< தமிழ்நாடு அறிவியல் ஆளுமைகள்

தமிழ்நாடு அறிவியல் ஆளுமைகள்

அப்துல்கலாம்

இந்தியாவின் 11-வது குடியரசுத்தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியளாளர். தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவகணை மற்றும் ஏவகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் “இந்திய ஏவகணை நாயகன்” என்று போற்றப்படுகிறார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார். இந்தியாவின் உயரிய வீரதான பாரதரத்னா விருதினைப் பெற்றவர். இவர் தம் பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் கற்றவர்.

சிவன்

இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவரான சிவன், இந்த பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் ஆவார். இந்திய நாட்டிலிருந்து ஏவப்படும் அனைத்துச் செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளும் “சித்தாரா” என்ற செயலியைப் பயன்படுத்தித்hன் விண்ணில் ஏவப்படுகின்றன. இதனைக் கண்டுபிடித்தவர் சிவன்.
SITARA – Software for Integrated Trajectory Analysis with Real time Application.

வளர்மதி

அரியலூரில் பிறந்த இவர், 2015 இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப்பெற்ற முதல் அறிவியல் அறிஞர் ஆவார். இஸ்ரோவில் 1984-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2012 –ஆம் ஆண்டு உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் () திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர், இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய 2-வது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.

அருணன் சுப்பையா

இவர், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியளாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இயந்திரப்பொறியியலில் பட்டம் பெற்று 1984 –ல் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். 2013-இல் மங்கல்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் இயக்குநராக இருந்தார்.

மயில்சாமி அண்ணாதுரை

“இளைய கலாம்” என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். 11 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர். இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். 1982 – ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார். நம்நாடு நிலவுக்கு முதன்முதலில் அனுப்பிய சந்திரயான் - 1 திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றியவர். சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றினார். சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தமது அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். தமது அறிவியல் அனுபவங்களைக் “கையருகே நிலா” என்னும் நூலாக எழுதியுள்ளார்.

விக்ரம் சாராபாய்

“இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் விக்ரம் சாராபாய். இவர் ஆரியப்பட்டா என்ற முதல் செயற்கை கோள் ஏவதலுக்கு காரணமானவர். அவர் பெயரால் “விக்ரம்சாராபாய் விண்வெளி மையம்” திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, வர்னூர்தியியல், வான் பயண மின்னனுவியல் கூட்டமைப் பொருள்கள், கணினி-தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவருடைய முயற்சியால் தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது. செயற்கைகோள் உதவியுடன் தொலைகாட்சி வழியாக 24000 இந்தியக் கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்