ‘இரண்டு’ என்னும் எண்ணுப் பெயர் பொருளுக்கு பெயராகி வருகிறது.
 
14. காரியவாகு பெயர்
காரியத்தின் பெயர் காரணத்திற்குப பெயராகி வருவது. ‘காரியவாகு பெயர்’
எடுத்துக்காட்டு
அலங்காரம் படித்தேன். அலங்காரம் என்று இலக்கணமாகிய காரியத்தின் பெயர், அதனை அறிவித்ததற்குக் காரணமான நூலுக்குப் பெயராகி வந்தது.
 
15. கருத்தாவாகு பெயர்
ஒன்றைச் செய்தவன் பெயர், அவனால் செய்யப்பட்ட பொருளுக்குப் பெயராகி வருவது ‘கருத்தாவாகு பெயர்’ எனப்படும்.
எடுத்துக்காட்டு
திருவள்ளுவர் படித்தேன் - வள்ளுவரின் பெயர் அவரால் செய்யப்பட்ட நூலுக்கு ஆகி வந்தது.
 
16. உவமையாகு பெயர்
உவமையின் பெயர் விளக்கப்படும் பொருளுக்குப் பெயராகி வருவது ‘உவமையாகு பெயர்’.
எடுத்துக்காட்டு
சிங்கம் வந்தான். சிங்கம் என்னும் உவமையின் பெயர், சிங்கம் போன்ற இளைஞனுக்கு பெயராகி வந்தது.
 
பெயர்ச்சொல் இடவகையால் மூன்று வகைப்படும்.
 
1. தன்மைப் பெயர்
தன்மை ஒருமைப் பெயர்: நான், யான்
தன்மைப் பன்மைப் பெயர்: நாம், யான், நாங்கள், யாங்கள்
 
2. முன்னிலைப் பெயர்
முன்னிலை ஒருமைப் பெயர்: நீ
முன்னிலைப் பன்மைப் பெயர்: நீர், நீயிர், நீவிர், நீங்கள், எல்லீர்
 
3. படர்க்கைப் பெயர்
ஆண்பால் பெயர்கள்: அவன், கண்ணன்
பெண்பால் பெயர்கள்: அவள், கோதை
பலர்பால் பெயர்கள்: அவர், மாணவர்
ஒன்றன்பால் பெயர்கள்: அது, மாடு, மரம்
பலவின்பால் பெயர்கள்: அவை, பசுக்கள், மாடுகள்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்