இந்திய கவர்னர் ஜெனரல்கள்
வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785)
1772ல் வங்காளத்தின் ஆளுனராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார். வங்காளத்தில் நிலவிய இரட்டை ஆட்சி முறையை நீக்கிய வாரன் ஹேஸ்டிங்ஸ் துணை நவாபுகளான முகமது இராசா கானஈ, இராஜா சிதாப் இராய் ஆகியோரை பதவி நீக்கம் செய்தார் வங்காள நவாபையும் பதவி நீக்கம் செய்தார். 1772ல் அரசு கருவூலத்தை மூர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினார் முதல் வங்காள கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆவார் 1772 முதல் கல்கத்தா ஆங்கிலேய இந்தியாவின் தலைநகராக மாறியது. கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர்கள் கையூட்டு பெறுவதைத் தடை செய்தார். கொல்கத்தாவில் வருவாய் வாரியத்தை அமைத்தார்ஒழுங்குமுறைச் சட்டம்
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு இங்கிலாந்து பாராளுமன்றம் 1773 ல் இயற்றிய சட்டமே ஒழுங்குமுறைச் சட்டமாகும் இச்சட்டத்தின்படி வங்காளத்தின் ஆளுநர் வில்லியன் கோட்டையின் தலைமை ஆளுநர் ஆனார். இவருக்கு சென்னை, பம்பாய் ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டது. நிர்வாகத்தில் உதவி செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது கவர்னர் ஜெனரலும் குழுவும் இணைந்து மும்பை, சென்னை மாநிலங்களை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றனர் வில்லியம் கோட்டையில் ஒரு தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு ஒரு தலைமை நீதிபதியும், 3 துணை நீதிபதிகளும் இங்கிலாந்து மன்னரால் நியமிக்கப்பட்டனர் வணிகக் குழுவை நிர்வகிக்க 24 நபர்கள் கொண்ட இயக்குநர் அவை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் கம்பெனியின் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பிட் இந்திய சட்டம் 1784
ஒழுங்குமுறைச் சட்டத்தில் இருந்த குறைபாடுகளைக் களைவதற்காக இயற்றப்பட்ட சட்டமே பிட் இந்தியச் சட்டம் ஆகும். இச்சட்டத்தின்படி கிழக்கிந்திய நிறுவனத்தை மேற்பார்வையிட ஆறு உறுப்பினர்கள் கொண்ட கட்டுப்பாட்டுக் குழு இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரல் மற்றும் மாகாண ஆளுநர்களை திரும்ப அழைக்கும் அதிகாரம் இங்கிலாந்து அரசிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் கவர்னர் ஜெனரல் குழுவில் நான்கு உறுப்பினர் எண்ணிக்கை மூன்று ஆகக் குறைக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்களில் ஒருவர் படைத் தலைவராக இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. சென்னை, பம்பாய் மாநிலங்களின் மீது போர், அமைதி ஏற்பாடுகள், இந்திய அரசர்களின் விவகாரங்கள், படை அமைப்பு போன்றவற்றில் மேல் அதிகாரம் செய்யும் உரிமை கவர்னர் ஜெனரலுக்கு இந்த சட்டம் வழங்கியது.ஒழுங்குமுறைச் சட்டத்திற்குப் பிறகு வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஒழுங்குமுறைச் சட்டமே இந்தியாவின் ஆட்சி முறைக்காக இங்கிலாந்து பாராளுமன்றம் வெளியிட்ட முதல் சட்டமாகும். வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக்காலத்தில் தான் முதல் மராத்தியப் போர் 1775-82 நடைபெற்றது. இரண்டாம் மைசூர் போரின் போது (1780-84) கவர்னர் ஜெனரலாக இருந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆவார். இரண்டாம் மைசூர் போர் ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையில் நடைபெற்றதாகும். நந்தகுமார் வழக்கு (1775) விசாரனை, செயித் சிங் (1780) விவகாரம், அயோத்தி பேகங்கள் (1782) விவகாரம் ஆகியவை வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடந்தன. 1784-ல் ஒழுங்குமுறைச் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நீக்க பிட் இந்திய சட்டம் இயற்றப்பட்டது. 