< தமிழ்நாடு மாவட்டங்கள் 2025

தமிழ்நாடு மாவட்டங்கள்

தமிழ்நாடு மாவட்டங்கள் எண்ணிக்கை 38

1971 –ல் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆகும். இதுவே 1981 –ல் 16 ஆகவும், 1991 –ல் 21 ஆகவும், 2001 –ல் 30 ஆகவும் உயர்ந்தது. 2008 –ல் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. 2020 ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகும்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்

தர்மபுரி - சேலம் மாவட்டத்திலிருந்து 1965 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
புதுக்கோட்டை – திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து 1974 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
ஈரோடு – கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
சிவகங்கை, திண்டுக்கல் - மதுரை மாவட்டத்திலிருந்து 1985 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
விருதுநகர் - இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1985 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
தூத்துக்குடி – திருநெல்வெலி மாவட்டத்திலிருந்து 1986 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
வேலூர், திருவண்ணாமலை – வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1989 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
நாகப்பட்டிணம் - தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1997 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
விழுப்புரம், கடலூர் – தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
கரூர், பெரம்பலூர்- திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து 1995 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
திருவாரூர் – தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1997 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
தேனி – மதுரை மாவட்டத்திலிருந்து 1996 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
நாமக்கல் - சேலம் மாவட்டத்திலிருந்து 1996 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
காஞ்சிபுரம், திருவள்ளுர் – முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 1997 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்டத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
திருப்பூர் – கோயம்புத்தூர் - ஈரோடு மாவட்டகளிலிருந்து 2009 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
கள்ளக்குறிச்சி – விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
தென்காசி – திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
இராணிப்பேட்டை, திருப்பத்தூர் – வேலூர் மாவட்டத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது
மயிலாடுதுறை – நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது

