தமிழக வரலாறும் பண்பாடும் வினா விடை

தமிழக வரலாற்றை எத்தனை காலங்களாக வரையறுத்துக் கொள்ளலாம்?
ஆறு
(வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டிய சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம், பிற்காலம்)
இலக்கியங்களும் புராணங்களும் அளிக்கும் சான்றை விடக் கீழ்க்கண்டவற்றுள் எது அளிக்கும் சான்று நம்பத் தகுந்தவையாக உள்ளது?
புதைபொருள்கள், கல்வெட்டுகள், நாணயங்கள்
தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் யார் காலத்தில் தொடங்குகின்றன?
பல்லவர் காலத்தில்
ஹரப்பா எழுத்துக்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் தொடர்பு உண்டென்று கருதியவர்?
ஹீராஸ் பாதிரியார்
எக்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்த மக்கள் பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் பிணங்களை புதைக்கும் வழக்கத்தை மேற்கொண்டு இருந்தனர்?
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்
தமிழகத்தில் காணப்படும் இரும்பு கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மண்பாண்டங்களும் புதைக்கப்பட்ட புதைகுழிகள் வேறு எங்கு காணப்படுகின்றன?
மேற்கு ஆசிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள்
எந்தெந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களில் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னுமிடத்திலும் பாலஸ்தீனத்திலுள்ள “காஸா, ஜெரார்” என்னுமிடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களைப் போலவே காணப்படுகின்றன?
ஆதிச்சநல்லூர், புதுச்சேரி
அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில் கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டு _________ நாணயங்கள் கிடைத்துள்ளன.
ரோமபுரி
தமிழகத்திற்கும் ரோமபுரிக்கும் இடையே நடைபெற்று வந்த செழிப்பான வணிகத்திற்கு சான்று பகர்வது எது?
ரோமபுரி நாணயங்கள்
எரித்திரியக் கடலின் பெரிப்ளுஸ் - கிரேக்க நூல்
சங்ககாலம் முடிவடைந்த பிறகு, “தமிழகத்தில் என்ன நேர்ந்தது?” என எத்தனை ஆண்டு காலம் அறியமுடியவில்லை?
300 ஆண்டுகாலம்
சங்க காலத்தை அடுத்த இருண்டகாலமான 300 ஆண்டு காலத்தில் களப்பிரரால் ஏற்பட்ட அரசியல் மாறுதலுக்கு சான்று பகர்வன எவை?
வேள்விக்குடிச் செப்பேடுகள்
நடுகற்கள் ஆங்காங்கு தமிழகத்தில் இருந்தனவென்றும் மக்கள் அவற்றை வழிபட்டு வந்தனர் (பண்பாடுடன்) என்றும் கூறுவன எவை ?
சங்க இலக்கியங்கள்
பல்லவர் காலத்திய கல்வெட்டுகள் எந்நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டவை?
7, 8 ஆம் நுற்றாண்டுகளில்
எந்நூற்றாண்டிலிருந்து கல்வெட்டு சாசனங்கள் நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் கிடைத்துள்ளன?
7 ஆம் நூற்றாண்டிலிருந்து
7 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான பண்டைய பாண்டியர் வரலாறும் களப்பிரர்களைப் பற்றிய சில தகவல்களும் நம் கைக்குக் கிடைக்கக் காரணமான செப்பேடுகள் எவை?
வேள்விக்குடி செப்பேடுகளும், பெரிய சின்னமனூர் செப்பேடுகளும்
யார் காலத்தில் சமண, பௌத்த சமயங்கள் தமிழகத்தில் மிகப் பெருமளவு வளர்ச்சியுற்றன?
களப்பிரர் காலத்தில்
மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றைத் தோற்றுவித்து அதன் மூலம் சமண சமய இலக்கியங்களைத் தமிழில் பெருக்கி வளமூட்டிய சமண முனிவர் யார்?