1784-ல் ஆசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால் என்ற அமைப்பை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆதரவுடன் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் நிறுவினார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்களில் குற்ற விசாரனைக்கு உட்படுத்தப்பட்ட முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆவார் வாணிப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாணிக வாரியம் ஒன்றை அமைத்தார் அதிகபட்ச வரி விகிதங்களை நீக்கிவிட்டு உப்பு, பாக்கு, புகையிலை ஆகியவை தவிர பிற பொருட்கள் அனைத்தின் மீதும் ஒரே அளவில் 2.5 சதவீத வரி சுங்கத் தீர்வையயை விதித்தார் ஓவ்வொரு மாவட்டத்திலும் உரிமையியல் (சிவில்) மற்றும் குற்றவியல் (கிரிமினல்) நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சாதர் திவானி அதாலத் என்றும், கிரிமினல் மேல் முறையீட்டு நீதமன்றம் சாதர் நிசாமத் அதாலத் என்றும் அழைக்கப்பட்டன. முகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்திடமிருந்தும் கோராவும் அலகாபாத்தும் கைப்பற்றப்பட்டு அயோத்தி நவாபுக்கு 50 இலட்சத்திற்கு விற்க நடவடிக்கை எற்படுத்தப்பட்டது. ரோகில்லர்கள் போர் 1774ல் ஏற்படவும் வாரன் ஙேஸ்டிங்ஸ் காரணமாணார் 1781ல் வாரன் ஙேஸ்டிங்ஸ் கல்லத்தா மதரசாவை தோற்றுவித்தார்.காரன் வாலிஸ் (1786-1793)
மூன்றாம் மைசூர் போர் (1790-92) நடைபெற்றபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் காரன்வாலிஸ் ஆவார். காரன்வாலிசுக்கு ஆங்கிலேயப் படைகளின் முதன்மை தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட்டது. இவர் மூன்றாவது மைசூர் போரில் திப்பு சுல்தானுக்கு எதிராக போரிட்டார். இப்போர் 1790 முதல் 1792 வரை நடைபெற்றது. திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் ஸ்ரீரங்கப்பட்டடினம் உடன்படிக்கை மேற்கொண்டார். இதன் விளைவாக திப்பு சுல்தான் தம் நாட்டின் பாதியை ஆங்கிலேயருக்கு அளிக்க நேரிட்டது. இத்துடன் நமது புதல்வர்கள் இருவரையும் பிணைக் கைதிகளாக ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க நேரிட்டது. வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் 1793-ல் நிரந்தர நிலவரித்திட்டத்தை தோற்றுவித்வர் காரன் வாலில் ஆவார். நிரந்தர நிலவரித்திட்டத்திற்கு ஜேம்ஸ் கிராண்ட், ஜொனாதன் டன்கன், ஜேம்ஸ் ஷோர் ஆகியோர் பெரிதும் உதவினர். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி என்னும் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்காலத்தில் தான் இந்திய ஆட்சிப் பணியாளர் தொகுதி தொடங்கப்பட்டது. இதுவே இந்திய ஆட்சிப் பணியாளர் தொகுதி அல்லது இந்திய சிவில் சர்வீஸ் ஏற்படக் காரணமானது. சிவில் சர்வீஸ் துறையில் முதன்முறையாக சீர்திருத்தங்களை புகுத்தியவர் காரன் வாலிஸ் ஆவார். எனவே தான் இவர் இந்திய ஆட்சிப்பணித்துறையின் தந்தை என்று அழைக்கபடுகிறார். காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பை வெளியிட்டவரும் இவரே ஆவார். ஜார்ஜ் பார்லோ என்பவரின் உதவியோடு இந்த சட்டத்தொகுப்பை காரன் வாலிஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இச்சட்டத் தொகுப்பு உறுதி செய்தது. 