பொருள் இலக்கணம் என்பது பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணம் ஆகும். சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம். மக்களின் வாழக்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் வகுத்துக்காட்டி விளக்குவது பொருள் இலக்கணம். அறவழியில் பொருளீட்டி பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவது பொருள். பொருள் என்பது ஒழுக்கமுறை ஆகும்.
பொருள் இலக்கணம் இரண்டு வகைப்படும். அவை அகப்பொருள், புறப்பொருள் என இரு வகைப்படும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது. போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன. அகப்பொருள் வாழ்வியல் எனில் புறப்பொருள் உலகியல் ஆகும்.
அகப்பொருள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று வகைப்படும், முதற்பொருள் நிலம், பெழுது என்று இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
நிலம் ஏழு வகைப்படும்.
குறிஞ்சித்திணைக்கான சிறுபொழுது யாமம் முல்லைத்திணைக்கான பெரும்பொழுது கார்காலம்
முல்லைத்திணைக்கான சிறுபொழுது மாலை மருதத்திணைக்கான பெரும்பொழுது ஆறு பெரும்பொழுதுகள்
மருதத்திணைக்கான சிறுபொழுது ஏற்பாடு பாலைத்திணைக்கான பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், பின்பனி
பாலைத்திணைக்கான சிறுபொழுது நண்பகல் பெரும்பொழுது – தமிழ் மாதங்கள் கார்காலம் - ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிகாலம் - மார்கழி, தை
பின்பனிகாலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
சிறுபொழுது (ஒருநாளின் ஆறு கூறுகள்) காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை
நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஏற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை புறத்திணை என்பது பொது வாழ்க்கை. தொழ்காப்பியர் கூறிய புறத்திணைகள் - 7. அவையாவன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண். புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணைகளைப் பன்னிரண்டாக வகைப்படுத்தியுள்ளது.
பகைநாட்டின் மீது போர் தொடங்கு முன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்கு தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச் செய்வது வெட்சித்திணை கரந்தைத் திணை
வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் கரந்தைப் பூவைச் சூடிச்சென்று மீட்பது, கரந்தைத் திணை. சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைக் கொட்டைக் கரந்தை என்றும் கூறுவர். வஞ்சித்திணை
மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்கு செல்வது, வஞ்சித்திணை. பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது. காஞ்சித்திணை
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்து நிற்பது காஞ்சித்திணை. கொத்துக் கொத்தாக பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம் நொச்சித்திணை
பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப்போரிட்டு, அம்மதிலைக் காப்பது இத்திணை. மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது இதில் மணிநொச்சி, கருநொச்சி. மலைநொச்சி, வெண்ணொச்சி எனப் பலவகைகள் உள்ளன. உழிஞைத்திணை
உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை. மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறுகின்றனர் தும்பைத் திணை
பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக் கொண்டு, தம் வீரர்களுடன் போரிடுவது தும்பைத் திணை. இவ்வீரர்கள் தும்பைப் பூவைச் சூடிப் பொரிடுவர். எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி வகைத்திணை
வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூவைச் சூடி மகிழ்வது வாகைத்திணை. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் வாகை பூ. பாடாண்திணை
பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை பொதுவியல் திணை
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை கைக்கிளைத்திணை
கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம். இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும் பெருந்திணை
பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பாற்கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை

- வெட்சித்திணை
- கரந்தைத்திணை
- வஞ்சித்திணை
- காஞ்சித்திணை
- நொச்சித்திணை
- உழிஞைத்திணை
- தும்பைத் திணை
- வாகைத் திணை
- பாடாண்திணை
- பொதுவியல்