வச்சிரநந்தி
சோழ நாட்டில் பௌத்த விகாரைகளை அமைத்தும் பௌத்த சமய நூல்களைத் தோற்றுவித்தும் பௌத்த சமயத்தின் வளர்ச்சியை ஊக்குவித்த பௌத்த மன்னன் யார்?
அச்சுத விக்கந்தன்
கல்வெட்டுகள் தமிழகத்தில் எந்த நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன?
ஏறத்தாழ கி.மு.2ம் நூற்றாண்டு
சோழர் காலத்தில் கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?
உத்திரமேரூர் கல்வெட்டு
சோழ மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
விஜயாலய சோழன்
சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது விழா எப்பொழுது நடைபெற்றது?
25 செப்டம்பர் 2010
மெய்கண்டார் இயற்றிய நூல் எது?
சிவஞானபோதம்
உலகளந்த சோழன் என்று புகழப்படுபவர் யார்?
முதலாம் இராஜராஜன்
பிற்கால பாண்டிய மரபு றாரால் எழுச்சி பெற்றது?
முதலாம் சடையவர்மன்
பிற்கால பாண்டியர்களைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு எது?
கோப்பெருஞ்சிங்கானின் வயலூர் கல்வெட்டு
பாண்டியர்களின் உள்ளாட்சி முறையைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?
மானூர் கல்வெட்டு
திருவைக்குண்டம் பெருமாள் கோயில் கோபுரத்தைத் கட்டியவர் யார்?
சுந்திரப்பாண்டியன்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரம் யாரால் கட்டப்பட்டது?
கிருஷ்ணதேவராயர்
பாமினி அரசின் தலைநகர் எது?
குல்பர்க்கா
63 நாயண்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அருளியவர் யார்?
சேக்கிழார்
எட்டாம் திருமுறையான திருவாசகம் யாரால் இயற்றப்பட்டது?
மாணிக்கவாசகர்
“பித்தாபிறை சூடி பெருமனே அருளாளா” யாருடையது?
சுந்தரர்
புனிதவதி என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
காரைக்கால் அம்மையார்
மாறவர்மன் அரிகேசரியின் மனைவி பெயர் என்ன?
மங்கையர்கரசியார்
சுந்தரரரின் தாயார் பெயர் என்ன?
இசை ஞானியார்
தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பக்திநெறியின் மூலம் பாலமாக திகழ்ந்தவர் யார்?
இராமானந்தர்
தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு எது?
காவிரி
பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு அழைத்தனர்?
போலிகார்
தமிழகத்தில் பாளையக்காரர்கள் முறையை அறிமுகம் செய்தவர் யார்? விஸ்வநாத நாயக்கர்
யூசப்கானிற்கும் பூலித்தேவருக்கும் இடையே எத்தனை மாதம் தாங்குதல் நீடித்தது?
2 மாதங்கள்
பூலித்தேவரின் படைபிரிவுகளில் ஒற்றனுக்குத் தலைமையேற்றிருந்தவர் யார்?
ஒண்டிவீரன்
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக யாருடைய பாதுகாப்பில் வாழ்தனர்?
கோபால நாயக்கர் (திண்டுக்கல்)
வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தையார் பெயர்?
ஜெகவீரபாண்டியன்
இந்திய நாட்டில் பிரிட்டிஷ் காலணியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் அரசி யார்?
வேலுநாச்சியார்
பானெர்மென் கட்டபொம்மனை சரணடையுமாறு யாரை அனுப்பினார்?
இராமலிங்கர்
சிவசுப்ரமணியனரை எங்கு தூக்கிலிட்டனர்?
நாகலாபுரம். செப்டம்பர் 13, 1799
வீரபாண்டிய கட்டபொம்மனை எங்கு தூக்கிலிட்டனர்?
கயத்தாரு கயத்தாறு
தென்னிந்தியப் புரட்சி என்று அழைக்கபடுவது?
மருது சகோதர்களின் கலகம்
“ஓடாநிலை” கொரிலாப் போர்முறையை கையாண்டவர் யார்?
தீரன் சின்னமலை
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்