1791ல் காவல் துறை ஒழுங்குச் சட்டத்தைப் பிறப்பித்தார். ஒவ்வொரு மாவட்;டமும் தானா என்ற காவல்துறை வட்டங்களாக பிரிக்கப்பட்டு, தரோகா எனப்படும் இந்திய தலைவரின் கீழ் ஒப்படைக்கப்ட்டது. வங்காளம் பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 36 மாவட்டங்களை 23 ஆகக் குறைத்தார் காரன்வாலிஸ், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஆங்கிலேய கலெக்டரை நியமித்தார். மாவட்ட கலெக்டர் மாவட்டத்தின் நிர்வாகத்தை கவனிப்பவராக மட்டுமின்றி வழக்கை விசாரிப்பவராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார்.வெல்லெஸ்லி பிரபு (1798-1805)
சிறந்த இராஜதந்திரியான வெல்லெஸ்லி பிருபு சர் ஜான் ஷோர் என்பவருக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். வெல்லெஸ்லி பின்பற்றிய வல்லாட்சிக் கொள்கையின் காரணமாகவே இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் வெகு வேகமாக வளர்ச்சியடைந்தது. ஆங்கிலேய ஆதிக்கத்தின் மேலாதிக்கத்தை உணர்த்தும் முன்னேற்றக் கொள்கையையே வெல்லெஸ்லி பின்பற்றினார். போர், மேலும் போர், போரிடுதலைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதே இவரது முன்னேற்ற கொள்கை ஆகும். வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டம், என்ற ஒற்றை அறிமுகப்படுத்தினார். இத்திட்டமே இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு என்று இருந்ததை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என்று மாற்றியது. நட்பு முறையில் ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அவற்றின் செலவை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆங்கிலேயரின் படை பாதுகாப்பை பெறுவதே துணைப்படைத் திட்டமாகும் இந்த துணைப்படைத் திட்டத்தை முதன்முதலாக வெல்லெஸ்லி பிரபு தான் ஏற்படுத்தினார் என்று சொல்ல இயலாது. முதன் முதலாக இந்த மாதிரியான முறையைப் பின்பற்றியது பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே ஆவார். அதன் பிறகு இராபர்ட் கிளைவும் அதைப் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் முதன் முதலில் சேர்ந்தவர் (1798) ஹைதராபாத் நிஜாம் ஆவார். அவர் திட்டத்திற்கு ஈடாக கடப்பா, பெல்லாரி, அனந்தபூர் மற்றும் கர்நூல் பகுதிகளை ஆங்கிலேயருக்கு அளித்தார். திப்பு சுல்தான் இறந்த பின்னர் மைசூரின் ஆட்சியைத் திரும்பப் பெற்ற கிருஷ்ணராஜ வாடியாரும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டார். ஐரோப்பாவில் இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டுடன் போரிட்டுக்கொண்டிருந்த காலம் அது. பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட் தனது ஆதிக்கத்தை ஆசியாவிலும் பரப்ப எண்ணினார். எனவே பிரான்ஸ் நாட்டிற்கு ஆதரவாக செயல்படுவதைத் தடுக்கவும் அயல் நாட்டு உறவைக் கட்டுப்படுத்தவும் வெல்லஸ்லி பெரிதும் முயற்சித்தார். அயோத்தி நவாப் (1801), பீஷ்வா இரண்டாம் பாஜிராவ் (1802) ஆகியோரும் இத்திட்டத்தில் இணைந்தனர். வெல்லெஸ்லி பிரபுவின் நாடு இணைப்புக் கொள்கையால் ஆங்கிலேயரின் அரசியல் ஆதிக்கம் பெருமளவில் விரிவடைந்தது