உலோக காலம் குறிப்புகள் ... !
உலோக காலத்தை பெருங்கற்காலம் என்றும் அழைப்பர். ஏன் இந்த காலகட்டத்தை உலோக காலம் என்றும் பெருங்கற்காலம் என்று அழைத்தர்கள் என பார்ப்போம். முதலில் இக்காலத்தை உலோக காலம் என்று அழைப்பதற்கான காரணம் இக்காலத்தில் மக்கள் கற்கருவிகளை விட பொன், செம்பு, வெண்கலம், இரும்பு முதலான உலோகங்களை பயன்படுத்தினர் அதனால் இக்காலத்தை உலோக காலம் என்று அழைக்கப்படுகிறது. பெருங்கற்காலம் என்று இக்காலத்தை குறிப்பிவதற்கான காரணம் இக்காலகட்டத்தில் இறந்தவர்களின் புதைகுழிகளின் மேல் பெரிய பெரிய கற்களைக் கொண்டு நினைவுச்சின்னங்களை கட்டினார்கள். இந்த பெரிய பெரிய கற்களை பயன்படுத்தியதால் இக்காலம் பெருங்கற்காலம் என்று அழைக்கப்பட்டது.
உலோக காலத்தை செம்புக்காலம் மற்றும் இரும்புக்காலம் என்று இரண்டாக பிரிக்கலாம். புதிய கற்காலத்தை அடுத்து தென்னிந்தியாவில் இரும்புக்காலமும், வட இந்தியாவில் செம்புக்காலமும் தொடங்கியது.
பெருங்கற்கால மனிதர்கள் முதன்முதலில் கண்டுபிடித்த உலோகம் தங்கம் தான்.
புதிய கற்காலத்தில் மனிதன் கண்டுபிடித்த சக்கரம் உலோக காலத்தில் பானைகள் செய்வதற்கான கருவியாக மாற்றப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் தோண்டியெடுக்கப்பட்ட சில பிணக் குழிகளில் தங்க அணிகலன்களும் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து தென்கிழக்காக 24 கி.மீ தொலைவில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றிலாவன பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போனறவை கண்டெடுக்கப்பட்டன.
கற்கால மனிதர்கள், எழுதும் முறையை அறியாதவர்களாயிருந்தனர். உலோக காலத்தில் ஒரு வகையான பட எடுத்துமுறை வளர்ச்சியடைந்தது.
வேதகாலத்திற்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக மக்கள் எழுதம் முறையை அறிந்திருந்தனர். ஆனால் அவர்களுடைய எழுத்துக்கள் படித்துப் பொருள் காணப்பட இயலவில்லை.
தென்னிந்தியாவில் இரும்புக் காலமும், பெருங்கற்காலமும் (மெகாலிதிக்) சமகாலம் என்று கருதப்படுகிறது.
மெகாலித் என்றால் பெரிய கல் என்று பொருள். கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்களை இது குறிக்கிறது. அத்தகையை கல்லறைகள் தென்னிந்தியாவில் ஏராளமாக கிடைத்துள்ளன.
கல்லறைக் குழிகளில் கருப்பு சிவப்பு வண்ணத்தாலான பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி மற்றும் அரிவாள், சிறு ஆயுதங்கள் போன்றவை காணப்படுகிறன்றன.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்