தமிழ்நாடு மாவட்டங்கள் சிறப்புகள்

அரியலூர் – தமிழகத்தின் சிமென்ட் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு, திருமழபாடி, மேலப்பழுவூர் ஆகியவை முக்கியமானவை.
இராமநாதபுரம் - தமிழகத்தின் புனித பூமி, தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. அன்னை இந்திராகாந்தி பாலம், அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி, ஓரியூர் ஆகியவை முக்கியமானவை.
ஈரோடு – தமிழகத்தின் மஞ்சள் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. பவானி, காவிரி, அமுத நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை தென்னிந்தியாவின் திரிவேணி என அழைக்கப்படுகிறது. பவானி சாகர் அணைக்கட்டு, சென்னிமலை ஆகியவை முக்கியமானவை.
கடலூர் – நிலக்கரி மாவட்டம், நெய்வேலியில் இந்தியாவிலேயே அதிக அளவில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. பண்ருட்டி பலாபழங்கள், கடலூர் துறைமுகம் ஆகியவை முக்கியமானவை.
கரூர் – நெசவாளர்களின் வீடு என அழைக்கப்படுகிறது. புகழுர் தமிழ்நாடு செய்தித்தாள் ஆலை (டிஎன்பிஎல்) ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரியது. தாந்தோணி மலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடராமஸ்வாமி ஆலயம், ;தென்திருப்பதி’ எனப்படும் கொசுவலைகள், நொய்யல் ஆகியவை முக்கியமானவை.
கன்னியாகுமரி - இந்தியாவின் தென் நில எல்லை ஆகும். மரவள்ளிகிழங்கு உற்பத்தி, ரப்பர் உற்பத்தி, பத்மராபபுரம் அரண்மனை, சங்குத்துறை கடற்கரை, உலக்கை அருவி ஆகியவை முக்கியமானவை.
காஞ்சிபுரம் - தமிழகத்தின் ஏரி மாவட்டம் என அழைக்கப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையம், பல்லர்களின் தலைநகரம், ஆயிரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. முட்டுக்காடு படக்குழாம் ஆகியவை முக்கியமானவை.
கிருஷ்ணகிரி – தமிழகத்தின் பூக்கூடை, குன்றுகள் நிறைந்த குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படுகிறது. கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம், இங்கிருந்து பூக்கள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி அணைக்கட்டு ஆகியவை முக்கியமானவை.
கோயம்புத்தூர் – தென்னகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. சிறுவாணி அருவி ‘கோவை குற்றாலம்’ என அழைக்கப்படுகிறது. மருதமலை முருகன் கோவில், வால்பாறை, ஆனைமலை விலங்குகள் சரணாலயம் ஆகியவை முக்கியமானவை.
சிவகங்கை – சரித்திரம் உறைந்த மண் என அழைக்கப்படுகிறது. புகழ் பெற்ற மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் (CECRI) உள்ளது. உலக தரம் வாய்ந்த 'கராபைட்' கனிமம் கிடைக்கிறது. காரைக்குடி செட்டிநாடு அரண்மனை, பிள்ளையார்பட்டி ஆகியவை முக்கியமானவை.
சென்னை – தென்னகத்தின் கலாச்சார நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. மெரினா, கன்னிமாரா நூலகம், கலா ஷேத்ரா, கலங்கரை விளக்கம், வண்டலூர், அண்ணா நினைவு நூலகம் ஆகியவை முக்கியமானவை.
சேலம் - தமிழகத்தின் மாழ்பழ மாவட்டம் என அழைக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கட்டு, ஏற்காடு, ஊத்துமலை, சங்ககிரி கோட்டை, தாவரவியல் பூங்கா ஆகியவை முக்கியமானவை
தஞ்சாவூர் – தமிழகத்தின் அரிசிக்கிண்ணம் என அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், தஞ்சாவஸ்ரீh அரண்மனை, தாராபுரம் பட்டு, தஞ்சை ஓவியங்கள், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை முக்கியமானவை.
தருமபுரி – தோட்டபயிர்களின் பூமி என அழைக்கப்படுகிறது. அதியமான கோட்டை, ஒக்கனேக்கல், தீர்த்தமலை ஆகியவை முக்கியமானவை
திண்டுக்கல் - தமிழகத்தின் பூட்டு நகரம் என அழைக்கப்படுகிறது. திண்டுக்கல் பூட்டு, கோட்டை, பேரி அருவி, பம்பர் அருவி, பசுமை பள்ளத்தாக்கு, தலையாறு அருவி ஆகியவை முக்கியமானவை
திருச்சிராப்பள்ளி – மலைக்கோட்டை நகரம் என அழைக்கப்படுகிறது. மணப்பாறை முறுக்கு, மலைக்கோட்டை, கல்லணை, முக்கொம்பு, கல்லணை ஆகியவை முக்கியமானவை
திருநெல்வேலி – தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி அல்வா, அம்பாசமுத்திரம், கூத்தன்குளம் சரணாலயம், கழுகுமலை, மணிமுத்தாறு அணை, கும்பருட்டி அணை, பாபநாசம் ஆகியவை முக்கியமானவை
திருப்பூர் – பின்னலாடைத் தலைநகரம், கதர் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. முதலைப்பண்ணை, திருப்பூர் குமரன் நிலையம், திருமூர்த்தி மலை ஆகியவை முக்கியமானவை
திருவண்ணாமலை – சித்தர் பூமி என அழைக்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோவில், சாத்தனூ அணை, ஆரணி பட்டு நெசவு மையம் ஆகியவை முக்கியமானவை
திருவள்ளுர் – தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படுகிறது. பட்டினத்தார் சமாதி, சர்வேஜடவர தியான மண்டபம், பழவேற்காடு, பறவைகள் சரணாலயம் ஆகியவை முக்கியமானவை
திருவாரூர் – மத்திய பழ்கலைக்கழக மாவட்டம் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் பெரிய தேர் திருவரூர் தேர். வடுவூர் பறவைகள் சரணாலயம், முத்துபேட்டை அலையாத்தி வனம் ஆகியவை முக்கியமானவை
தூத்துக்குடி – முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கொற்கை துறைமுகம், எட்டையபுரம், அய்யனார் சுணை, கயத்தாறு, பாரதியார் மணி மண்டபம் ஆகியவை முக்கியமானவை
தேனி - இயற்கை விரும்பிகளின் பூமி என அழைக்கப்படுகிறது. மேகமலை, வைகை அணை, சோத்துபாறை அருவி, சுருளி அருவி, சின்னச் சுருளி. புலி அருவி, சின்னமனூர் செப்பேடுகள் ஆகியவை முக்கியமானவை
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்