எனவே வெல்லஸ்லி பிரபு ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழுவின் அக்பர் என்று அழைக்கப்படுகிறார். நான்காவது மைசூர் போரின் (1799) போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் வெல்லெஸ்லி ஆவார். இரண்டாவது மராத்தியப் போரையும் (1803-05), பசீன் உடன் படிக்கையையும் மேற்கொண்டவர் வெல்லெஸ்லி. தஞ்சாவூர் மற்றும் கர்நாடகப் பகுதிகளை இணைத்த பிறகு மெட்ராஸ் மாகாணத்தை வெல்லெஸ்லியே உருவாக்கினார். தஞ்சாவூர் அரசர் சரபோஜி 1799 ல் துணைப்படைத்திட்டத்தில் சேர்ந்தார். வெல்லெஸ்லி பிரபுவை ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழுவின் அக்பர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். 1800ல் கொல்கத்தா கிழக்கிந்திய நிறுவன பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க கல்லூரி ஒன்றை வெல்லெஸ்லி நிறுவினார். ஊழியர்கள் வணிக நிறுவனத்தில் பணியேற்பதற்கு முன்னர் இக்கல்லூரியில் பயிற்சி பெற தொடங்கினர். இதன் மூலம் இந்திய ஆட்சிப் பணியின் தந்தை என்று இருவரையும் குறிப்பிடலாம்.சர் ஜார்ஜ் பார்லோ பிரபு (1805-1807)
வெல்லெஸ்லியை அடுத்து மீண்டும் காரன்வாலிஸ் பதவிக்கு வந்தாலும் சில மாதங்களில் அவர் இறந்தால் ஜார்ஜ் பார்லோ கவர்னர் ஜெனரலாக 1805ல் பதவியேற்றார். ஜார்ஜ் பார்லோவின் கொள்கை தலையிடாக் கொள்ளை ஆகும். இராணுவச் செலவுகளைக் குறைத்து கம்பெனியின் பற்றாக்குறையை நீக்கி உபரி வருவாய் ஏற்பட வழிவகுத்தார். ஜார்ஜ் பார்லோவின் ஆட்சிக்காலத்தில் தான் 1806ம் ஆண்டு வேலூர் கலகம் நடைபெற்றது. வேலூர் கலகத்தின் போது சென்னையில் கவர்னராக இருந்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு ஆவார்.மிண்டோ - I (1807-1813)
இவரது ஆட்சியின் போது தான் 1807 முதல் 1809 வரையிலான சென்னை கலகம் நடைபெற்றது. இதனை வெற்றிகரமாக முதலாம் மிண்டோ பிரபு அடக்கினார்.இரஞ்சித் சிங் ஆட்சி (1792-1839)
18ம் நூற்றாண்டில் முகலாயர் வீழ்ச்சிக்குப் பிறகு பஞ்சாபில் சீக்கியர் எழுச்சி தோன்றியது. 1761ல் அகமது ஷா அப்தாலி இந்தியா மீது படையெடுத்த வந்தபோது சீக்கியர்கள் அவரை எதிர்த்து தோல்வியடைந்தனர் ஆப்கானிய அரசர்களிடமிருந்து பஞ்சாபைக் கைப்பற்றி பஞ்சாபை 12 மிசில்கள் எனப்படும் பகுதிகளாகப் பிரித்து கூட்டாட்சியை எற்படுத்தியவர்பகள் சீக்கியர்கள் ஒவ்வொரு மிசில்சுக்கும் மிசில்தார் தலைவராக இருந்தார். நாளடைவில் அவர்களிடையே தோன்றிய ஆதிக்கப் போட்டியில் இறுதியாக மிசில்களை ஒன்றுபடுத்தி தேசிய அரசை ஏற்படுத்தியவரே இரஞ்சித் சிங் ஆவார். இரஞ்சித் சிங் சகர்சாக்கியா என்ற மிசில் அமைப்பைப் சேர்ந்தவர். 1780ல் குஜரன்வாலா என்ற இடத்தில் இவர் பிறந்தார் இரஞ்சித் சிங்குக்கு இராஜா என்ற பட்டத்தை ஆப்கானிய அரசர் அமீர்சாமன் ஷா அளித்தார். 1802ல் இரஞ்சித் சிங் அமிர்தசரஸ் கோட்டையைக் கைபற்றியது. சீக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவமாகும் 1809ல் சார்லஸ் மெட்கா‡ப் என்ற ஆங்கிலேயரின் தூதினால் ஆங்கிலேயருடன் அமிர்தசரஸ் உடன்படிக்கையை இரஞ்சித் சிங் மேற்கொண்டார். அமிர்தசரஸ் உடன்படிக்கையின்படி சட்லெஜ் நதியே ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கமான இடைப்பட்ட எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது 1818ல் மூல்தான் பகுதிகளையும், 1849ல் காஷ்மீரையும், 1823ல் பெஷாவர் பகுதிகளையும் இரஞ்சித் சிங் கைப்பற்றி இணைத்துக் கொண்டார். 1831ல் வில்லியம் பெண்டிங் ஒரு தர்பார் நடத்தியபோது ரஞ்சித் சிங்கிற்கு அழைப்பு விடுக்கபட்டு அங்கு வருகை தந்த இரஞ்சித் சிங்கை அவரே நேரடியாக சென்று வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது. 1839ல் இரஞ்சித் சிங் மறைந்தார். சீக்கிய இனத்தை ஒன்றுபடுத்திப் புதிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்திய இரஞ்சித் சிங் பஞ்சாப் சிங்கம் என்று குறிப்பிடப்படுகிறார். இரஞ்சித் சிங்கின் ஆட்சியில் தனது நாட்டை 4 மாநிலங்களாகப் பிரித்திருந்தார். ஒவ்வொரு மாநிலமும் சுபாக்களாகவும், சுபாக்கள் பல பர்கானாக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சராசரியாக ஐந்தில் இரு பங்கை அரசு வரியாக இரஞ்சித் சிங் விதித்தார்.ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813-1823)
மிண்டோவுக்கு அடுத்து பதவியேற்ற ஹேஸ்டிங்ஸ் காலத்தில் தான் நேபாளப் போர், பண்டாரிகள் ஒழிப்பு, மூன்றாம் மராத்தியப் போர் ஆகியவை நடந்தேறின. 1814 முதல் 1816 வரை நடைபெற்ற நேபாளப் போரில் கூர்க்கர்களிடம் துவக்கத்தில் ஆங்கிலேயர் பின்வாங்க நேரிட்டாலும் ஆங்கிலேயத் தளபதி ஆக்டர்லோனி ஆல்மோராவில் கூர்க்கர்களைத் தோற்கடித்ததுடன், சகாலி உடன்படிக்கை (1816) செய்து போரினை முடிவுக்கு கொண்டு வந்தார். மராத்திய படைகளிலிருந்து விலகிய பிண்டாரிகள் என்ற இனத்தினர் கொள்ளையிடுதல், தீ வைத்தல் போன்ற சமூக கேடுகளில் ஈடுபட்டு வந்தனர். பிண்டாரிகளை 1816 முதல் 1818 வரையில் ஒழிக்க ஹேஸ்டிங்ஸ் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இவரது காலத்தில் 1817 முதல் 1819 வரை மூன்றாம் மராத்தியப் போர் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலேயப் படைகள் பெரு வெற்றி பெற்றன. 1822ல் சென்னையின் ஆளநரான சர் தாமஸ் மன்ரோ என்பரால் இரயத்வாரி முறை சென்னையில் கொண்டு வரப்பட்டது. 1799ல் கொண்டு வரப்பட்ட பத்திரிக்கைத் தணிக்கை சட்டத்தை ஹேஸ்டிங்ஸ் இரத்து செய்தார். சமாச்சார் தர்பண் என்ற வங்காள மொழி வாரப்பத்திரிக்கை இவர் காலத்தில் தான் தொடங்கப்பட்டது. இந்திய மொழியில் வெளிவந்த முதல் செய்தித்தாள் இதுவே ஆகும்.வில்லியம் பெண்டிங் பிரபு (1828-1835)
1803 முதல் 1807 வரை சென்னையில் கவர்னராக வில்லியம் பெண்டிங் பிரபு பணியாற்றி உள்ளார். வேலூர் கலகத்தின் போது கம்பெனியார் இவரை திரும்ப அழைத்துக் கொண்டார். மனிதாபிமானம் மிக்க பயன்பாட்டுக் கொள்ளையை ஆதரித்தவர் பெண்டிங் பிரபு ஆவார். இந்திய அரசுகளின் விவகரங்களில் தலையிடாக்கொள்கையைப் பின்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. அரசின் நலன் ஆளப்படும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டது என்ற கொள்கையுடன் செயலாற்றிய அறிவாற்ந்த முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் பிரபுவே ஆவார். சதி எனும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை 1829-ல் டிசம்பர் நான்காம் நாள் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றி ஒழித்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு ஆவார். சதி ஒழிப்பில் இராஜாராம் மோகன்ராய் இவருக்குப் பெரிதும் துணை நின்றார். 1830ல் சென்னை, பம்பாய் மாநிலங்களிலும் இச்சட்டம் பின்பற்றப்பட்டது. முதன் முதலாக இச்சட்டம் வங்காளத்தில் தான் இயற்றப்பட்டது. உயிர் பலியிடுதல் மற்றும் சிசுக்கொலையை ஒழிக்கவும் சட்டமியற்றினார். சிசுக்கொலை பற்றிய சட்ட விதிகள் பல எற்கனவே இயற்றப்பட்டிருந்தாலும் அந்த விதிகளை கண்டிப்பாக நிறைவேற்றிய பெருமை வில்லியம் பெண்டிங் மற்றும் ஹார்டிஞ்சு பிரபு ஆகியோர்களையே சாரும். தக்கர்கள் என்று (சுருக்கு கயிற்றால் கொல்பவர்கள்) கொள்ளைக் கூட்டத்தினரை(1829-35) மேஜர் ஸ்லீமன் என்பவரின் துணை கொண்டு முற்றிலும் ஒழித்தார். எனவெ ஸ்லீமன் தக்கி ஸ்லிமன் என்று அழைக்கபட்டார். மத்தியப் பிரதேசத்திலுள்ள ஜபல்பூரில் தொழிற் கூடம் என்று ஏற்படுத்தப்பட்டு தக்கர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிண்டாரிகளை ஹேஸ்டிங்ஸ் பிரபு ஒழித்ததற்கு நிகராக பெண்டிங்கின் தக்கர் ஒழிப்பைக் குறிப்பிடுவர். கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மெக்காலே பிரபுவின் உதவியுடன் 1835-ல் மார்ச் 17ம் நாள் ஆங்கிலம் இந்தியாவின் அலுவலக மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் புகுத்தப்பட்டது. இதற்கு முன்பு வரை பாரசீகமே அலுவலக மொழியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய அரசினர் கீழ்நோக்கிப் பரவுதல் என்ற கல்விக் கொள்கையைப் பின்பற்றினார். 1854-ல் வெளியான சார்லஸ் உட் கல்விக் கொள்கையான உண்மை கல்வியை மக்களுக்கு வழங்க வழி செய்தது. சார்லஸ் உட் அறிக்கை இந்தியாவின் அறிவூட்டும் பட்டயம் என்று பாராட்டப்பட்டது. இதன்படி கல்வி பரப்புதல் மேலைநாட்டு கல்வி கற்ற இந்தியரின் பொறுப்பில் விடப்பட்டது. 1835-ல் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. ஆக்ரா மாநிலம் 1834-ல் தோற்றுவிக்கப்பட்டது. சிம்லா, உதக மண்டலம், டார்ஜிலிங் முதலிய மலைவாசஸ்தலங்களை சீரமைப்பதில் பெண்டிங் பெரிதும் அக்கரை காட்டினார். சீக்கிய மன்னரான இரஞ்சித் சிங்கோடு பெண்டிங் பிரபு நல்லுறவு கொண்டிருந்தார். இருவரும் 1831ல் நிரந்தர நட்புறவு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டார். 1832ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிக் கப்பற் செலவு உடன்படிக்கை (நாவாய் உடன்படிக்கை) ஆங்கிலேயரின் வாணிபம் தழைப்பதற்கு வழி வகுத்தது. 1833 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் இரவது காலத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வில்லியம் கோட்டை (வங்காள) கவர்னர் ஜெனரலாக இருந்தவர் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் வங்காள கவர்னர் என்னும் பெயர் பெற்றார். இந்த மாறுதல் 1833ல் இருந்து அமலாயிற்று. ஆகவே வில்லியம் பெண்டிங் பிரபுவே முதல் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் வங்காள கவர்னர் ஆவார். அவரே வங்காள கவர்னராகவே தொடந்து செயல்பட்டார். இவருக்கு இந்தச் சட்டத்தின்படி இந்தியா முழுவதற்குமான சட்டங்கள் செயயும் உரிமை அளிக்கப்பட்டது. பம்பாய், சென்னை கவர்னர்கள் ஆட்சி மீதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமைகளையும் பெற்றார். 1833ம் ஆண்டு சட்டத்தின்படி கவர்னர் ஜெனரல் சபைக்கு புதியதாக ஒரு உறுப்பினர் சேர்க்கப்பட்டார். அவர் சட்ட உறுப்பினர் ஆவார். புகழ்பெற்ற மெக்காலே பிரபு முதன் முதல் சட்ட உறுப்பினராக பதவியேற்றார். வில்லியம் பெண்டிங் பிரபுவின் காலத்திலிருந்து தான் இந்தியர்களையும் உதவி மாஜிஸ்திரேட்டுகளாகவும், கீழ்நிலை நீதிபதிகளாகவும் நியமிக்கும் மரபு தோன்றியது. இந்தியாவில் இந்தியர்கள் உயர்பதவி வகிக்கத் தகுதியற்றவர்கள் எனக் கருதி காரன்வாலிஸ் பிரபு அனைத்து உயர்பதவிகளையும் ஐரோப்பியர்களுக்கே அளித்தார். ஆனால் வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியர்களை உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அரசின் செலவைக் குறைப்பதில் வெற்றி கண்டார். 1829ல் மாநில மேல்முறையீட்டு நீதிமன்றங்களையும், சுற்றுமுறை நீதிமன்றங்களையும் பெண்டிங் ஒழித்தார். புதியதாக வடமேற்கு மாகாணத்தைத் தோற்றுவித்து அலகாபாத்தில் அதற்கென ஒரு வருவாய் வாரியத்தைத் தோற்றுவித்தார். 1831ல் நகரி என்னுமிடத்தில் பொது மக்கள் நடத்திய கிளர்ச்சியின் காரணமாக 1831ல் மூன்றாம் கிருஷ்ணராஜா என்ற மைசூர் அரசைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மைசூரை வில்லியம் பெண்டிங் இணைத்துக் கொண்டார்.எல்லன்பரோ (1842 -1844)
சிந்து பகுதியை 1843-ல் ஆங்கிலேயப் பேரரசுடன் இணைத்த கவர்னர் ஜெனரல் எல்லன்பரோ ஆவார் 1843 ஆக்டோபரில் அடிமை நிலையை எல்லன்பரோ ஒழித்தார். வருவாயை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இலாட்டரிகளை நிறுத்தினார்.ஹார்டிஞ்சு பிரபு (1844-1848)
எல்லன்பரோவிற்குப் பிறகு வந்த ஹார்டிஞ்சு பிரபு காலத்தில் தான் முதல் சீக்கியப் போர் 1845 முதல் 1846 வரை நடைபெற்றது. சீக்கியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமிடையே நடைபெற்ற முதல் ஆங்கிலேய சீக்கியப் போர் ஆங்கிலேயரின் பெரு வெற்றிக்குப்பிறகு 1846ல் லாகூர் உடன்படிக்கையின் படி முடிவுற்றது. இந்த வெற்றியின் மூலம் காஷ்மீரை பெற்ற ஆங்கிலேயர்கள் அதை ஒரு கோடிக்கு குலாப் சிங் என்பவருக்கு விற்றனர். வில்லியம் பெண்டிங் துவக்கி வைத்த சதி ஒழிப்புப் பணியை ஹார்டிஞ்சு முடித்து வைத்தார். நேபாளத்தைத் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சதி என்னும் கொடிய வழக்கம் மறைந்தது. ஒரிசாவில் கோண்ட் இன மக்களிடையே நிலவிய மனித உயிர்களை பலியிடும் வழக்கத்தையும் ஹார்டிஞ்சு தடை செய்தார். தாஜ்மகாலை நல்ல நிலையில் பராமரிக்க இவர் ஏற்பாடுகள் செய்தார்.டல்ஹெளசி பிரபு (1848-1858)
வாரிசிழப்புக் கொள்கையை இந்தியாவில் புகுத்தினார் டல்ஹெசியின் வாழ்க்கை வரலாற்றை று.று.ர்ரவெநச என்பவர் எழுதியுள்ளார் வாரிசு இழப்புக்கொள்கையின் படி இந்து அரசர்கள் ஆங்கிலேயரின் அனுமதியின்றி சுவீகாரம் செய்யக்கூடாதென்றும், அவ்வாறு தத்து எடுப்பவர்களின் வார்pசுகள் சட்டப்பூர்வ வாரிசாகக் கருதப் படமாட்டார்கள் என்றும் டல்ஹெசி அறிவித்தார். அத்தகையோரின் நாடுகள் ஆங்கிலேயருடன் இணைக்கப்படவும் வழி செய்தார். இக்கொள்கையின் மூலம் சதாரா (1848), ஜெய்ப்பூர், சம்பல்பூர், உதய்பூர், நாக்பூர் (1853), ஜான்சி (1853) அகிய பகுதிகள் இணைக்கப்பட்டன. இக்கொள்கையினால் பாதிக்கப்பட்ட மன்னர்கள் 1857-ல் நடைபெற்ற புரட்சியின் போது ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்தனர் டல்ஹெளசி காலத்தில் தான் இந்தியாவில் முதன்முறையாக 1853 ம் ஆண்டு மும்பையிலிருந்து தானா வரை 20 மைல் (36 கி.மீ) தூரத்திற்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டது. 1855-ல் ஹெளராவிலிருந்து ராணிகஞ்ச் என்னுமிடம் வரை இருப்புபாதை அமைக்ப்பட்டது. 1856-ல் சென்னையிலிருந்து அரக்கோணம் வரையிலான இருப்புபாதை அமைக்கப்பட்டது. இத்தகைய செயல்களால் டல்ஹெசி இந்திய இருப்புப்பாதைத் திட்டத்தின் தந்தை எனப்படுகிறார். அஞ்சல் முறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கி செம்மைப்படுத்தினார் டல்ஹெசி. ஒரே சீரான அரையணா விலையுள்ள கடித முறையை நாடு முழுவதும் அமல்படுத்தினார். அக்கடிதங்களுக்கு முன்னதாக தபால் தலைகள் ஒட்டும் முறையையும் கொண்டு வந்தார். டல்ஹெசியின் காலத்தில் கங்கைக் கால்வாய் வெட்டப்பட்டது. கொல்கத்தாவையும் பெஷாவரையும் இணைக்கும் கிராண்ட் டிரங்க் எனப்படும் பெருவழிச்சாலை அமைக்கப்பட்டது. படைத்துறையின் கீழ் பொதுப்பணித்துறை இயங்கியதால் போதிய கவனம் செலுத்த டல்ஹெசி பொதுப்பணித்துறையை தனியே உருவாக்கினார். பொதுப்பணித்துறையை டல்ஹெசி உருவாக்கியதால் பொதுப்பணித்துறையின் தந்தை என்று அழைக்கப்பட்டார் ஆட்சி நிர்வாகத்தை இலாக்கலாகப் பகுத்துப் பொறுப்புக்களை பிரித்துக் கொடுத்து ஆட்சியை டல்ஹெசி செம்மைப் படுத்தினார். நீதி மற்றும் நிர்வாகத் துறைகளை மறுபடியும் இவர் ஒன்றுபடுத்தினார். (காரன்வாலிஸ் காலத்தில் அவை பிரிக்கப்ட்டன) சிம்லாவை இந்தியாவின் கோடை காலத் தலைநகராக டல்ஹெசி அறிவித்தர். இந்திய இராணுவத்தின் தலைமைச் செயலகம் சிம்லாவிற்கு மாற்றப்பட்டது. 1853-1856 வரையிலான கால கட்டத்தில் சுமார் 6400 கி.மீ தூரத்திற்கு தந்தி இணைப்புகள் கொல்கத்தா, பெஷாவர், மும்பை, சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்ட்டன. முதல் தந்தி இணைப்பு கல்கத்தாவிற்கும் ஆக்ராவிற்கும் இடையில் 1853-ல் நடைபெற்றது. 1856-ல் விதவைகள் மறுமணச்சட்டம் குறித்த கருத்துக்களை டல்ஹெசி ஏற்றுக்கொண்டார். கானிங் பிரபு காலத்தில் இதில் நடைமுறைச் சட்டமாக மாறியது. 1853-ல் ஜேம்ஸ் தாம்சன் என்பவர் ஏற்படுத்திய தாய்மொழிக் கல்வி பயிற்சித் திட்டத்தை டல்ஹெசி அறிமுகம் செய்தார். இதற்கு தாம்சனிய முறை என்று பெயர். 1854-ல் சர் சார்லஸ் உட் அறிக்கையின்படி டல்ஹெசி கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தினார். அதன்படி ஒவ்வொரு மாகாணத்திலும் பொதுக்கல்வித் துறை அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாவது பர்மிய போர்(1852), இரண்டாம் சீக்கிய போர் (1848 முதல் 1849 வரை) ஆகியவை அவர் காலத்தில் நடந்தேறின. 1853ம் ஆண்டு பட்டயச் சட்டத்தின்படி வங்காளத்திற்கு தனிப்பட்ட ஒரு லெப்டினன்ட் கவர்னர் நியமிக்கப்பட்டார். அதனால் கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் ஜெனரல் மட்டுமானார். அவருக்கு வங்காள ஆட்சி பொறுப்பு குறைந்தது. ஆகவே டல்ஹெசியே முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆவார். இதுவரை இருந்தவர்கள் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் வங்காள கவர்னர் என்று அறியப் பெற்றனர் வங்காள லெட்டினன்ட் கவர்னரை நியமிக்கும் உரிமை கவர்னர் ஜெனரலுக்கு தரப்பட்டது. வங்காளப்படையின் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து மீரட்டிற்கு இவரது காலத்தில் மாற்றப்பட்டது. படையின் தலைமையிடத்தை சிம்லாவிற்கு மாற்றினார். ரூர்க்கியில் (ஒரிசா) பொறியியல் கல்லூரி ஒன்றை டல்ஹெசி அமைத்தார். இவர் தொழில் நுட்பக் கல்வியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களையும், நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்க தொல்பொருள் துறையை உருவாக்கினார்.இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்